சகோதரத்துவத்திற்கான கால்பந்து திட்டத்தில் முதல் தடவையாக இலங்கை

214

2018 ஆம் ஆண்டுக்கான பிபா உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ பங்காளரான கேஷ்ப்ரோம் நிறுவனம் (Gazprom) “சகோதரத்துவத்திற்கான கால்பந்து (F4F)“ என்ற பெயரில் அமைந்த சர்வதேச ரீதியிலான சிறுவர் வேலைத் திட்டத்தினை ஆறாவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்திருக்கின்றது.

இந்த வேலைத்திட்டத்தில் இலங்கை இந்த ஆண்டே முதல் தடவையாக பங்கேற்கின்றது. இந்த வேலைத்திட்டத்தில் உலகம் பூராகவுமுள்ள இளம் சமுதாயத்தினரை பங்கெடுக்க வைத்து அவர்களுக்கு மனித விழுமியங்களான நட்பு, சமத்துவம், சமதானம் போன்றவற்றை கற்றுக் கொடுப்பது நோக்கமாகும்.

சகோதரத்துவத்திற்கான கால்பந்து வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உலக சம்பியன்ஷிப் கால்பந்து தொடருக்கான அணிகளை தெரிவு செய்யும் நிகழ்வுகள் மொஸ்கோவில் இடம்பெற்றிருந்தன. 2017 ஆம் ஆண்டில் 64 நாடுகளில் மாத்திரம் காணப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டம் இந்த ஆண்டில் 211 நாடுகளுக்கு வியாபித்திருக்கின்றது.

ரினௌன் அணியோடு இணையும் சொலிட் இளம் வீரர் ஜூட்சுபன்

இந்த கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க 32 சர்வதேச சகோதரத்துவ அணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு அணிகளைத் தெரிவு செய்யும் நிகழ்வில் ஒவ்வொரு நாடுகளினதும் இளம் வீரர்கள் எந்த நிலையில் (கோல்காப்பாளர், மத்தியகள வீரர், பின்கள வீரர், முன்கள வீரர்) விளையாடப் போகின்றார்கள் என்பதும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த 32 சர்வதேச அணிகளும் சகோதரத்துவத்துக்கான உலக கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் ஜூன் மாதம் 12 ஆம் திகதியில் மோதிக்கொள்கின்றன.

அணிகளைத் தெரிவு செய்யும் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதன்படி, இந்த வேலைத்திட்டத்தில் இலங்கையின் இளம் தூதுவராக இருப்பவர் சர்வதேச அணிகளின் ஒன்றின் கோல்காப்பளராக செயற்படுவார். இந்த வேலைத்திட்டத்தின் இறுதி நிகழ்வுகள் அனைத்தும் மொஸ்கோவில் ஜூன் மாதம் 8 திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.

நடைபெறப்போகும் உலக கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் சகோதரத்துவத்திற்கான கால்பந்து அணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது, விழுமியங்களின் அடிப்படையிலாகும். அதாவது, வெவ்வேறு நாடுகளின் வெவ்வேறு பாலினங்களைச் சேர்ந்த, வெவ்வேறு உடற்தகுதிகளைக் கொண்டோர் ஒரே அணியில் சமத்துவமாக இணைக்கப்பட்டுள்ளனர். தொடரில் பங்கேற்கும் கால்பந்து வீரரின் வயது 12 இற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உலக சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் கலப்பு சர்வதேச அணிகளுக்கு வெவ்வேறு நாடுகளின் 14 தொடக்கம் 16 வரையிலான வயது வகுப்புக்களுக்குள் காணப்படும் கால்பந்து வீரர்கள் பயிற்சியாளர்களாகச் செயற்படுவர்.

இந்த நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை சேகரிக்க உலகெங்கிலுமுள்ள 5000 இற்கும் மேற்பட்ட ஊடகங்கள் வரவுள்ளதோடு, சகோதரத்துவத்திற்கான கால்பந்து வேலைத்திட்டத்தின் சிறுவர் ஊடக நிலையமும் செய்திகளை உலகுக்கு தரவிருக்கின்றது. இந்த சிறுவர் ஊடக நிலையத்தில் 211 நாடுகளின் 12 வயதான இளம் ஊடகவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு நாடுகளிலிருந்தும், இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்கும் இளம் தூதுவர்கள் அந்தந்த நாடுகளின் சமதானத்துக்கான, சமத்துவத்துக்கான மற்றும் நட்புக்கான பிரதிநிதிகளாகவும் செயற்படவுள்ளனர்.

ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் இலங்கை வருகை

சகோதரத்துவத்திற்கான உலக கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிகள் முடிவடைந்த அடுத்த நாளில், நாடுகளின் இளம் தூதுவர்கள் ஆறாவது சர்வதேச சகோதரத்துவத்திற்கான கால்பந்து சிறுவர்கள் மாநாட்டில் சந்திக்கவுள்ளனர். குறிப்பிட்ட சந்திப்பில் இந்த நிகழ்ச்சித் திட்டம் மூலம் கற்றுக்கொண்ட விழுமியங்களை உலகம் பூராகவும் கொண்டு செல்வது பற்றி கலந்துரையாடப்படும்.

சகோதரத்துவத்துக்கான கால்பந்து முகாமின் போது, இளம் வீரர்கள் இளம் பயிற்றுவிப்பாளர்கள் பிரபல்யமான கால்பந்து வீரர்களின் ஆளுகையின் கீழ், விழுமியங்களை கற்கவுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை இந்த வேலைத்திட்டத்தினை விசேட கல்வி நிகழ்ச்சித் திட்டமாக கருதுகின்றது.

சூழல் சம்பந்தமான விடயங்களை இந்த வேலைத்திட்டம் காட்டுவதால், உலக கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கின்ற 32 அணிகளும் உலகில் ஆபத்தை எதிர்கொள்ளும் விலங்குகளின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுகின்றன.

“வரலாற்றில் முதல் தடவையாக, உலகெங்கிலும் இருக்கும் இளம் வீர, வீராங்கணைகள் கால்பந்து விளையாடப்படுகின்ற ஒரே இடத்தில் சந்திக்கின்றனர். சமத்துவம், ஒருவரை ஒருவர் மதித்தல் போன்ற எல்லாத் தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு ஒற்றுமையை எதிர்பார்க்கும் காலத்தில் நாம் வாழ்ந்துவருகின்றோம்“ என கேஷ்ப்ரோம் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி விக்டர் சுப்கோவ் குறிப்பிட்டிருந்தார்.

“இந்த விஷேட நிகழ்ச்சி திட்டத்துக்காக, எங்களது பிபா சங்கத்தின் பங்களாரான கேஷ்ப்ரோம் ஆதரவு தந்ததில் மகிழ்ச்சி“ என பிபா கால்பந்து சங்கத்தின் பிரதான செயலாளர் பட்மா சமோரா தெரிவித்திருந்ததோடு, “இந்த வேலைத்திட்டம் கால்பந்து விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் எந்தவித பாகுபாடுகளுமின்றி கதவைத்திறந்து வைத்திருக்கின்றது என்பதை காட்ட சிறந்த உதாரணமாக இருக்கின்றது. இது மாதிரியான நிகழ்வுகளுக்கு பிபா எப்போதும் உயிர்ப்பான முறையில் ஆதரவு தரும்“ எனவும் குறிப்பிட்டிருந்தார்.