திரிமான்னவின் துடுப்பாட்டக்கரங்கள் எதனை இழந்திருக்கின்றது?

2083

கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட மாகாண கிரிக்கெட் தொடரில் மிகவும் மேல் தரத்திலான கிரிக்கெட் விளையாட்டு விளையாடப்பட்டிருந்தது.

இதில் ஹம்பந்தோட்டையில் இடம்பெற்றிருந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய காலி அணியினர் மலைக்க வைக்கும் விதமாக, முதல் இன்னிங்சில் 471 ஓட்டங்களை குவித்திருந்தனர். இதற்காக காலி அணி நன்றி கூறக்கூடிய ஒருவராக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தனது அதிகபட்ச ஓட்டங்களைப் (231) பதிவு செய்த ரொஷேன் சில்வா அமைகின்றார்.

மாகாண கிரிக்கெட் தொடரில் ஜொலித்த தேசிய அணி நட்சத்திரங்கள்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் மாகாணங்களுக்கு இடையிலான…

குறித்த போட்டியில் காலி அணியுடன் மோதிய கொழும்பு அணி தமது முதல் இன்னிங்சில் துடுப்பாடி ஒரு கட்டத்தில்  171 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து சரிவு நிலையில் இருந்த போது, பலோவ் ஒன் முறையில் மீண்டும் துடுப்பாடுவதை தடுக்க அவ்வணிக்கு இன்னும் 100 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது. அப்போது களத்தில் நின்ற லஹிரு திரிமான்ன அற்புதமான சதம் ஒன்றைக் கடந்து கொழும்பு அணிக்கு தடுப்புச்சுவராக இருந்தார்.

திரிமான்னவின் இந்த சதம் கொழும்பு அணி பலோவ் ஒன் முறையில் மீண்டும் ஆடுவதை தடுக்க உதவியிருந்ததுடன், காலி அணியினை விட முதல் இன்னிங்சில் 150 இற்கு குறைவான ஓட்டங்களினை பின்தங்கி இருக்கவும் காரணமாகியிருந்தது.

திரிமான்ன குறித்த போட்டியில் அழகிய  துடுப்பாட்ட முறை மூலம் ஓட்டங்கள் பெற்ற போதிலும், அவர் அதே மாதிரி எல்லாப் போட்டிகளிலும் விளையாடுவாரா?  என்பது சந்தேகத்தினைத் தருகின்றது.

2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிச்செல் ஜோன்சன் இலங்கை அணியின் நட்சத்திர வீரரான குமார் சங்கக்காரவின் கட்டை விரலை சேதப்படுத்திய பின்னர், மெல்பர்னில் கிறிஸ்மஸுக்கு அடுத்த நாளில் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டியில் விளையாட திரிமான்னவினை இலங்கையின் தேர்வாளர்கள் மிக வேகமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பினர். அவர் அங்கு சென்று 48 மணித்தியாலங்களுக்குள் ஆரம்பித்த போட்டியில் ஆஸி. அணியின் வேகப்புயல்களான மிச்செல் ஜோன்சன், மிச்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில், ஜேக்சன் பேர்ட் போன்றோரின் சிறந்த பந்து வீச்சினையும் தாண்டி திரிமான்ன  91 ஓட்டங்கள் பெற்று அசத்தினார்.

முரளிக்காக அர்ஜுனா, அர்ஜுனாவுக்காக கதிர்காமர்

பந்தை சேதப்படுத்திய சர்ச்சை இன்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்…

எனினும், இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் திரிமான்ன 23 என்கிற துடுப்பாட்ட சராசரியினை வைத்திருப்பது அவரது இப்படியான திறமையில் சிறிது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.

திரிமான்னவின் முதல் சுற்றுப் பயணமாக, இலங்கை அணி 2011ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்றது அமைந்திருந்தது. குறித்த சுற்றுப் பயணத்தில் தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்ன ஆகியோரும் இருந்தனர். இவ்வீரர்களில்  ஒருவர் தற்போது இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக மாறியிருப்பதோடு, மற்றையவர் கடந்த ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களுக்கு மேல் கடந்த ஒரு சிறப்பு துடுப்பாட்ட வீரராக உள்ளார். ஆனால், இவர்களில் மிகவும் திறமை வாய்ந்த திரிமான்னவுக்கு தற்போது அணியிலேயே இடம் இல்லாத நிலை உருவாகியிருக்கின்றது.

அப்போது, இலங்கை அணியின் முகாமையாளராக இருந்த திரு. அனுர தென்னக்கோன் அவர்கள் இலங்கை அணியில் அடுத்து வரப்போகின்ற பெரிய விடயம் எது என்பதை சரியாக அனுமானித்தே இந்த இளம் வீரர்களை அணியில்  உள்வாங்கி  இருந்தார்.

தென்னக்கோன் மட்டுமின்றி இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான துலீப் மெண்டிஸ், அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார போன்றோரும் திரிமான்ன சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முக்கிய வீரராக எதிர்காலத்தில் இருப்பார் என எதிர்பார்த்து இருந்தனர். எனினும், அவர்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புக்கள் தற்போது வீணாகியிருக்கின்றது.

திரிமான்னவின் உத்திகளிலோ அல்லது அவரது உடலிலோ எந்தக்குறையும் இருப்பதாக தெரியவில்லை. எல்லாம் சம அளவிலேயே இருக்கின்றது. உண்மையில் இலங்கை அணியினை சந்திமாலுக்கு முதல் தலைமை தாங்கியிருக்க வேண்டியவர் திரிமான்ன தான். ஆனால், துடுப்பாட்ட வீரர்கள் கிரிக்கெட் விளையாடும் போது இருக்க வேண்டிய கிரிக்கெட்டுக்கான மனநிலை அவருக்கு குறைவாகப் போய்விட்டது.

டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க விரும்புபவர்கள் பாடம் கற்க வேண்டியது ஹஷான் திலகரட்னவிடம் இருந்து ஆகும். 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியன்களான இலங்கை அணிக்கு, 1999ஆம் ஆண்டுக்கான அடுத்த உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றிலேயே வெளியேறும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. அப்போது, இரண்டு வகைப் போட்டிகளிலும் இருந்து ஹஷான் திலகரட்ன தேர்வாளர்கள் கடைப்பிடித்த கொள்கை ஒன்றின் காரணமாக கழற்றிவிடப்பட்டிருந்தார்.

குறித்த காலப்பகுதியில் இலங்கை அணியில் வாய்ப்பை இழந்த மற்றுமொரு வீரரான ரொஷான் மஹாநாம தனது ஓய்வினை அறிவித்துக் கொண்டார். எனினும், ஹஷான் தனது இடத்துக்காக போராடினார். அடுத்த இரண்டு வருடங்களிலும் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் ஓட்ட மழை பொழிந்த ஹஷானை மீண்டும் அழைக்க வேண்டிய அழுத்தங்களுக்கு தேர்வாளர்கள் உள்ளாகினர். 2001ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு மீண்டும் வந்து கலக்கத் தொடங்கிய ஹஷான், தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் சதம் கடந்த முதல் இலங்கையராக மாறினார்.

1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் பின்னர் சிரேஷ்ட வீரர்கள் அணியில் இருந்து விலக்கிவிடப்பட்டதும், 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்காக ஒரு இளம் அணியினை தேர்வாளர்கள் உருவாக்கப்போகின்றனர் என அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஹஷான் திலகரட்னவின் பிரம்மிக்க வைக்கும் ஆட்டம் தேர்வாளர்களுக்கு தாம் சொன்ன வார்த்தைகளை திரும்பி எடுக்க வேண்டிய ஒரு நிலையை தோற்றுவித்திருந்தது.

மஹேலவின் பார்வையில் இம்முறை ஐ.பி.எல் தொடர்

இம்முறை ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான்…

இதே மாதிரியான ஒரு அணுகு முறையினை திரிமான்ன மேற்கொண்டால் மாத்திரமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு மீண்டும் ஒரு நட்சத்திரமாக உருவெடுக்க முடியும்.

திரிமான்ன இப்படி மாறியதற்கு அவரினையே முழுக் காரணமாக நாம் கூறிவிட முடியாது. அவர் எல்லா இலக்கங்களிலும் துடுப்பாட அறிவுறுத்தப்பட்டிருந்தார்.  T-20 போட்டிகளில் 7ஆம் இலக்க வீரராகவும் அவரை களமிறங்கியிருக்கின்றனர். 2014ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற போது திரிமான்னவும் அந்த போட்டியில் சதம் ஒன்றினை விளாசியிருந்தார். அதோடு குறித்த தொடரின் நாயகனாகவும் திரிமான்ன தெரிவாகியிருந்தார். அத்தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் திரிமான்ன ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாரிடமாவது  கேட்டுப் பார்க்க வேண்டும் திரிமான்ன போன்ற வீரர் ஒருவரினை 7ஆம் இலக்கத்தில் T-20 போட்டிகளில் களமிறக்கியதன் மூலம் அவர்கள் என்ன சாதிக்க நினைக்கின்றனர் என்பதை.

கடந்த ஆண்டு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது திரிமான்ன ஒரு நாள் போட்டிகளுக்காக இலங்கை அணியில் விளையாட மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார். தான் திரும்பிய போட்டிகளில் 80, 62 என ஓட்டங்கள் குவிக்க அவருக்கு டெஸ்ட் அணியிலும் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு மேலதிகமாக டெஸ்ட் அணியின் உபதலைவராகும் திரிமான்ன மாறினார்.

முரளிக்காக அர்ஜுனா, அர்ஜுனாவுக்காக கதிர்காமர்

பந்தை சேதப்படுத்திய சர்ச்சை இன்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு…

இதனை அடுத்து தனக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரிவர பயன்படுத்த தவறிய திரிமான்ன ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகவும் மோசமான முறையில் செயற்பட்டார். பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் ஓட்டங்கள் எடுக்க சிரமப்பட்டதோடு, திரிமான்ன மிகவும் மோசமான முறையில் யாசிர் சாவின் பந்தினை அடிக்க முற்பட்டபோது ஆட்டமிழந்திருந்தார்.  இதனையடுத்து பலமிக்க சுழல் வீரர்களினைக் கொண்டிருந்த இந்திய அணியிடம் டெஸ்ட் போட்டிகளில் சிக்குண்ட திரிமான்ன, கடைசியில் இலங்கையின் ஒரு நாள் அணியில் விளையாடும் வாய்ப்பினை இழந்தார்.

இனி திரிமான்ன இலங்கை அணிக்கு வரவேண்டும் எனில் போராட வேண்டியது அவர் மாத்திரமே,  இலங்கை அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் தடுமாற்றத்தினைக் காட்டி வந்த போதிலும் டெஸ்ட் போட்டிகளில் நல்ல நிலைக்கு மீண்டிருக்கின்றது. இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான தனன்ஞய டி சில்வா, ரொஷேன் சில்வா போன்றோர் இலங்கை அணியில் வெற்றிடமான துடுப்பாட்ட வீரருக்கான இடத்தினை எடுத்து விட்டனர் போலத்தெரிகின்றது. இப்படியான ஒரு நிலையில் தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டுமெனில் இப்போது திரிமான்னவுக்கு தேவையானது சதங்கள் அல்ல பெரிய சதங்களுக்கான ஒரு பசி.