தேசிய கால்பந்து அணிக்கான இறுதி வீரர்கள் தெரிவு நாளை

899

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை இணைக்கும் இறுதி தேர்வு முகாம் நாளை (2) ஆரம்பமாகவுள்ளது. இதில், ஏற்கனவே நாடு பூராகவும் நடாத்தப்பட்ட தேசிய அணிக்கான ஐந்து தேர்வு முகாம்களிலும் பங்கெடுக்காத வீரர்கள் கலந்துகொள்ள முடியும்.

வடக்கு, கிழக்கில் கால்பந்து நிலைமை எவ்வாறு உள்ளது?

இலங்கை தேசிய கால்பந்து…

இந்த தேர்வு முகாம் பெத்தகான கால்பந்து பயிற்சி மையத் தொகுதியில் இம்மாதம் 2 ஆம், 3ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. தேசிய அணியில் இணைய ஆர்வமுள்ள வீரர்கள் 2 ஆம் திகதி காலை 6 மணியளவில் தேர்வு இடம்பெறும் குறித்த இடத்திற்கு சமூகமளிக்க வேண்டும்.

“ஏற்கனவே நடாத்திய தேர்வு முகாம்களை, காயம் காரணமாகவும் வேறு காரணங்களுக்காவும் பங்கேற்க முடியாது போனவர்களுக்காக மேலதிகமான தேர்வு முகாம் ஒன்றினை நாம் ஏற்பாடு செய்திருக்கின்றோம். கண்டி, திகன போன்ற பிரதேசங்களில் கடந்த 2-3 வாரங்களாக நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் மத்திய மாகாணத்தினை சேர்ந்த சில வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காது போயிருந்தது. இவர்களுக்கும் சேர்த்தே இந்த மேலதிக தேர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. “ என இலங்கை கால்பந்து அணியின் முகாமையாளர் சுனீல் சேனவிர ThePapare.com இற்கு பிரேத்தியமாக வழங்கிய செவ்வியில் கூறியிருந்தார்.

தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் குழாம் கடந்த வாரம், இலங்கை கால்பந்து அணிக்கு வீரர்களை இணைக்கும் தேர்வு முகாம்களை ஐந்து கட்டமாக நடாத்தியிருந்தது. இதில் வடக்கு, கிழக்கு வீரர்களுக்கான தேர்வு முகாம்கள் தனித்தனியாக இடம்பெற்றிருந்தன.

கொழும்பு கால்பந்து கழகத்தில் இணைந்த அடுத்த பிரபலம் ரிப்னாஸ்

“நாங்கள் இந்த மாதம் 6ஆம் திகதியளவில் தேசிய அணிக்காக 30 பேர் கொண்ட ஒரு குழாத்தினை தெரிவு செய்து வெளியிடவுள்ளோம். அதோடு, இன்னும் 30 வீரர்கள் அடங்கிய குழாத்தினையும் தெரிவு செய்து அவர்களை எமது “B” அணியாக பயன்படுத்தவுள்ளோம்.“ என சேனவீர மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த தேர்வுமுகாம்களின் மூலம் இலங்கை கால்பந்து அணியில் இணைக்கப்படும் வீரர்கள், வருகின்ற செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பங்களாதேஷில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் (SAFF) தொடரில் பங்கேற்க தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<