சுதந்திரக் கிண்ண T20 முத்தரப்பு தொடரில் இலங்கையுடனான போட்டியில் மோசமான நடத்தையை வெளிப்படுத்தியதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வருத்தத்தை வெளியிட்டுள்ளது. வீரர்கள் போட்டியின் உணர்வை கடைபிடிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
[rev_slider LOLC]
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்ற பங்களாதேஷ், இந்தியாவுடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எனினும் போட்டியின் பரபரப்பான கடைசி ஓவரில் நோ போல் விவகாரமாக, பங்களாதேஷ் வீரர்கள் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இலங்கை வீரர்களுடனும் மோதலில் ஈடுபட்டனர்.
கிரிக்கெட் உலகிற்கு மோசமான நடத்தைகளை வெளிக்காட்டிய பங்களாதஷ் வீரர்கள்
கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்பதை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் நேற்று
“கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பங்களாதேஷ் அணி மோசமான நடத்தையை வெளிப்படுத்தியதை கிரிக்கெட் சபை ஏற்காது” என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
“போட்டியின் முக்கியத்துவம் காரணமாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றிருப்பதை நாம் புரிந்து வைத்துள்ளோம். எனினும் பதற்றமான சூழலில் அதனை கையாள்வதில் அணியின் செயற்பாடு எதிர்பார்த்த தொழில்முறை கொண்டதாக இல்லை” என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கிரிக்கெட்டின் உணர்வை கடைப்பிடிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதை பங்களாதேஷ் அணி உறுப்பினர்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்” என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சனிக்கிழமை (17) வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
போட்டியின் கடைசி ஓவரில் பங்களாதேஷ் அணி 12 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இசுரு உதான வீசிய முதல் இரண்டு பௌன்சர் பந்துகளையும் முஸ்தபிசுர் ரஹ்மான் தவறவிட்டதோடு ரன் அவுட் ஆனார். எனினும், பந்து அதிகம் உயர எழுந்ததாகக் கூறி பங்களாதேஷ் வீரர்கள் நோ போல் கோரினர்.
அசிங்கமான நடத்தைக்காக சகிப், நூருலுக்கு ஐ.சி.சி அபராதம்
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றுவருகின்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20
இதன்போது, பௌண்டரிக்கு வெளியில் இருந்த அணித்தலைவர் ஷகீப் அல் ஹஸன் கடும் கோபத்தை வெளிப்படுத்தியது மாத்திரமன்றி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறும்படியும் செய்கை செய்தார்.
பங்களாதேஷ் உடைமாற்றும் அறையில் இருந்து மைதானத்திற்கு செய்தி ஒன்றுடன் அனுப்பப்பட்ட மேலதிக வீரரான நூருல் ஹசனும் இலங்கை அணித்தலைவர் திசர பெரேராவுடன் மோதலில் ஈடுபட்டார்.
இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் கடந்த சனிக்கிழமை சகீப் மற்று நூருலுக்கு போட்டி கட்டணத்தில் 25 வீத அபராதம் விதித்தது. போட்டிக்கு இடையூறு செய்ததற்காக இருவருக்கும் தலா ஒரு தண்டப்புள்ளியும் வழங்கப்பட்டது.
பங்களாதேஷ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் கூச்சலிட்டு கோபத்தை வெளிப்படுத்துவதையும், பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பால் அவரை சமாதானப் படுத்துவதையும் காண முடிந்தது.
போட்டி முடிந்த விரைவிலேயே பங்களாதேஷ் அணி உடைமாற்றும் அறையின் கண்ணாடி கதவு உடைந்திருக்கும் சம்பவம் மேலும் விமர்சனத்திற்கு உள்ளானது.
Photos: Sri Lanka vs Bangladesh – Nidahas Trophy 2018 Match #6
ThePapare.com | Viraj Kothalawala | 16/03/2018 Editing
“பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகளுக்கு இடையே ஆழமான வேரூன்றிய வரலாறு கொண்ட பிணைப்பு உள்ளது. ஒத்துழைப்புடன் செயற்படும் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையிலான உறவு நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது” என்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது, “சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சுதந்திரக் கிண்ண தொடரை ஒற்றுமையோடு முடிவுக்கு கொண்டுவர நாம் எதிர்பார்த்துள்ளோம். இந்த தொடர் அதிக போட்டி உணர்வு கொண்டதாகவும் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை வரவேற்பதாகவும் உள்ளது. இதற்கான முழு பெருமையும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு சேர வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்பதை இட்டு பங்களாதேஷ் அணி பெருமை கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.