இலங்கை அணியுடன் மீண்டும் பணியாற்ற வரும் அவுஸ்திரேலிய உளவியலாளர்

368

இலங்கை கிரிக்கெட் அணியுடன் கடந்த ஜனவரி மாதம் பணி புரிந்த அவுஸ்திரேலியாவின் செயல்திறன் உளவியலாளரான கலாநிதி பில் ஜோன்சி வரும் மே மாதத்தில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியுடன் மற்றுமொரு அமர்வில் பங்கேற்கவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை புரிய வந்திருக்கும் அவுஸ்திரேலிய உளவியலாளர்

அவுஸ்திரேலிய அணியின் பிரபல விளையாட்டு உளவியல் நிபுணர் Dr. பில் ஜோன்சி, இலங்கை ..

ஜோன்சி இலங்கை அணியுடன் முதல் முறை பணிபுரிந்தபோது, ஒவ்வொரு வீரர் மற்றும் பயிற்சியாளர்களுக்குமான பொருத்தமான சிறந்த தொடர்பாடல் மற்றும் கற்றல் முறையை கொண்டு ஒவ்வொரு வீரரதும் ஆளுமை பண்புகளை அடையாளம் கண்டார்.

இந்நிலையில், கலாநிதி ஜோன்சி வரும் மே 05 தொடக்கம் 23ஆம் திகதி வரை தேசிய அணிக்கு மீண்டும் ஆலோசனைகளை வழங்கவுள்ளார். இம்முறை அவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வீரருக்கும் உயர் மட்டத்தில் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்துவதற்கு உதவி புரியவுள்ளார்.      

‘வீரர்களின் கற்கும் பாணியை புரிந்து கொள்வது மற்றும் அவர்களின் திறமையை வெளிப்படுத்த தூண்டுவதற்கு பயிற்சியாளர்களுடனும் நான் தொடர்ந்து பணியாற்றவுள்ளேன்’ என்று ஜோன்சி குறிப்பிட்டார்.

ஆலோசனை மற்றும் கல்வி உளவியல் பற்றி முதுநிலை மற்றும் கலாநிதி பட்டம் பெற்றிருக்கும் ஜோன்சி, மௌண்ட் கிரவட் CAE (தற்போது கிரிப்பித் பல்கலைக்கழகம்), QUT மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகங்களில், கல்வி உளவியல், சமூக உளவியல், மேம்பாட்டு உளவியல், ஆலோசனை வழங்கல், சந்தைப்படுத்தல் மற்றும் பல்கலாசார உளவியல் ஆகிய துறைகளில் விரிவுரையாளராக உள்ளார்.   

தென்னாபிரிக்காவிற்கான இலங்கை அணியின் சுற்றுப்பயண விபரம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் …

அவர் அவுஸ்திரேலிய பேஸ்போல் அணி மற்றும் குயீஸ்லாந்து புல்ஸ் கிரிக்கெட் அணி என்பவற்றுக்கு உளவியலாளராக பணியாற்றியுள்ளார். ஜோன்சி 1994இல் இருந்து 2008ஆம் ஆண்டு வரை பிரிஸ்பான் லயன்ஸ் AFL அணிக்கு உள திறன்கள் பயிற்சியாளராக பணியாற்றி இருப்பதோடு பிரிஸ்பான் பிரோன்கோஸ் NRL அணியின் விளையாட்டு உளவியலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

அவர், ‘எம்மை மற்றும் அடுத்தவர்களை புரிந்துகொள்ளல்’, ‘உங்களையும் ஏனையவர்களையும் நிர்வகித்தல்’ மற்றும் ‘ஆக்கபூர்வமான செயலின் சக்தி’ என்ற மூன்று ஆங்கில புத்தகங்களை (e-book) எழுதியுள்ளார். அவர் ஒரு பெருநிறுவன கல்வியாளர் மற்றும் மாநாட்டு பேச்சாளராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க