வோர்னரின் தடையால் குசல் பெரேரா ஐ.பி.எல் இல்

4842

இந்திய கிரிக்கெட் சபையினால் 11ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள .பி.எல். தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாகவுள்ளது.  

[rev_slider LOLC]

இத்தொடரிற்கான வீரர்கள் ஏலம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் இலங்கை சார்பாக சுழற்பந்துவீச்சாளரான அகில தனஞ்சய, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கிரிக்கெட் நாடகமாக மாறியுள்ள ஆஸி வீரர்களின் சூழ்ச்சி

கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு…

இந்நிலையில், அண்மைக்காலமாக நடைபெற்றுவருகின்ற சர்வதேச T-20 போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அதிரடியை வெளிப்படுத்தி வருகின்ற குசல் ஜனித் பெரேராரவை ஒப்பந்தம் செய்வதற்கு சன்ரைசஸ் ஹைதரபாத் அணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்முறை .பி.எல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னரை 12 கோடிகள் கொடுத்து தக்கவைத்திருந்தது. எனினும், தென்னாபிரிக்க அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித், வோர்னர் ஆகிய இருவருக்கும் ஒரு வருட போட்டித்தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு முதல் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த வோர்னர் நேற்று (28) அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது குறித்து சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.சண்முகம் தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் கூறுகையில்,

சன்ரைசஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து டேவிட் வோர்னர் விலகுவதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்எனத் தெரிவித்திருந்தார்.

இம்முறையும் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ஸ்டோக்ஸ்

கோடைகாலத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக..

இதனையடுத்து வோர்னருக்குப் பதிலாக இலங்கை அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சன்ரைசஸ் ஹைதராபாத் நிர்வாகம், ஆம். நாம் டேவிட் வோர்னருக்குப் பதிலாக இலங்கை அணியின் குசல் பெரேராவை அணியில் விளையாட வேண்டும் என அழைத்துள்ளோம். குசல் பெரேரா, டேவிட் வோர்னரை போன்ற அதிரடித் துடுப்பாட்ட வீரர். கடந்த காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இதனால், நாம் அவரைத் தெரிவுசெய்தோம். ஆனால், இறுதி தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை. எனினும் அவர் விளையாடுவாரா? இல்லையா? என இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள நான்கு மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நாளை(30) ஆரம்பமாகவுள்ளது. இதில் தம்புள்ளை அணிக்கு விளையாடவுள்ள குசல், அந்த அணியின் உதவித் தலைவராகவும் செயற்படவுள்ளார்.

இதனால் குசல் ஜனித் பெரேரா, .பி.எல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, இலங்கை அணி எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்காக தயாராகும் நோக்கில் இந்த மாகாணங்களுக்கிடையிலான 4 நாட்கள் போட்டியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொடர் எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால், .பி.எல் தொடரில் குசல் ஜனித் பங்கேற்கது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், தெரிவுக் குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதி கிடைத்தால் அவர் சன்ரைசஸ் அணிக்காக விளையாடுவார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்மித், வோர்னர், பான்க்ரொப்ட் அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப அழைப்பு

கேப்டவுனில் நடந்த தொன்னாபிரிக்காவுடனான..

இதன்படி, குசல் ஜனித் பெரேரா, இம்முறை .பி.எல் தொடரில் பங்கேற்கும் பட்சத்தில் அவருடைய 2ஆவது .பி.எல் தொடராக இது அமையும். இதற்கு முன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், அண்மையில் நிறைவுக்கு வந்த சுதந்திர கிண்ண T-20 தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும், T-20யில் அதிவேகமாக 1,000 ஓட்டங்களைக் குவித்த முதல் இலங்கை வீரராகவும் இடம்பெற்ற 27 வயதான குசல் ஜனித் பெரேரா, இதுவரையில் 34 T-20 போட்டிகளில் விளையாடி 10 அரைச் சத்தங்கள் அடங்கலாக 1,020 ஓட்டங்களை குவித்துள்ளார். இறுதியாக நடைபெற்ற சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவர் 4 போட்டிகளில் விளையாடி 3 அரைச் சதங்களை விளாசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டேவிட் வோர்னர் .பி.எல் தொடரில் இருந்து விலகியதையடுத்து அவருக்குப் பதிலாக இன்னும் ஒரு சில வீரர்களுடனும் சன்ரைசஸ் ஹைதரபாத் நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் அண்மையில் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடி, இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்ற நியூஸிலாந்தின் 37 வயதான லுக் ரொன்சி, தென்னாபிரிக்காவின் ஹசீம் அம்லா, ஆப்கானிஸ்தானின் மொஹமட் ஷசாத், அவுஸ்திரேலியாவின் ஷோன் மார்ஷ், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் நியூஸிலாந்தின் மார்டின் கப்டில் ஆகிய வீரர்களுடன் அந்த அணி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், சன்ரைசஸ் ஹைதரபாத் அணியின் தலைவராக இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே, சன்ரைசஸ் அணியின் புதிய தலைவர் மற்றும் டேவிட் வோர்னருக்குப் பதிலாக விளையாடவுள்ள வீரர் தொடர்பிலான அறிவிப்புக்களை அந்த அணி நிர்வாகம் இன்னும் இரு நாட்களில் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் சுவையாக கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<