அண்மையில் நிறைவுற்ற பங்களாதேஷ் நாட்டுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின்போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் சகலதுறை அதிரடித் துடுப்பாட்ட வீரரான அசேல குணரத்ன, அடுத்து இடம்பெறவுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
[rev_slider LOLC]
இறுதியாக இடம்பெற்ற பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தின்போது இலங்கை வீரர்கள் களத்தடுப்பிற்கான பயிற்சியொன்றில் ஈடுபட்டிருந்தவேளை களத்தடுப்பிற்காக பாயும் வேளையில் அசேலவில் வலது கையில் உபாதை ஏற்பட்டது.
இறுதி நேரத்தில் இலங்கை T-20 அணியில் இருந்து விலகிய அசேல குணரத்ன
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக இன்று..
தற்பொழுது அவரது உபாதையின் தன்மை ”இரண்டாம் நிலை தோல்பட்டை தசை உபாதை” எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது அசேல இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயல்திறன் மையத்தில் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பெற்று வருகின்றார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின்போது அசேல குணரத்னவின் இடது கைவிரலில் உபாதை ஏற்பட்டது. அதன் பின்னர் நீண்ட கால ஓய்வைப் பெற்ற அவர் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் இடம்பெற்ற ஒரு நாள் தொடரிலேயே இலங்கை அணியுடன் ஐந்து மாதங்களின் பின்னர் மீண்டும் இணைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு நிலைமையிலேயே அவர் தற்பொழுது மீண்டும் உபாதைக்கு உள்ளாகி, அடுத்த தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கு கொள்ளும் சுதந்திர கிண்ண தொடர், எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி R. பிரேமதாஸ அரங்கில் இடம்பெறும் இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மோதலுடன் ஆம்பமாகின்றது.
இத்தொடரின் லீக் மட்டப் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் இரு தடவைகள் மோதவுள்ளன. இதில் முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள் 18ஆம் திகதி நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும். தொடரின் அனைத்துப் போட்டிகளும் R. பிரேமதாஸ அரங்கிலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்தரப்பு T-20 தொடருக்கு இந்திய அணியில் பல மாற்றங்கள் இடம்பெறலாம்
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள …