இலங்கையில் ஊழல் உயர்மட்டத்திற்கு சென்றிருப்பதாகவும் ஆட்ட நிர்ணயத்தை தடுப்பதில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ICC) தோல்வி அடைந்திருப்பதன் மூலம் கிரிக்கெட் ஆட்டம் தரக்குறைவுக்கு உள்ளாகி இருப்பதாகவும் இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்த அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டை மறுக்கும் குலதுங்க, லொக்குஹெட்டிகே
கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகத்..
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட அல் ஜெஸீரா ஆவணப்படத்தில் கூறப்பட்டதற்கு அப்பால் இலங்கையில் கிரிக்கெட் ஊழல் சென்றுவிட்டதாகவும் தற்போது அரசில் அமைச்சராக இருக்கும் ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ரணதுங்க, ‘நீண்ட காலத்திற்கு முன்னரே இது நடந்திருக்க வேண்டும்‘ என்றும் தெரிவித்தார்.
‘(இலங்கையில்) இது உயர் மட்டத்தில் இருக்கும் ஒரு விடயம். அவர்கள் சின்ன மீனையே பிடித்திருக்கிறார்கள். வழக்கம்போல மிகப்பெரிய மீன் தப்பித்துவிடும்‘ என்றார் அவர்.
இலங்கை வீரர் ஒருவர் மற்றும் மைதான பராமரிப்பாளர் ஆடுகளத்தை சேதப்படுத்தும் சதியில் ஈடுபட்டிருப்பதாக, வெளியாகி இருக்கும் ஆவணப்படம் குற்றம் சாட்டுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஸ்பொட்–பிக்சிங் (Spot-fixing) ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றிருப்பதாகவும் அந்த ஆவணப்படம் குற்றம் சுமத்துகிறது.
அரசியல்வாதியும் வர்த்தகருமான திலங்க சுமதிபாலவின் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபை மீதான முந்தைய குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டிய ரணதுங்க, ‘ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவு மீது நான் அதிகம் அதிருப்தி அடைந்துள்ளேன்‘ என்று தெரிவித்தார்.
1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியை வழிநடத்திய 54 வயதான ரணதுங்க, சுமதிபால சூதாட்டத்தில் ஈடுபட்டு ஐ.சி.சி. விதிகளை மீறி இருப்பதாக கடந்த காலத்திலும் குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை சுமதிபால மறுத்துள்ளார்.
‘இலங்கையில் என்ன நடக்கிறது என்று அவர்களால் பார்க்க முடியாவிட்டால்… அவர்கள் இந்த ஊழல் தடுப்பு பிரிவில் தொடர்ந்து இருக்கக் கூடாது‘ என்று ரணதுங்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உயர் மட்டத்தில் இருந்து உதவி வராவிட்டால் அல் ஜெஸீரா ஆவணப்படத்தில் தொடர்புபட்ட இலங்கையர்களால் டெஸ்ட் போட்டியின் முடிவை மாற்ற முடிந்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காலி மைதான பராமரிப்பாளர் தரங்க இந்திக்க மற்றும் மாவட்ட பயிற்சியாளர்களில் ஒருவரான தரிந்து மெண்டிஸ் ஆகியோரை சுட்டிக்காட்டி, ‘அவர்கள் சின்ன மீன்கள்‘ என்று ரணதுங்க குறிப்பிட்டார்.
‘அந்த உயர் மட்டத்தில் இருப்பவர்களின் உடந்தை இன்றி அவர்களால் அதனை செய்திருக்க முடியாது‘ என்றும் கூறினார்.
காலி ஆட்ட நிர்ணய விவகாரம் CID விசாரணைக்கு
இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும்..
உலகக் கிண்ண இறுதிப் போட்டி
அல் ஜெஸீரா இரகசியமாக மேற்கொண்ட இந்த ஆவணப்படத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இந்திக்க மற்றும் மெண்டிஸ் ஆகியோர் தமது பணிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இது பற்றி இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காலி மைதான பராமரிப்பாளர் ஆடுகளத்தை சேதப்படுத்தும் நிலையில் இருந்தால், ‘இதில் உயர் மட்டத்தில் உள்ள நபர் ஒருவர் தொடர்புபட்டிருக்கிறார். அவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். (நேரடியாக) தொடர்புபட்டவர் மாத்திரமின்றி அவரும் இடைநிறுத்தப்பட வேண்டும்‘ என்று ரணதுங்க கூறினார்.
ஊழல் குற்றச்சாட்டுகளால் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் குறைந்து வருவதாக ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ஐ.சி.சி. மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
‘ஊழல் தடுப்பு பிரிவு மிக பலவீனமாக உள்ளது. அவர்கள் தமது சில அதிகாரங்களை பயன்படுத்துவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட் மிக மோசமாக கீழே தள்ளப்படுவதற்கு ஒரு காரணமாக அது இருப்பதாக நான் நினைக்கிறேன்.
அவர்கள் (ஐ.சி.சி.) கடுமையான முடிவுகளை எடுத்து ஒரு மிகப்பெரிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்‘ என்று ரணதுங்க மேலும் கூறினார்.
2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கறைபடிந்திருப்பதாக ரணதுங்க கடந்த ஆண்டு சந்தேகங்களை வெளிப்படுத்தி இருந்தார்.
‘ஐ.சி.சி. இது பற்றி விசாரிக்காத நிலையிலும் இலங்கை கிரிக்கெட் சபை விசாரிக்காத நிலையிலும் நாம் தொடர்ந்து சந்தேகத்துடன் பார்க்க இடம் விட்டிருக்கிறார்கள்‘ என்று கூறிய அவர், மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை ஆறு விக்கெட்டுகளால் தோற்றது தொடர்ந்தும் வேதனைக்குரியதாகவே உள்ளது என்று தெரிவித்தார்.
தினேஷ் சந்திமாலின் சதத்தோடு பயிற்சிப் போட்டியின் முதல் நாளில் இலங்கை ஆதிக்கம்
மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்…
அந்த இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ஓட்டங்களை பெற்றதோடு நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோது இலங்கை வலுவான நிலையில் இருந்தது. இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு காரணமாக இந்தியா அந்த போட்டியை அதிரடியாக திசை திருப்பியது.
இலங்கை போட்டியை விட்டுக்கொடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்பியபோதும், கடந்த ஆண்டு ரணதுங்க அது பற்றி கூறும் வரை எந்த ஒரு விசாரணைக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
தரவரிசையில் கடைசி இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 3-2 என வேதனைக்குரிய தோல்வியை சந்தித்தது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ரணதுங்க கூறினார்.
ஊழல் தடுப்பு விசாரணை ஒன்றுக்கு ஒத்துழைப்பு அளிக்க தவறியதை அடுத்து இலங்கை அதிகாரி ஒருவரான ஜயானன்த வர்ணவீரவுக்கு 2016இல் ஐ.சி.சி. மூன்று ஆண்டு தடை விதித்தது.
ஐ.சி.சி. விசாரணையாளர்களுடனான நேர்காணலுக்கு சமூகமளிக்க தவறிய முன்னாள் டெஸ்ட் வீரரான அவர், ஆட்ட நிர்ணயத்தில் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் உள்ளூர் போட்டிகளில் இரண்டு ஆண்டு தடைக்கு முகம்கொடுத்தார்.
இலங்கை வீரர்கள் மற்றும் நடுவர்கள் கடந்த காலங்களில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்தபோதும், தடைக்கு உள்ளான உயர்மட்ட அதிகாரியாக வர்ணவீர உள்ளார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<