ஐ.சி.சியின் விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறிவரும் இலங்கை அணி

1564

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) விதிமுறைகளை மீறும் வகையில் அண்மைக்காலமாக தொடர்ந்து மந்த கதியில் பந்துவீசி வருவது இலங்கை அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

[rev_slider LOLC]

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது நடைபெற்றுவரும் முத்தரப்பு T-20 தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. இது போட்டியை தாமதப்படுத்தும் செயல் என .சி.சியின் மத்தியஸ்தர் கிரிஸ் ப்ரோட் குற்றம் சாட்டியிருந்தார்.

சுதந்திர கிண்ணத் தொடரில் போட்டித் தடையைப் பெறும் சந்திமால்

இலங்கை அணித்தலைவரான தினேஷ் சந்திமால்…

இதன்படி, .சி.சியின் வீரர்கள் ஒழுங்குமுறைக் கோவைகளின் அடிப்படையில், மந்த கதியில் ஓவர்கள் வீசிய குற்றச்சாட்டுக்காக இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதுடன், இலங்கை அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.  

இந்நிலையில், பங்களாதேஷ் அணியுடன் நேற்று(14) நடைபெற்ற லீக் போட்டியில் 17 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதனையடுத்து இந்த தொடரில் தலா இரண்டு தோல்விகள் ஒரு வெற்றியை பெற்றிருக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இறுதிப் போட்டிக்காக பலப்பரீட்சை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த தொடரின் கடைசி லீக் போட்டியாக நாளை(16) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி அரையிறுதிப் போட்டியாக மாறியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்தியாவின் வெற்றியோடு அரையிறுதியாக மாறியிருக்கும் இலங்கை – பங்களாதேஷ் மோதல்

ரோஹித் ஷர்மாவின் அபார துடுப்பாட்டத்தின் உதவியோடு..

எனினும் நிகர ஓட்ட வீத அடிப்படையில் இலங்கை அணி பங்களாதேஷை விடவும் முன்னிலையில் இருப்பதால், இலங்கை அணிக்கு சாதகமான சூழல் தொடர்ந்து நீடிக்கிறது.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட வீரர்களுக்கான ஒழுக்க கோவையின்படி மந்த கதியில் பந்துவீசி தொடர்ந்து போட்டித் தடைகளுக்கு உள்ளாகிய அணிகளில் முன்னிலை அணியாக இலங்கை வலம்வந்து கொண்டிருக்கின்றது. இதில் கடந்த 10 மாதங்களில் மூன்று தடவைகள் இலங்கை அணியின் தலைவர்கள் மந்த கதியில் பந்துவீசிய குற்றச்சாட்டில் போட்டித் தடைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த வருடம் ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மந்த கதியில் பந்துவீசிய குற்றச்சாட்டில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட உபுல் தரங்கவுக்கு 2 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதே குற்றத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தியாவுடனான ஒரு நாள் போட்டித் தொடரின்போது மீண்டும் தரங்க செய்திருந்தார். இதனையடுத்து அவருக்கு 2 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், 6 போட்டிகள் முதல் 8 போட்டிகள் வரையான போட்டிகளில் இடைநீக்கம் செய்வதற்கான குறைமதிப்பு புள்ளிகளையும் பெற்றுக்கெண்டார்.

உள்ளுர் போட்டிகளில் தொடர்ந்து கலக்கும் மாலிங்கவின் மற்றுமொரு மைல்கல்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான..

இதுதொடர்பில் இலங்கை தெரிவுக் குழுவின் தலைவர் கிரேம் லெப்ரோய் க்ரிக் பஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிடுகையில், ”இலங்கை அணியை பின்தொடரும் இந்தப் பிரச்சினை மிகவும் கவலையளிக்கின்றது. எனவே இதுகுறித்து உடனடியாக அனைத்து வீரர்களுடனும் கலந்துரையாட வேண்டும்.

போட்டியின் போது அடிக்கடி பல விவாதங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. பொதுவாக போட்டியின் முக்கிய கட்டங்களில் அணித்தலைவர் சிரேஷ்ட வீரர்களை அழைத்து கலந்துரையாடி வியூகங்களை மேற்கொள்ள முடியும். அதிலும் பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்களை வீசுவதற்கு நேரம் எடுத்துக்கொள்வது பெரிய விடயம் அல்ல. ஆனால் நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர் எமது வீரர்கள் பந்துவீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்கள்” என அவர் இதன்போது தெரிவித்தார்.