இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி

488

புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பதவிக்காக நான்கு பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக நேற்று (21) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இம்முறை தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால, முன்னாள் தலைவர் ஜயன்த தர்மதாச, முன்னாள் செயலாளரும் தற்போதைய உப தலைவருமான மொஹான் டி சில்வா, முன்னாள் செயலாளர் நிஷான்த ரணதுங்க ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இம்மாதம் 31ஆம் திகதி

தேர்தல் குழுவை நியமிப்பதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக இம்மாதம் 31 ஆம் …

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது ஐந்து பேர் கொண்ட தேர்தல் குழுவும் நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் குழுவினர் சீல் வைக்கப்பட்ட வேட்பு மனுக்களை நேற்றைய தினம் (21) உத்தியோகபூர்வமாக திறந்தனர். இதனையடுத்து இம்முறை தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார் யார் என்பது தொடர்பில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, திலங்க சுமத்திபால, ஜயன்த தர்மதாச, மொஹான் டி சில்வா மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நால்வருடைய பெயர்களும், இலங்கையிலுள்ள கிரிக்கெட் கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் ஏதேனும் அதிருப்திகள் காணப்படுமாயின் இன்று (22) மாலை 3 மணிக்கு முன் அதனை முன்வைக்குமாறும் தேர்தல் குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்ப்புகள் தொடர்பில் கருத்துக்களை எதிர்வரும் 25ஆம் திகதி தெரிவிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை 26ஆம் திகதி விசாரணை செய்து முடிவுகளை அன்றைய தினமே அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் சந்தேகம்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) முகம்கொடுத்திருக்கும் பொருளாதார …

அதேநேரம், இம்முறைத் தேர்தலில் 84 கழகங்கள் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளதுடன், மூன்று கிரிக்கெட் கழகங்களுக்கு சட்ட சிக்கல்கள் காரணமாக தேர்தலில் வாக்களிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, தற்போதைய தலைவர் திலங்க சுமதிபாலவை மீண்டும் தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என 28 கழகங்கள் முன்மொழிந்துள்ளதுடன், அதனை இன்னும் 28 சங்கங்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தேர்தல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இம்முறை தேர்தலில் திலங்க சுமதிபாலவுக்கு 56 சங்கங்களின் வாக்குகள் கிடைப்பது உறுதியாகியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், வவுனியா, போரா மற்றும் கொழும்பு மெலே உள்ளிட்ட விளையாட்டுக் கழகங்களும் திலங்க சுமதிபாலவுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளன.

இதேவேளை, செயலாளர் பதவிக்கு தற்போதைய பொருளாளர் ஷம்மி சில்வா, பந்துல திலக் திசாநாயக்க, ஹிரன்த பெரேரா, மொஹான் டி சில்வா, நிஷான்த ரணதுங்க ஆகிய ஐவர் போட்டியிடவுள்ளனர்.

அத்துடன், பொருளாளர் பதவிக்கு தற்போதைய பொருளாளர் ஷம்மி சில்வா, பந்துல திலக் திசாநாயக்க, ஈஸ்ட்மன் நாரங்கொட ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட…

இந்நிலையில், உப தலைவர்கள், உப செயலாளர், உப பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கும் போட்டி நிலவுகின்றது. இதில் 2 உபதலைவர்கள், நடுவர்கள் குழுவுக்காக 5 பேரும், ஒழுக்காற்று குழுவுக்காக 5 பேரும், போட்டி தொடருக்கான குழுவுக்காக 5 பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

வேட்பாளர்கள் விபரம்

தலைவர் பதவிதிலங்க சுமதிபால, நிஷான்த ரணதுங்க, ஜயன்த தர்மதாச, மொஹான் டி சில்வா

உப தலைவர் பதவிஷம்மி சில்வா, ஹிரன்த பெரேரா, கே.மதிவானன், மொஹான் டி சில்வா

செயலாளர் பதவி ஷம்மி சில்வா, பந்துல திலக் திசாநாயக்க, ஹிரன்த பெரேரா, மொஹான் டி சில்வா, நிஷான்த ரணதுங்க

உப செயலாளர் பதவிபந்துல திசாநாயக்க, சமன்த தொடன்வல, ரவீன் விக்ரமரத்ன

பொருளாளர் பதவிஷம்மி சில்வா, பந்துல திசாநாயக்க, ஈஸ்ட்மன் நாரங்கொட

உப பொருளாளர் பதவிகிஹான் வீரசிங்க, லலித் ரம்புக்வெல்ல, நிஹால் லெவிகே

போட்டி நடுவர் குழு பதவிதீபால் மதுரப்பெரும, அபூ சித்தீக், ஹிரான் ஜயமான்ன, துமிது ஹேமால், மாலன் ரணசிங்க, சமன் ஹேவாவிதாரன, வசந்த லால் பெர்னாண்டோ

போட்டி குழு பதவிவசன்த ஆரியவிக்ரம, கிஹான் வீரசிங்க, கசுன் பெர்னாண்டோ, மாலன் பெர்னாண்டோபுல்லே, சமன்த தொடன்வல, ஷம்மி குணசேகர

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…