இன்னிங்ஸ் வெற்றியுடன் இரண்டு நாட்களில் போட்டியை முடித்த சிலாபம் மேரியன்ஸ்

202

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் சுப்பர் 8 சுற்றின் 4 போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் புதன்கிழமை (07) நடைபெற்றன. அதேபோன்று மூன்று பிளேட் சம்பியன்ஷிப் போட்டிகளும் ஆரம்பமாகின.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

ஷெஹான் ஜயசூரியவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் ராகம கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான போட்டியை இரண்டு நாட்களுக்குள் முடித்துக் கொண்ட சிலாபம் மேரியன்ஸ் இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ராகம அணியை சுழலால் துவம்சம் செய்த ஷெஹான் ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் நான்கு …

கொழும்பு, பீ சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 154 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இரண்டாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ராகம கிரிக்கெட் கழகம் 148 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷெஹான் ஜயசூரிய துடுப்பாட்டத்தில் 80 ஓட்டங்களை குவித்தார்.

மறுபுறம் இந்த போட்டியில் வென்ற சிலாபம் மேரியன்ஸ் அணி சுப்பர் 8 சுற்றில் முதலிடத்தில் நீடிப்பதோடு மொத்த 100.08 புள்ளிகளை பெற்று சம்பியனாகும் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 57 (29.2) – அக்சு பெர்னாண்டோ 20, ஷெஹான் ஜயசூரிய 7/22, மலிந்த புஷ்பகுமார 2/08

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 211 (52.3) – ஷெஹான் ஜயசூரிய 80, சச்சித்ர சேரசிங்க 24, நிஷான் பீரிஸ் 4/79, அக்சு பெர்னாண்டோ 3/24, சஹன் நாணயக்கார 2/64

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 148 (40.4) – லஹிரு திரிமான்ன 39, இஷான் ஜயரத்ன 38, ஜனித் லியனகே 31, சச்சித்ர சேரசிங்க 4/33, செஹான் ஜயசூரிய 3/66, மலிந்த புஷ்பகுமார 2/49

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றி


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 318 ஓட்டங்களால் பின்தங்கிய கோல்ட்ஸ் அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க போராடி வருகிறது.

வருடத்தின் முதல் டெஸ்ட் வெற்றிக்காக தயாராகவுள்ள இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் …

கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிஸை தொடர்ந்த இலங்கை துறைமுக அதிகாரசபை அணி 410 ஓட்டங்களை குவித்தது. இங்கிலாந்து வீரர் நிக் கொப்டன் சதத்தை இரண்டு ஓட்டங்களால் தவறவிட்டார்.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி ஆட்டநேர முடிவின்போது 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 92 (26.3) – சானக்க கோமசாரு 5/38, மதுக லியனபதிரனகே 4/44

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 410/9d (113.5) – நிக் கொம்ப்டன் 98, இஷான் ரங்கன 67, கயான் மனீஷன் 54*, நிசல் ரந்திக்க 42, யொஹான் டி சில்வா 40, கிஹான் ரூபசிங்க 33, பிரபாத் ஜயசூரிய 3/115, பிரியமால் பெரேரா 2/34, நிசல தாரக்க 2/73

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 69/3 (28) – பசிந்து லக்ஷங்க 30*, விஷாத் ரன்திக்க 27*, மதுக லியனபதிரணகே 2/11


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் NCC

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக NCC அணி இரண்டாவது இன்னிங்ஸில் 356 ஓட்டங்களால் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த செரசன்ஸ் அணி 132 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் 152 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற NCC அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்   

NCC (முதல் இன்னிங்ஸ்) – 284 (83) – தரிந்து கௌஷால் 131, சதுரங்க டி சில்வா 59, லசித் அம்புல்தெனிய 24*, மொஹமட் டில்ஷாட் 3/38, ரனித்த லியனாரச்சி 2/45, சச்சித்ர பெரேரா 3/72

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 132 (43.5) – ரனித் லியனாரச்சி 37, சாமிக்க கருணாரத்ன 4/38, லசித் அம்புல்தெனிய 3/19, சச்சின்த பீரிஸ் 3/41

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 204/4 (47) – நிமேஷ் குணசிங்க 58, சதுரங்க டி சில்வா 55*, அஞ்செலோ பெரேரா 44, லஹிரு உதார 26, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/49  

தமது அணிகளை மீட்ட லக்ஷித மற்றும் ப்ரபாஷ்

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு – 1…


SSC எதிர் BRC

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் SSC அணிக்கு எதிராக BRC சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க கடுமையாக போராடி வருகிறது.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் BRC அணி 149 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. இதன்படி அந்த அணி 3 விக்கெட்டுகள் மாத்திரம் கைவசம் இருக்க 150 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 200 (63.4) – ஹர்ஷ விதான 77, திலகரத்ன சம்பத் 42, ருமேஷ் புத்திக்க 25, ஆகாஷ் சேனரத்ன 5/52, சச்சித்ர சேனநாயக்க 2/49

SSC (முதல் இன்னிங்ஸ்) – 199 (62) – கௌஷால் சில்வா 42, மினோத் பானுக்க 35, சாமர கபுகெதர 33, சரித் அசலங்க 29, மிலிந்த சிறிவர்தன 23, ஹஷேன் ராமனாயக்க 6/18, சாமிக்கர எதிரிசிங்க 2/40, திலகரத்ன சம்பத் 2/54   

BRC  (இரண்டாவது இன்னிங்ஸ்) – 149/7 (60) – ஹஷேன் ராமனாயக்க 29*, ருமேஷ் புத்திக்க 23, அகாஷ் செனரத்ன 3/25, கசுன் மதுஷங்க 3/40

மூன்று போட்டிகளினதும் மூன்றாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்


பிளேட் சம்பியன்ஷிப் போட்டிகளின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 197 (65) – தரங்க பரணவிதான 69, சிதார கிம்ஹான 42, ரமித் ரம்புக்வெல்ல 28, தினெத் திமோத்ய 24, தினுக்க ஹெட்டியாரச்சி 6/64, சச்சித் பதிரண 2/05   

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 71/0 (23) – ரொன் சந்திரகுப்தா 35*, மலிது மதுரங்க 34*

பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை T-20 குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ள 15 பேர்…

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 173 (51) – நிசல் பிரான்சிஸ்கோ 35, லஹிரு பெர்னாண்டோ 32, கொஷான் தனுஷ்க 31, நிபுன் ஹக்கல 20, சவித் பிரியான் 4/69, டிலேஷ் குணரத்ன 2/25, மதுர லக்மால் 2/25  

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 118/1 (41) – பதும் நிஸ்ஸங்க 65*, சலிது உஷான் 24, டில்ஹான் குரே 20*


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 90 (29.2) – பிரமோஷ் பெரேரா 23*, யசோத மெண்டிஸ் 4/32, துஷான் விமுக்தி 3/18, சீகுகே பிரசன்ன 2/29

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 211 (55.4) –  லியோ பிரான்சிஸ்கோ 58, அஜன்த மெண்டிஸ் 37, யசோத மெண்டிஸ் 29, டில்ஷான் டி சொய்சா 27, எச்.ஆர்.சி. டில்ஷான் 5/75, கோசல குலசேகர 2/36, தரிந்து ரத்னாயக்க 2/36

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 1/0 (2)

மூன்று போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்