இலங்கையின் தேசிய சாதனையை முறியடிக்க காத்திருக்கும் உதயவானி

1047
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியஷிப் தொடரில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றியிருந்த திருகோணமலை தங்க நகரைச் சேர்ந்த நாகேந்திரம் உதயவானி வெண்கலப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் அவர் 39.12 மீற்றர் தூரத்திற்கு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

போட்டியின் பிறகு உதயவானி ThePapare.com இணையத்தளத்துக்கு இவ்வாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.