சலாஹ் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம்

649
Image Courtesy - AFP

சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரியெல் மெட்ரிட் அணியிடம் தோல்வி அடைந்த லிவர்பூல் அணியின் நட்சத்திரம் முஹமட் சலாஹ்வுக்கு ஏற்பட்ட காயம் ‘தீவிரம் கொண்டது’ என்று அந்த அணியின் முகாமையாளர் ஜர்கன் க்ளொப் குறிப்பிட்டபோதும், அவர் உலகக் கிண்ணத்திற்கு உடல் தகுதி பெறுவார் என்று எகிப்து உறுதியாக நம்புகிறது.

ரியெல் மிட்ரிட்டுக்கு ஹட்ரிக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம்

க்ரேத் பேல் அடித்த அபார கோல்கள் மற்றும் பென்சமாவின் அதிஷ்ட கோல் மூலம் லிவர்பூல் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில்…….

ரியெல் மெட்ரிட் அணித்தலைவர் செர்ஜியோ ராமோஸுடன் பந்துக்காக போராடும்போது கிழே விழுந்து காயத்திற்கு உள்ளான சலாஹ் இறுதிப் போட்டியின் முதல் பாதி ஆட்டத்திலேயே கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த போட்டியில் ரியெல் மெட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இது ஒரு தீவிரமான காயம்என்று க்ளொப் குறிப்பிட்டுள்ளார்.  

அவர் எக்ஸ்ரே சோதனைக்காக மருத்துவமனை சென்றுள்ளார். அந்த காயம் தோள்பட்டை அல்லது கழுத்துப் பட்டை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கலாம். அதனை பார்க்க நன்றாக இல்லை என்றும் அவர் விபரித்துள்ளார்.  

சலாஹ், செர்ஜியோ ராமோஸுடன் பந்துக்காக போராடும்போது
Image Courtesy – AFP

எனினும், எகிப்து கால்பந்து சம்மேளனம் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சலாஹ்வின் “’தோள்பட்டை தசைநார்களில் சுளுக்குஎற்பட்டிருப்பதை எக்ஸ்ரே சோதனை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளது. இது நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் எதிர்வரும் ஜுன் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ண போட்டிக்கு அவர் உடல் தகுதி பெற்றுவிடுவார்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்திற்காக பயிற்சிக்கு திரும்பியுள்ள நெய்மார்

உலகக் கிண்ணத்தை முன்னிட்டு பிரேசில் அணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் நெய்மார் பயிற்சி முகாமுக்கு திரும்பியுள்ளார். வலது…….

எகிப்து இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் காலித் அப்த் அல் அஸிஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது, சலாஹ்வுக்கு இரண்டு வாரங்கள் சிகிச்சை தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சலாஹ் லிவர்பூலில் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின் இத்தாலியில் எகிப்து அணியுடன் இணைந்து கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.    

எதிர்வரும் ஜுன் 4 ஆம் திகதி அறிவிக்கப்படவிருக்கும் உலகக் கிண்ணத்திற்கான எகிப்தின் இறுதிக் குழாமில் சலாஹ் இடம்பெறுவார் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

லிவர்பூல் அணிக்காக இந்த பருவத்தில் 44 கோல்களை பெற்ற சலாஹ் உக்ரெய்ன் தலைநகரில் நடந்த சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியின் 26 ஆவது நிமிடத்தில் வைத்து இந்த சம்பவத்திற்கு முகம்கொடுத்தார்.

எனினும் சில நிமிடங்கள் கழித்தே அவர் மைதானத்தை விட்டு வெளியேறியதோடு அவருக்கு, பதில் வீரராக அடம் லல்லானா களமிறங்கினார்.  

கடந்த ஜுன் மாதம் ரோமா அணியில் இருந்து 15 மில்லியன் யூரோவுக்கு லிவர்பூல் அணியில் ஒப்பந்தமான 25 வயதுடைய சலாஹ் தனது முதல் பருவத்தில் சிறப்பாக செயற்பட்டார்.

இம்முறை பிரீமியர் லீக் தொடரில் அதிகபட்சமாக சலாஹ் 32 கோல்களை போட்டதோடு அவரது லிவர்பூல் அணி அந்த தொடரில் நான்காவது இடத்தை பிடித்தது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப படிக்க<<