இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான T20 தொடரின் 11 போட்டிகள் இன்று (02) நடைபெற்றன.
தொடர்ந்து வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை பெற்றதோடு சோனகர் விளையாட்டுக் கழகம், NCC, கொழும்பு கிரிக்கெட் கழக அணிகள் தோல்வியுறாத அணிகளாக தொடரில் சோபித்து வருகின்றன.
இவ்வாண்டு உள்ளூர் T20 தொடரில் முதல் முறை விக்கெட் வீழ்த்த தவறிய மாலிங்க
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும்…
கொழும்பு, NCC மைதானத்தில் தமிழ் யூனியன் கழகத்தை எதிர்கொண்ட கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் போட்டியை எந்த நெருக்கடியும் இன்றி 6 விக்கெட்டுகளால் வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடி தமிழ் யூனியன் கழகம் 77 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில் கோல்ட்ஸ் அணி 11 ஓவர்களில் இலக்கை எட்டியது. சீரற்ற காலநிலையால் ஆட்டம் 13 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதன்மூலம் அந்த அணி டீ குழுவில் ஐந்து வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதனிடையே D குழுவுக்கான போட்டியில் பதுரெலிய விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட சோனகர் விளையாட்டுக் கழகம் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டி அந்த குழுவில் முதலிடத்திற்கு முன்னேறியது.
கொழும்பு, ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழகத்திற்கு மத்திய வரிசையில் வந்த சஞ்சய சதுரங்க 45 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அந்த அணி 155 ஓட்டங்களை பெற்றதோடு பதிலெடுத்தாடிய பதுரெலிய விளையாட்டுக் கழகம் 17 ஓவர்களுக்கு பட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் 114 ஓட்டங்களையே பெற்றது.
சிலாபம் மேரியன்ஸ் அணியை எதிர்கொண்ட NCC அணி சீரற்ற காலநிலையால் 13 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் 123 ஓட்டங்களை பெற்றது. பதிலெடுத்தாடிய சிலாபம் மேரியன்ஸ் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய 54 ஓட்டங்களுக்கே சுருண்டது.
புனிதர்களின் போரின் முதல் நாள் புனித பேதுரு கல்லூரி வசம்
கொழும்பில் கிரிக்கெட்டுக்கு …
கொழும்பு, BRC மைதானத்தில் நடந்த போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்தை 4 விக்கெட்டுகளால் வென்றதன் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழகம் A குழுவில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்த அணி இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வென்றதோடு ஒரு ஆட்டம் சமநிலையானது.
இதில் சில போட்டிகள் சீரற்ற காலநிலை காரணமாக 20க்கும் குறைவான ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதோடு பல அணிகளும் வேகமாக ஓட்டங்கள் பெறுவதற்கு தவறின.
எனினும் பாணந்துறை விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்காக ஆரம்ப வீரர் ரவிந்து குணசேகர 64 பந்துகளில் ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களை விளாசினார். இவர் கனடா தேசிய அணிக்கு ஆடுபவராவார். இதுவரை தொடரில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். இதன் மூலம் செரசன்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
போட்டிகளின் சுருக்கம்
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை கிரிக்கெட் கழகம்
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 144/8 (20) – ரமேஷ் மெண்டிஸ் 31, அனுக் பெர்னாண்டோ 27, ஜனித் சில்வா 4/30, அஜந்த மெண்டிஸ் 2/27, துஷான் விமுக்தி 2/29
இலங்கை இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 145/8 (19.4) – அஜந்த மெண்டிஸ் 27*, ஜனித் சில்வா 26, அஷான் ரன்திக்க 24, ரமேஷ் மெண்டிஸ் 3/16
முடிவு – இராணுவப்படை கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றி
சகிப் அல் ஹசனின் மீள்வருகையில் தொடரும் சர்ச்சை
இலங்கை, இந்தியா மற்றும் …
களுத்துறை நகர கழகம் எதிர் BRC
களுத்துறை நகர கழகம் – 100/9 (20) – தேவிந்த் பத்மனாதன் 39, திலகரத்ன சம்பத் 3/13, சுராஜ் ரந்திவ் 3/19
BRC – 101/4 (15.4) – லிசுல லக்ஷான் 22, திலகரத்ன சம்பத் 21, நிபுன் காரியவசம் 3/24
முடிவு – BRC அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC)
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 101/8 (18) – சதுன் டயஸ் 28, லக்ஷான் சதகன் 3/11, வனிந்து ஹசரங்க 2/27
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 105 (16.5) – மாதவ வர்ணபுற 35*, உமேக சதுரங்க 3/18
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 77 (11.3) – பினுர பெர்னாண்டோ 22, நிசல தாரக்க 3/08, பிரபாத் ஜயசூரிய 2/12
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 78/4 (10.3) – சஹன் ஆரச்சிகே 32, பினுர பெர்னாண்டோ 2/19, பிரமோத் மதுஷான் 2/22
முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி
NCC எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்
NCC – 123/7 (13) – அஞ்செலோ பெரேரா 39, லஹிரு உதார 23, மலிந்த புஷ்பகுமார 2/09, அசித்த பெர்னாண்டோ 2/28,
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 54 (13) – மலிந்த புஷ்பகுமார 24*, சச்சித்த பீரிஸ் 2/04, லசித் மாலிங்க 2/09
முடிவு – NCC அணி 69 ஓட்டங்களால் வெற்றி
சுதந்திர கிண்ணத்திற்கான இலங்கை அணி இதுதான்
மார்ச் 6 ஆம் திகதி ஆரம்பமாகும்…
சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்
சோனகர் விளையாட்டுக் கழகம் – 155/8 (17) – சாமர சில்வா 45, சுபேஷல ஜயதிலக்க 33, சரித்த குமாரசிங்க 27, அலங்கார அசங்க 3/22, சஞ்சய சதுரங்க 3/40
பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 114/7 (17) – சஞ்ஜய சதுரங்க 60*,
நதீர நாவல 26, அதீஷ திலஞ்சன 3/17, நிலங்க சதகன் 2/19
முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் 41 ஓட்டங்களால் வெற்றி
காலி கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்
காலி கிரிக்கெட் கழகம் – 148/7 (20) – ஹர்ஷ ரஜபக்ஷ 48, நிலங்க ருக்ஷித 37, அருன தர்மசேன 28, ஹசன்த பெர்னாண்டோ 21, நெலும் குமார 3/13, ரஜீவ வீரசிங்க 2/26
லங்கன் கிரிக்கெட் கழகம் – 133 (19.1) – லக்ஷான் ரொட்ரிகோ 40, மதுரங்க சொய்சா 38, சஜன டி சில்வா 32, கயான் சிறிசோம 2/17, ரவீன் சயர் 2/23, ரஜித் பிரியான் 2/25
முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 15 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம்
இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் – 142/9 (20) – துஷான் ஹேமன்த 40, புத்திக்க ஹசரங்க 27, இஷான் அபேசேகர 23, சனுத்த விக்ரமசிங்க 20, தனுஷ்க தர்மசிறி 3/23
குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் – 133/9 (20) – தனுஷ்க தர்மசிறி 27, சரித் மெண்டிஸ் 20, சரிந்த தசனாயக்க 20, அமில மதுசங்க 2/20, நுவன் சம்பத் 2/23
முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் 9 ஓட்டங்களால் வெற்றி
பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 133 (20) – சிறிமன்த விஜேரத்ன 48, மஹேஷ் பிரியதர்ஷன 20, ஜனித் லியனகே 3/17, குஷான் வீரக்கொடி 3/38, இஷான் ஜயரத்ன 2/12
ராகம கிரிக்கெட் கழகம் – 137/6 (18.1) – லஹிரு திரிமான்ன 45*, லஹிரு மலிந்த 30, அக்ஷு பெர்னாண்டோ 23, மஹேஷ் பிரியதர்ஷன 2/24
முடிவு – ராகம கிரிக்கெட் கழகம்
சுதந்திர கிண்ணத்தின் போது இலங்கை வரும் பாகிஸ்தான் மகளிர் அணி
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்…
இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை விமாப்படை விளையாட்டு கழகம்
இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 99 (18.5) – கயான் மனீஷன் 35, திலிப் தாரக்க 2/10, புத்திக்க சதருவன் 2/13, சொஹான் ரங்கிக்க 2/19, ரொஸ்கோ தட்டில் 2/24
இலங்கை விமாப்படை விளையாட்டுக கழகம் – 95/4 (16.4) – ரொஸ்கோ தட்டில் 2/24, கயான் மனீஷன் 2/01, ரனேஷ் பெரேரா 2/20
முடிவு – இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 160/8 (20) – ருவிந்து குணசேகர 81*, ஹர்ஷ குரே 34, ரியான் கேர்ன் 2/16, சுரேஷ் பீரிஸ் 2/34
பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 107/8 (16.3) – பிரனீத் விஜேசேன 34, ஷஷ்ரிக்க புஸ்ஸேகொல்ல 24, கமிந்து கனிஷ்க 2/14, ருவிந்து குணசேகர 2/28
முடிவு – செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 34 ஓட்டங்களால் வெற்றி (டக்வர்த் லுவிஸ் முறை)