உபாதைக்கு உள்ளாகியுள்ள கோஹ்லி சர்ரே அணியில் இணைவாரா?

229

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதுகு வலியால் அவதிப்படுகிறமையினால், அவர் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளதாக இந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்ரே அணியுடன் இணையும் விராட் கோஹ்லி

இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் கழகமான சர்ரே….

”மும்பை மிரர்” இன் இன்றைய செய்தியறிக்கைக்கு அமைய, கோஹ்லி முதுகு வலியால் அவதிப்படுகிறார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு தற்போதைக்கு சத்திர சிகிச்சை செய்ய தேவையில்லை என்றும் ஓய்வில் இருக்கும் படியும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அவ்வாறு இல்லாவிட்டால் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் அவரால் விளையாட முடியாமல் போகலாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ளும் முகமாக, இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட கோஹ்லி சர்ரே அணியுடன் ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களிலும் வெறும் 13.40 என்ற ஓட்ட சராசரியையே கோஹ்லி கொண்டிருந்தார். இதனை கருத்திற் கொண்டு இங்கிலாந்து ஆடுகளங்களில் தனது துடுப்பாட்டத்தை மேம்படுத்தும் முகமாகவே கோஹ்லி இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தீர்மானித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லி சர்ரே அணிக்கான போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் 14 ஆம் திகதி நடைபெற இருக்கும் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகிக்கொண்டார்.

ஐசிசி உலக பதினொருவர் அணியில் அப்ரிடி விளையாடுவது உறுதி

உலக பதினொருவர் அணிக்கு விளையாட உபாதையையும்…..

எவ்வாறிருப்பினும், கோஹ்லியின் இந்த உபாதை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ, சர்ரே கிரிகெட் வாரியமோ அல்லது கோஹ்லியோ உத்தியோகபூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பெங்களூர் ரோயல் செலேன்சர்ஸ் அணிக்காக அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய அவர் 48.18 என்ற சராசரியில் 530 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இன்னும் இரு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் இம்முறை தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் தற்போது 6 ஆம் இடத்தில் அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 T20 மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடர்களில் ஜூலை மாதம் விளையாடவுள்ளது.  அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் முதலாம் திகதி இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<