டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கொடுக்கும் முறையை அமுல்படுத்த வேண்டும் எனவும், இதனால் இளம் வீரர்கள் T-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதை தடுக்க முடியும் எனவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர கிரிக்கெட் வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்தார்.
[rev_slider LOLC]
டெஸ்ட் அரங்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த உலகின் 5ஆவது வீரராக வலம்வருகின்ற சங்கக்கார, கடந்த வருடம் முதல்தரப் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற T-20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்த மாலிங்க
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக..
இந்நிலையில், ஹொங் கொங் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமான T-20 பிலிட்ஸ் போட்டித் தொடரில் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காக இம்முறையும் விளையாடி வருகின்ற சங்கக்கார, ஏ.எப்.பி சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கிய விசேட செவ்வியிலேயே இந்த விடயம் குறித்து தெரிவித்திருந்தார்.
அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,
”அமெரிக்கா மற்றம் சீனா உள்ளிட்ட நாடுகளில் கிரிக்கெட்டை பிரபல்யமடையச் செய்வதற்கு T--20 போட்டிகள் சிறந்த அடித்தளமாக அமையும் என்பதுடன், உலக கிரிக்கெட்டுக்கு புத்துணர்ச்சியையும், பலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். T-20 போட்டிகளால் கிரிக்கெட் பிரபலமாவது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
ஆனால், பல எதிர்மறையான விடயங்களும் இதில் உள்ளடங்கியுள்ளன. T-20 போட்டிகளின் ஆதிக்கம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டை இளம் வீரர்கள் விரும்பாமல் போகும் நிலை ஏற்படக்கூடாது. அதிலும் குறிப்பாக பல இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதை விட T-20 லீக் போட்டிகளில் விளையாட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஊதியம் தான் முக்கிய காரணம் என்பதை எம்மால் அறிந்துகொள்ள முடியும். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க முதலில் நாம் இதுதொடர்பில் உடனடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து குறைந்தபட்ச ஊதியமொன்றை டெஸ்ட் விளையாடுகின்ற வீரர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் டெஸ்ட் விளையாடுகின்ற அனைத்து வீரர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியமொன்று வழங்கப்படுவதில்லையா என நீங்கள் கேள்வி எழுப்பலாம். உண்மையில், டெஸ்ட் விளையாடுகின்ற முன்னிலை நாடுகள் ஒரு குறிப்பிட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு மாத்திரம் கட்டணங்களை செலுத்துகின்றன. ஆனால் இந்த நடைமுறை ஏன் டெஸ்ட் விளையாடுகின்ற அனைத்து நாடுகளுக்காகவும் அமுல்படுத்தப்படுதில்லை?
வருடத்தின் முதல் டெஸ்ட் வெற்றிக்காக தயாராகவுள்ள இலங்கை
இலங்கை மற்றும் பங்களாதேஷ்..
தற்போது, பல்வேறு டெஸ்ட் விளையாடுகின்ற நாடுகளால் கிரிக்கெட் வீரர்களுக்காக வழங்கப்படும் சர்வதேச போட்டிக்கான கட்டணமும் மிகப் பெரிய அளவில் மாறுபடுகின்றன. அதுவும் பிக் 3 என்றழைக்கப்படுகின்ற இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளின் வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற கட்டணத்தை விடவும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
2017ஆம் ஆண்டு ஈ.எஸ்.பி.என் இணையளத்தளம் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், 1,469,000 அமெரிக்க டொலர்களை ஊதியமாகப் பெற்றுக்கொண்டுள்ளார். மறுபுறத்தில் ஜிம்பாப்வே அணித்தலைவர் கிரேஹம் கிரீமர் 86,000 அமெரிக்க டொலர்களை மாத்திரமே ஊதியமாகப் பெற்றுக்கொண்டுள்ளார். இதிலிருந்து ஒவ்வொரு நாட்டு வீரர்களுக்காகவும் வழங்கப்படுகின்ற போட்டிக் கட்டணம் மற்றும் அந்தந்த நாடுகளின் வீரர்கள் பெற்றக்கொள்கின்ற ஊதியம் தொடர்பிலும் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகின்றதை உணர முடியும்.
அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலியாவின் பிக் பேஷ் T-20 லீக் மற்றும் இந்தியாவின் ஐ.பி.எல் போட்டிகளை பல வாரங்களாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஹொங்காங், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் உள்ளிட்ட சிறிய நாடுகளால் ஏற்பாடு செய்யப்படுகின்ற T-20 போட்டிகளை நடத்துவதற்கு சில நாட்கள் மாத்திரம் அனுமதி வழங்கப்படுகின்றது எனவும் கிரிக்கெட் ஜாம்பவான் சங்கக்கார குற்றம் சுமத்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட் என்பது வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பார்வையில் எப்படி உள்ளது என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். வியாபார நோக்கத்துக்காக உலகின் வளர்ந்துவரும் கிரிக்கெட் நாடுகள் T-20 போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் T-20 போட்டிகள் தான் தமக்கு இலாபத்தைப் பெற்றுக்கொடுக்கின்றது என நினைத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவததை தவிர்த்து வருகின்றனர். இதை தடைசெய்வதற்கு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும் முறையை அமுல்படுத்த வேண்டும் எனவும் சங்கக்கார தெரிவித்தார்.
சிறைக் கைதிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் சங்கா, மஹானாம
சிறைக் கைதிகளும் மனிதர்கள் என வெலிக்கடை சிறைச்சாலை..
இந்நிலையில், உலக கிரிக்கெட்டின் சட்டவிதிமுறைகளை அமுல்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் முன்னிலை அமைப்பாக செயற்பட்டு வருகின்ற மெல்பேர்ன் கிரிக்கெட் கழகம்(எம்.சி.சி), கடந்த மாதம் நடத்திய வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும், டெஸ்ட் வீரர்களுக்கான ஊதியத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மீதான ஆர்வம் குறைவதில் இருந்து வீரர்களையும் ரசிகர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதையும், அதற்கான வழிகளையும் நினைவுபடுத்த சங்கா மறக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக பகலிரவு டெஸ்ட் மற்றும் 4 நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், இதற்காக வீரர்களும், ரசிகர்களும் தமது மனநிலையையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் இன்னும் வலுவான நிலையில் உள்ளது என்று நான் கருதுகிறேன். எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும், அவர்களது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி டெஸ்ட், ஒரு நாள் அல்லது T-20 கிரிக்கெட்டில் விளையாடுவது மிகப் பெரிய கௌரவமாகும். அதுதான் விளையாட்டின் உச்சகட்டமாகவும் அமைந்துள்ளது எனவும் கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும் வீரர்களில் ஒருவராக இருக்கின்ற தெரிவித்தார்.