பாகிஸ்தானுடனான T20 தொடரிலும் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி

537
SLvsPAK

இலங்கை மகளிர் அணியுடனான மூன்றாவதும் கடைசியுமான T20 போட்டியிலும் 38 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் மகளிர் அணி இரு அணிகளுக்கும் இடையிலான T20 தொடரை 2-1 என கைப்பற்றியது. பாகிஸ்தான் மகளிர் அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரையும் 3-0 என வைட்வொஷ் செய்தமை குறிப்பிடத்தக்கது.

[rev_slider LOLC]

கொழும்பு SSC மைதானத்தில் இன்று (31) நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு இலகுவான வெற்றி இலக்கொன்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 20 ஓவர்கள் ஆடியும் அந்த இலக்கை நெருங்க முடியாமல் போனது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவி சமரி அட்டபத்து பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார். பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான சித்ரா அமீன் (23) மற்றும் நாஹிதா கான் (19) சிறந்த தொடக்கத்தை வழங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு பெற்ற 33 ஓட்ட இணைப்பாட்டமும் அந்த அணிக்கு ஸ்திரமான ஓட்டங்களை பெற உதவியது.

பாக். மகளிரை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை மகளிர் அணி

Related Articles முதல் T20யில் இலங்கை மகளிர் அணியை போராடி வென்றது பாகிஸ்தான்

எனினும் அடுத்து வந்த அணித் தலைவி பிஸ்மாஹ் மஹ்ரூப் ஒரு ஓட்டத்தையே பெற்றார். மத்திய வரிசை வீராங்கனை ஜவேரியா கான் சிறப்பாக ஆடி 38 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றார். இதன்போது அவர் நிதா தாருடன் இணைந்து பெற்ற 44 ஓட்டங்கள் மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 100 ஓட்டங்களை கடந்தது. நிதா தார் 16 பந்துகளில் 3 பௌண்டரிகளுடன்  22 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது. இடது கை சுழற்பந்து வீராங்கனை சுகந்திகா குமாரி மற்றும் ஓஷதி ரணசிங்க தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் எட்ட முடியுமான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணி ஆரம்பம் தொட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் இலக்கை நெருங்க முடியாமல் போனது. அணித்தலைவி சமரி அட்டபத்து முகம்கொடுத்த முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்ததோடு அடுத்து வந்த ஹாசினி குமாரி 8 ஓட்டங்களுடனும் நிலக்ஷி டி சில்வா 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இலங்கை மகளிர் அணி 32 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்போது ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை அனுஷ்கா சஞ்ஜீவனி 14 ஓட்டங்களை பெற்ற நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மகளிர் அணிக்காக மத்திய வரிசையில் மிக நிதானமாக ஆடிய அமல்கா மெண்டில் 49 பந்துகளில் 25 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆக இலங்கை அணி தேவைப்படும் ஓட்ட வேகத்தை பெற தவறியது. இலங்கை அணி 14 ஆவது ஓவரிலேயே 50 ஓட்டங்களை எட்டியதோடு பின் வரிசையில் வந்த வீரங்கனைகளும் வேகமாக ஆடத் தவறினர்.

மும்பை இந்தியன்ஸ் குழாமில் மஹேலவுடன் இணைந்த மாலிங்க

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக

இதனால் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் அணித்தலைவி பிஸ்மாஹ் மஹ்ரூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இதற்கு முன்னர் 3 போட்டிகளைக் கொண்ட ஒரே ஒரு T20 தொடர் மாத்திரமே நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு நடந்த அந்த தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியது. எனினும் இலங்கை மகளிர் அணியே அதிக T20 போட்டிகளில் தோற்ற அணியாக மோசமான சாதனையை படைத்துள்ளது.

இலங்கை மகளிர் அணி இதுவரை ஆடிய 74 போட்டிகளில் அதிகபட்சம் 51 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இலங்கை ஆடவர் அணியும் T20 போட்டிகள் அதிக தோல்வியை சந்தித்த (52) அணியாக மோசமான சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.      

    

ஸ்கோர் விபரம்









Title





Full Scorecard

Sri Lanka Women

75/8

(20 overs)

Result

Pakistan Women

113/6

(20 overs)

PAKW won by 38 runs

Sri Lanka Women’s Innings

Batting R B
Extras
Total
75/8 (20 overs)
Fall of Wickets:
Bowling O M R W E

Pakistan Women’s Innings

Batting R B
Extras
Total
113/6 (20 overs)
Fall of Wickets:
Bowling O M R W E