இலங்கை அணிக்கெதிரான முதலாவது T-20 போட்டியில் பெற்றுக்கொண்ட தோல்விக்கு சகீப் அல் ஹசன் விளையாடாமல் போனது காரணம் அல்ல, அவர் விளையாடினாலும் இந்த தோல்வியை பங்களாதேஷ் அணி சந்திக்க நேரிடும் என இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.
[rev_slider LOLC]
பங்களாதேஷ் அணிக்கெதிராக நேற்று(15) நடைபெற்ற முதலாவது T-20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி, இதனை தாம் T-20 அரங்கில் பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாக பதிவாக்கியதுடன், இறுதியாக தாம் விளையாடிய 8 T-20 போட்டிகளிலும் பெற்ற தோல்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
சாதனையுடன் T-20 போட்டிகளின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நிறைவடைந்திருக்கும், T-20 …
இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான T-20 போட்டியில் 176 என்ற இலக்கை எட்டி வெற்றிபெற்றிருந்தமையே இலங்கை அணியின் சாதனையாக பதிவாகியிருந்தது.
இவ்வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலகவின் ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டம், குசல் மெண்டிஸின் கன்னி T-20 அரைச்சதம் மற்றும் தனுஷ்க குணதிலகவின் கன்னி T-20 விக்கெட் என்பவற்றை குறிப்பிடலாம். இந்நிலையில், போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்விரு வீரர்களும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
வெற்றி குறித்து தனுஷ்க குணதிலக கருத்து வெளியிடுகையில், ”துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளமாக இது அமைந்தது. எனவே நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைப் பெற்றால் போட்டியில் வெற்றிபெற முடியும் என நாம் முன்னதாகவே பேசிக் கொண்டோம். இந்த ஆடுகளத்தைப் பொறுத்தமட்டில் 190 ஓட்டங்கள் என்பது எமது துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகப் பெரிய ஓட்ட இலக்காகவே அமையவில்லை. இதன்படி, நாம் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடிகளை கொடுத்திருந்தோம். இதுதான் பங்களாதேஷ் அணியின் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
நாம் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடியிருந்தது போல தற்போது T-20 போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்துள்ளோம். இது எமது அணி குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்ட மிகப் பெரிய வளர்ச்சி என்றே சொல்லாம். அதுமாத்திரமின்றி பங்களாதேஷ் அணி, தமது சொந்த மண்ணில் அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடி வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட அணியாக இருந்து வந்தது. எனவே அவர்கள் T-20 தொடரிலும் மோசமாக விளையாடுவார்கள் என்று ஒருபோதும் கணித்துவிட முடியாது. அதிலும், குறிப்பாக பி.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய பெரும்பாலான வீரர்கள் தான் இந்த குழாமில் இடம்பெற்றிருந்தனர்” என அவர் தெரிவித்தார்.
சகீபின் இடத்தை நஸ்முல் எவ்வாறு நிரப்புவார்?
இலங்கை அணிக்கு எதிராக நாளை(15) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட …
இந்நிலையில், பங்களாதேஷ் அணியின் தொடர் தோல்விகளுக்கு அவ்வணியின் தலைவர் சகிப் அல் ஹசன் விளையாடாமையே முக்கிய காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இதுதொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனுஷ்க குணதிலக கருத்து வெளியிடுகையில்,
”அது உண்மைதான். சகிப் மிகவும் திறமையான வீரர். அவர் விளையாடாதது பங்களாதேஷ் அணிக்கு மிகப் பெரிய இழப்பாகும். ஆனால் இந்த தோல்விக்கு காரணம் சகிப் அணியில் இல்லாமல் போனது என்று நீங்கள் எவ்வாறு சொல்ல முடியும்? எமது அணியின் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸும் அனுபவமிக்க சகலதுறை வீரர்தான். அவரும் உபாதை காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோல கடந்த காலங்களில் இலங்கை அணிக்காக T-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுள் ஒருவரான அசேல குணரத்னவும், அதிரடி ஆட்டக்காரரான குசல் ஜனித்தும் இல்லாமல்தான் நாம் இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டோம். எனவே சகிப் இருந்தாலும், பங்களாதேஷ் அணிக்கு இதே தோல்வியைத் தான் சந்திக்க நேரிடும்” என பதிலளித்தார்.
இதேவேளை, குசல் ஜனித் பெரேராவுக்குப் பதிலாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவாகிய குசல் மெண்டிஸ் கருத்து வெளியிடுகையில், ”T-20 அணியில் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அதுவும் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவாகியமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும், பயிற்றுவிப்பாளரும், அணித் தலைவரும் ஒரு நாள் போட்டிகளைப் போல T-20 போட்டிகளிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என போட்டி நடைபெறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தனர்.
கடவுளை நம்பி களத்தில் குதித்த இலங்கையின் எதிர்கால மிஸ்டர் கிரிக்கெட்
சில்வாவின் பொறுப்பான ஆட்டத்தால் குறித்த டெஸ்டில் இலங்கை அணி 215.. தாகத்தில் …
உண்மையில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் நான் சிறப்பாக விளையாடியிருந்தேன். எனவே T-20 போட்டியிலும் எனது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு பயிற்றுவிப்பாளர் தெரிவித்திருந்தார்” என அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு அணித்தலைவர் தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில், ”நாணய சுழற்சியில் வெற்றிபெற முடியாமல் போனது எங்களுடைய அதிஷ்டமாக அமைந்துவிட்டது. உண்மையில் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளைப் போல இந்த ஆடுகளமும் துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளமாக அமையும் என நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அதுவும் 190 ஓட்டங்களை துரத்திச் செல்வதென்பது எமக்கு மிகப் பெரிய அழுத்தத்தை கொடுத்திருந்தது.
எனவே, இடதுகை மற்றும் வலதுகை துடுப்பாட்ட வீரர்களுடன் களமிறங்கினால் நிச்சயம் அவர்களுக்கு சவாலைக் கொடுக்க முடியும் என நாம் தீர்மானித்தோம். இதன்படி தான் நாம் வீரர்களை துடுப்பெடுத்தாடுவதற்கு அனுப்பி வைத்தோம். இறுதியில் அது எமக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. எனவே, எமது வெற்றியின் அனைத்து கௌரவமும் துடுப்பாட்ட வீரர்களையே சாரும்” என தெரிவித்தார்.
>>மேலும் பல சுவையான கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<