ஆசிய நகர்வல ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்கள் இருவர்

222
Nilani and Samantha

14ஆவது ஆசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் நாளை(15) சீனாவின் கியாங் நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை சார்பாக 2 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.  2 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட இப்போட்டித் தொடரானது சீனாவின் நேரப்படி நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் நுவரெலியாவில் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியான நகர்வல ஓட்டப் போட்டியில் சுயாதீன வீரர்களாகக் கலந்துகொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சமன்த புஷ்பகுமாரவும், நிலானி ரத்னாயக்கவும் இம்முறை ஆசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டனர்.

தேசிய நகர்வல ஓட்ட சம்பியன்களாக முடிசூடிய சந்திரதாசன், மதுஷானி

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்…

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்ற ஆசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் அங்குரார்ப்பண போட்டிகள் 1991ஆம் ஆண்டு ஜப்பானின் புகுஓகா மாநிலத்தில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் ஜப்பானும், பெண்கள் பிரிவில் வட கொரியாவும் வெற்றிகளைப் பதிவுசெய்தன.

இதேநேரம், சுமார் 20 வருட கால வரலாற்றைக் கொண்ட ஆசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் ஜப்பான், சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிக வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளாக வலம்வருவதுடன், 2005ஆம் ஆண்டு முதல் கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் வெற்றிகளைப் பெற்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, 2001ஆம் ஆண்டு நேபாளம்கத்மண்டுவில் நடைபெற்ற ஆசிய நகர்வல போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் குழு நிலை சம்பியனாக இலங்கை அணி தெரிவாகியிருந்தது.  

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி, பதக்கப்பட்டியலில் இலங்கை அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் 10ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது