ஸ்பெயின், பெல்ஜியம் குழாம்களில் முன்னணி வீரர்கள் இல்லை

336

ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடருக்கான ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகளின் குழாம்களில் முன்னணி வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

வலுவான முன்கள வீரர்களுடனான ஆர்ஜன்டீன குழாம் அறிவிப்பு

ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கான 23 பேர் கொண்ட ஆர்ஜன்டீன …

திங்கட்கிழமை (21) அறிவித்த 23 வீரர்கள் கொண்ட ஸ்பெயின் குழாமில் செல்சி முன்கள வீரர் அல்வாரோ மொராடாவுக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோன்று, 28 வீரர்கள் கொண்ட குழாமை அறிவித்திருக்கும் பெல்ஜியம், அதில் ரோமா மத்திய கள வீரர் ராட்ஜா நாயிங்கோலனுக்கு இடம் வழங்கவில்லை. இதனை அடுத்து அவர் வருத்தத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

2010 பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணி, இம்முறை ஜுன் 15 ஆம் திகதி சொச்சியில் போர்த்துக்கலுக்கு எதிரான போட்டியுடன் தனது உலகக் கிண்ண பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. B குழுவில் இடம்பெற்றிருக்கும் அந்த அணி ஈரான் மற்றும் மொரோக்கோ அணிகளுடனும் மோதவுள்ளது.

ஸ்பெயின் பயிற்சியாளர் ஜுலன் லொபடிகியு அறிவித்திருக்கும் உலகக் கிண்ணத்திற்கான ஸ்பெயின் குழாத்தில், தனது முதல் ப்ரீமியர் லீக் தொடரில் சோபிக்க தவறிய மொராடா நீக்கப்பட்டு, முன்களத்திற்கு அட்லாண்டிகோ மெட்ரிட் கழகத்தின் டியாகோ கொஸ்டாவுடன் இயாகோ அஸ்பாஸ் மற்றும் ரொட்ரிகோ மொரேனோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

செல்சி அணிக்காக தனது முதல் பருவத்தில் ஆடிய 25 வயதான மொராடா 11 கோல்களை போட்டார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற எப்.. கிண்ண இறுதிப் போட்டியில் கிண்ணத்தை வென்ற செல்சி அணிக்கு கடைசி நேரத்தில் பதில் வீரராகவே இவர் களமிறங்கினார்.   

நடப்பு சம்பியன் ஜெர்மனியின் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ணத்தை வெல்லும் கோலை புகுத்திய ஜெர்மனி …

மொராடாவின் செல்சி அணி சக வீரர்களான மார்கஸ் அலொன்சோ மற்றும் செஸ்க் பப்ரேகாஸுடன் ஆர்சனல் பின்கள வீரர் ஹெக்டர் பெல்லெரினும் ஸ்பெயின் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் குழாமில் அனுபவ மத்தியகள வீரர் அன்ட்ரெஸ் இனியஸ்டா, இஸ்கோ உட்பட மொத்தம் பத்து வீரர்கள் ரியெல் மெட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே 28 வீரர்கள் கொண்ட உத்தேச உலகக் கிண்ண குழாமை அறிவித்திருக்கும் பெல்ஜியம் வரும் ஜுன் 4 ஆம் திகதி அதனை 23 வீரர்களுக்கு சுருக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

எனினும் ரோமா அணி சம்பியன்ஸ் லீக் அரையிறுதி வரை முன்னேறுவதற்கு உதவிய 30 வயதுடைய நாயிங்கோலன் அந்த அணியில் இடம்பெறவில்லை. நாயிங்கோலன் முக்கியமான வீரர் என்ற பெல்ஜியம் முகாமையாளர் ரொபர்டோ மார்டினஸ் மேலும் கூறும்போது, ராட்ஜா (நாயிங்கோலன்) தனது கழகத்தில் முக்கிய பங்காற்றுவது எமக்கு தெரியும். என்றாலும் எமது குழாத்தில் நாம் அவருக்கு அந்த பங்கை வழங்க முடியாதுஎன்றார்.  

தான் நீக்கப்பட்டது குறித்து சமூகதளத்தில் பதலளித்த நாயிங்கோலன், மிக தயக்கத்துடன் எனது சர்வதேச கால்பந்து வாழ்வு முடிவுக்கு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.  

பெல்ஜியம் குழாத்தில் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வீரர்களான மன்செஸ்டர் சிட்டியின் டுவோ கெவின் டி ப்ருயின் மற்றும் வின்சன்ட் கொம்பனி, செல்சி முன்கள வீரர் உடெக் ஹசார்ட் மற்றும் மன்செஸ்டர் யுனைடெட் முன்கள வீரர் ரொமேலு லுகாகு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நெய்மார் ரியல் மெட்ரிட் வருவது ‘பயங்கரமானது’ என்கிறார் மெஸ்ஸி

பார்சிலோனா அணியில் விளையாடிய தனது முன்னாள் சக வீரரான நெய்மார், தமது …

இங்கிலாந்து அணி இருக்கும் G குழுவில் இடம்பெற்றிருக்கும் பெல்ஜிய விரர்களில் 15 பேர் இங்கிலாந்து ப்ரீமியர் லீக் ஆடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியம் உலகக் கிண்ணத்தில் தனது முதல் போட்டியில் ஜுன் 18 ஆம் திகதி பனாமாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த குழுவில் துனீஷியாவும் இடம்பெற்றுள்ளது.     

ஸ்பெயின் குழாம்

கோல்காப்பாளர்கள்

டேவிட் டி கீ (மன்செஸ்டர் யுனைடெட்), பேபே ரீனா (நபோலி), கெபா அரிசபலகா (அத்லெடிக் பில்போ).  

பின்கள வீரர்கள்

ஜோர்டி அல்பா (பார்சிலோனா), நகோ மொன்ரியல் (ஆர்சனல்), அல்வாரோ ஒட்ரியோசோலா (ரியல் சொசிடாட்), நாகோ பெர்னாண்டஸ் (ரியெல் மெட்ரிட்), டானி கார்வஜால் (ரியல் மெட்ரிட்), கெரார்ட் பிகு (பார்சிலோனா), செர்ஜியோ ரமோர்ஸ் (ரியல் மெட்ரிட்), சீசர் அஸ்பிலிக்குடே (செல்சி).  

மத்தியகள வீரர்கள்

செர்ஜியோ புஸ்கெட்ஸ் (பார்சிலோனா), இஸ்கோ (ரியெல் மெட்ரிட்), தியாகோ அல்கன்டாரா (பயெர்ன் முனிச்), டேவிட் சில்வா (மன்செஸ்டர் சிட்டி), அன்ட்ரெஸ் இனியஸ்டா (பார்சிலோனா), சாவுல் நிகுயிஸ் (அட்லெடிகோ மெட்ரிட்), கொகே (அட்லெடிகோ மெட்ரிட்).

முன்கள வீரர்கள்

மார்கோ அசன்சியோ (ரியெல் மெட்ரிட்), இயாகோ அஸ்பாஸ் (செல்டா விகோ), டியாகோ கெஸ்டா (அட்லெடிகோ மெட்ரிட்), ரொட்ரிகோ மொரேனோ (வலென்சியா), லூகாஸ் வாஸ்க்வெஸ் (ரியெல் மெட்ரிட்).

எட்டாவது முறை FA கிண்ணத்தை கைப்பற்றியது செல்சி அணி

உலகில் மிகவும் பழைமை வாய்ந்த கால்பந்தாட்ட தொடரான இங்கிலாந்து …

பெல்ஜியம் குழாம்

கோல்காப்பாளர்கள்

கொயேன் காஸ்டீல் (வோல்ஸ்பேர்க்), திபவுட் கோர்டொயிஸ் (செல்சி), சிமொன் மிக்னொலட் (லிவர்பூல்), மட்ஸ் செல்ஸ் (நியூகாஸ்ட்ல் யுனைடெட்).  

பின்கள வீரர்கள்

டோபி ஆல்டேர்வீர்ல்ட் (டொட்டன்ஹாம் ஹொட்புர்), டெட்ரிக் பொயாடா (செல்டிக்), லோரன்ட் சிமான் (லொஸ் ஏஞ்சல்ஸ் எப்.சி.), கிறிஸ்டியன் கபலெலே (வட்போர்ட்), வின்சன்ட் கொம்பனி (மன்செஸ்டர் சிட்டி), ஜோர்டன் லுகாகு (லாசியோ), தோமஸ் மியுனியர் (பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்), தோமஸ் வெர்மலன் (பார்சிலோனா), ஜான் வெர்டோன்கன் (டொட்டன்ஹாம் ஹொட்புர்).  

மத்தியகள வீரர்கள்

யன்னிக் கரஸ்கோ (டாலியன் யிபாங்க்), கெவின் டி ப்ருயின் (மன்செஸ்டர் சிட்டி), மூசா டெம்பேலே (டொட்டன்ஹாம் ஹொட்புர்), லீன்டர் டென்டொன்கர் (அன்டர்லெட்ச்), மருவான் பெல்லைனி (மன்செஸ்டர் யுனைடெட்), எடன் ஹசார்ட் (செல்சி), தொர்கான் ஹசார்ட் (பொருசியா மொன்சன்க்ளாட்பச்), அத்னன் ஜனுசாஜ் (ரியெல் சொசிடாட்), டெரிஸ் மெர்டன்ஸ் (நபோலி), யூரி டிலமன்ஸ் (மொனாகோ), அக்செல் விட்செல் (டியான்ஜின் குவான்ஜியன்).  

முன்கள வீரர்கள்

மிச்சி பட்சுவாயி (செல்சி), கிறிஸ்யன் பென்டெகே (கிறிஸ்டல் பளஸ்), நாசெர் சாட்லி (வெஸ்ட் ப்ரோம்), ரொமெலு லுகாகு (மன்செஸ்டர் யுனைடெட்).      

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…