கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டார் ஸ்மித்

568

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், நாடு திரும்பிய பின் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தனது செயலுக்காக மன்னுப்பு கேட்டதோடு, கண்ணீர் விட்டு அழுதார்.

தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்காக ஸ்மித்துடன் உப தலைவர் டேவிட் வோர்னர் மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கெமரூன் பான்க்ரொப்ட் ஆகியோருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை போட்டித் தடை விதித்துள்ளது.  

வோர்னரின் தடையால் குசல் பெரேரா ஐ.பி.எல் இல்

இந்திய கிரிக்கெட் சபையினால்…

‘இது எனது தலைமைத்துவத்தின் தோல்வி’ என்று சிட்னியில் இன்று (29) நடந்த செய்தியாளர் சந்திப்பில் 28 வயதான ஸ்மித் குறிப்பிட்டார். இதன்போது, வோர்னர் மற்றும் பான்க்ரொப்டும் தமது செயலுக்காக மன்னிப்புக் கேட்டனர்.

ஸ்மித் மேலும் கூறும்போது, ‘என் அனைத்து அணி சகாக்களும் உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், என்னால் கோபமும் ஏமாற்றமும் அடைந்த அனைத்து அவுஸ்திரேலிய ரசிகர்களும் என்னை மன்னித்து விடுங்கள்.

கேப்டவுனின் நடந்ததற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து விட்டது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் என்ற வகையில் நான் முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். முடிவெடுப்பதில் நான் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டேன். அதன் விளைவு என்ன என்பதை புரிந்துகொண்டேன்.

தலைமைத்துவத்தின் தோல்வி, என் தலைமையின் தோல்வி. இதனால் ஏற்பட்ட சேதத்துக்கு என்னால் முடிந்த வகையில் ஈடு கட்டுவேன்.

இதனால் ஏதாவது நன்மை இருக்குமென்றால் அது மற்றவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் பாடமாகும். மாற்றத்துக்கான காரணியாக நான் விளங்க முடியும் என்று நம்புகிறேன்.

கிரிக்கெட் அரங்கில் பந்தை சேதப்படுத்திய கிரிக்கெட் பிரபலங்கள்

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும்…

என்னுடைய தாய், தந்தையரின் நிலையை நினைத்தால் எனக்கு பெரும் வருத்தமாக உள்ளது. அவுஸ்திரேலியாவுக்கும் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நான் ஏற்படுத்திய வலிக்காக வருந்துகிறேன். மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

ஸ்மித்துக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மற்றும் ICC வழங்கிய தடைகளுக்கு அப்பால் அவர் இந்த ஆண்டு ஐ.பி.எல். மற்றும் பல ஒப்பந்தங்களையும் இழந்துள்ளார்.  

‘எனது முழு வாழ்நாளிலும் நான் இதற்காக வருந்தப்போகிறேன் என்று எனக்கு தெரியும். நான் முழுமையாக இறுக்கப்பட்டுள்ளேன். மீண்டும் மதிப்பையும் மன்னிப்பையும் என்னால் பெற முடியும் என்று நான் நம்புகிறேன்.

எனக்குத் தெரிந்தவரை இப்படி முன்பு நடந்ததில்லை. முதல் முறையாக நடந்து விட்டது. இனி இப்படி நடக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்’ என்றும் ஸ்மித் குறிப்பிட்டார்.

டேவிட் வோர்னர் டுவிட்டரில் கூறியதாவது, ‘செய்யப்பட்ட தவறு கிரிக்கெட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் எனது செயலுக்காக பொறுப்பு ஏற்று மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்மித், வோர்னர் மீதான தடை அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் – சங்கக்கார

தென்னாபிரிக்காவுக்கு எதிராக…

இது விளையாட்டு மற்றும் அதன் ரசிகர்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். நான் சிறு பையனாக இருந்த காலத்தில் இருந்து விரும்பும், நாம் அனைவரும் விரும்பும் ஆட்டத்திற்கு இது கறையை ஏற்படுத்தியது. ஆழமாக மூச்சை இழுத்து எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்ளுடன்  நேரத்தை செலவிடவுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கெமரூன் பான்க்ரொப்ட் பேர்த் நகரில் வைத்து ஊடகங்களுக்கு கூறியதாவது, ‘நான் மிகவும் வருந்துகிறேன் என்று கூற விரும்புகிறேன். எனது செயலுக்காக நான் அதிகம் ஏமாற்றமும் கவலையும் அடைகிறேன். இது எனது வாழ்நாள் முழுவதும் வருந்தும் ஒரு விடயமாக உள்ளது. மணல்காகிதம் (மஞ்சள் நிறப் பொருள்) பற்றி நான் பொய் கூறினேன். நான் பொய் கூறினேன். நான் அந்த சந்தர்ப்பத்தில் அச்சமடைந்தேன், மிக வருந்துகிறேன். அவுஸ்திரேலியாவின் அனைவரையும் கீழே தள்ளியதாக உணர்கிறேன்   

இத்தனை இலகுவாக எனது விளையாட்டை விட்டுக்கொடுத்தது எனது மனதுக்கு அதிக வேதனையை தருகிறது. இந்த இடத்திற்கு நான் வர அதிகம் பாடுபட்டேன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை இலகுவாக விட்டுக்கொடுப்பது தாங்க முடியவில்லை.

மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. குறிப்பாக இழந்த மதிப்பை பெறுவதே மிக முக்கியமான விடயமாகும்’ என்றார்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<