ஓய்விலிருந்து திரும்புகிறார் மஷ்ரபி மொர்தஸா?

1234
Mashrafe Mortaza

இலங்கை அணிக்கெதிராக கடந்த வருடம் நடைபெற்ற இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரோடு சர்வதேச T–20 அரங்கில் இருந்து ஓய்வுபெற்ற பங்களாதேஷ் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான மஷ்ரபி மொர்தஸாவை, சர்வதேச T–20 போட்டிகளுக்கு மீளத் திரும்புமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக கோரியுள்ளது

வீரர்களின் திறமைக்குதான் வெற்றி கிடைத்தது என்கிறார் ஹத்துருசிங்க

இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷில்…

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ள முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர் இலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இதற்கான குழாமை அறிவிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுப்பதற்கு முன் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது இலங்கை அணியுடனான தொடர் தோல்வி மற்றும் சிரேஷ்ட வீரர்களின் உபாதைகளை கருத்திற்கொண்டு மொர்தஸாவை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புமாறு கோரிக்கை விடுப்பதற்கும், அவ்வாறு மீண்டும் அணியில் இணைந்துகொள்ள விரும்பினால் அவரை சந்தோஷமாக வரவேற்கிறோம் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சுதந்திர கிண்ண T–20 தொடரில் உபாதைக்குள்ளாகியுள்ள சகிப் அல் ஹசன் அணிக்கு திரும்புவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முத்தரப்பு தொடருக்கான பங்களாதேஷ் அணியை வழிநடாத்துவதற்கு மஷ்ரபியை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், மஷ்ரபி தொடர்பாக நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். ஆனால் முடிவு முற்றுமுழுதாக அவரின் கைகளில் தங்கியுள்ளது. நான் மஷ்ரபியுடன் தனிப்பட்ட முறையில் பேசினால் அவர் மீண்டும் விளையாடுவார் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு T–20 தொடரில் அவர் விளையாட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் அவரிடம் கேட்டிருந்தேன். ஆனால் கட்டாயப்படுத்தவில்லை. எனினும், கடந்த சில வாரங்களுக்கு முன் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாடுவதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். எனவே, தற்போது அணியில் உள்ள முஸ்தபிசூர் ரஹ்மானைப் போல மஷ்ரபி மொர்தஸாவும் எமது அணியின் முக்கிய பந்துவீச்சாளர்” என அவர் இதன்போது தெரிவித்தார்.

நாளை டுபாயில் ஆரம்பமாகும் 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 தொடர்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால்…

இந்நிலையில் பயிற்சியாளர் குறித்து அவர் கருத்து வெளியிடும் போது, எமக்கு சிறந்த பயிற்சியாளர் ஒருவர் இல்லாமை மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திக்க ஹத்துருசிங்கவும் நல்ல பயிற்சியாளர். ஆனால் அவரைப் போல இந்த அணியை மறுசீரமைத்து வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் திறமையைக் கொண்ட நிறைய பயிற்சியாளர்கள் உள்ளனர்.

எனினும், கடந்த நான்கு வருடங்களாக ஒரு திட்டத்துடன் அவர்கள் வேலை செய்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த முறை நாம் அதனை இழந்துவிட்டோம். உரிய திட்டமிடல், மூலோபாயம், மன வலிமை மற்றும் அணியாக விளையாடுவதில் குறைபாடுகள் இருப்பதை இலங்கை அணியுடனான தொடரின் போது நன்கு அவதானித்தோம். எனவே எமக்கு உடனடியாக உயர் தரமான பயிற்சியாளர் ஒருவர் தேவை. அவ்வாறு எமக்கு சிறந்த பயிற்சியாளர் கிடைத்தால் இந்த அணியின் நிலைமை மிகவும் நல்ல நிலைக்கு மாறிவிடும். ஆனால் இனிமேலும் வீரர்களுக்கு சுதந்திரம் கொடுக்க முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.

34 வயதான வேகப்பந்து வீச்சாளரான மஷ்ரபி, இதுவரை 54 T–20 போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் பீரிமியர் லீக் T–20 தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற ராங்பூர் ரைடர்ஸ் அணிக்கு தலைவராக செயற்பட்டு 15 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

எனினும், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இலங்கை அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தின் போது இறுதியாக பங்களாதேஷ் T–20 அணியின் தலைவராகச் செயற்பட்ட மஷ்ரபி மொர்தஸா, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் T–20 அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததுடன், 2019 உலகக் கிண்ணம் வரை ஒரு நாள் அணிக்காக விளையாடுவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சகீப் அல் ஹசனை T–20 அணித் தலைவராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.      

>> மேலும் பல சுவையான கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<