முதல்தரமான கிரிக்கெட் விளையாடினால் வெற்றி பெறலாம் – மெதிவ்ஸ்

1646

இலங்கை அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆரம்பத்தைத் தருகின்ற போதிலும் அப்படியான ஆட்டத்தை போட்டியின் இறுதிவரை கொண்டு சென்று பெரிய ஓட்டங்களை குவிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தப் பிரச்சினை பங்களாதேஷில் தற்போது நடைபெற்றுவரும் முக்கோணத்தொடரில் இலங்கை பங்கேற்கும் எஞ்சிய போட்டிகளுக்கு முன்னர் சரிசெய்யப்பட வேண்டும் என இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.   

பங்களாதேஷுடனான மோதலுக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் சந்தேகம்

தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி காரணமாக பங்களாதேஷில் நடைபெற்று வரும்……

இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் தமது முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் 12 ஓட்டங்களால் தோல்வியடைந்த இலங்கை அணி மோசமான பதிவு ஒன்றுடன் இந்த வருடத்தினை (2018) ஆரம்பித்திருக்கின்றது.

“ எங்களுக்காக யாராவது ஒருவர் சதம் ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும், அல்லது இரண்டு வீரர்கள் பெறுமதி கொண்ட அரைச்சதங்களைக் குவிப்பது போதுமானது. இதன் மூலம் எங்களுக்கு முன்னேற முடியும். இந்த விடயங்கள் அனைத்தும் அடுத்த போட்டிகளில் நிச்சயமாக நடைபெறும். “ என மெதிவ்ஸ் கூறியிருந்தார்.

ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியிருந்த மெதிவ்ஸ் தனது தரப்பு துடுப்பாட்ட வீரர்களினால் சாதிக்க முடியும் என்கிற மனப்பாங்குடன் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

“ எல்லோரினாலும் ஒரு போட்டியில் ஓட்டங்களினை குவிக்க முடியாது. எங்களுக்கு பெரேரா சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுத்தந்திருந்தார். எங்களில் இன்னொருவர் 60 அல்லது 70  ஓட்டங்களைக் குவித்திருந்தால், இலகுவாக போட்டியில் வென்றிருக்க முடியும். எங்களுக்கு நல்ல ஆரம்பம் இருந்த போதிலும் அதனை நாங்கள் சரியான முறையில் உபயோகிக்க தவறிவிட்டோம். – நானும் சந்திமாலும் அடுத்த போட்டியில் இதனை மாற்ற முயற்சிப்போம்.”

291 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட இப்போட்டியில் 12 ஓட்டங்களாலேயே இலங்கை தோல்வியுற்றது. குறிப்பாக இலங்கை அணி வீரர்கள் இறுதிவரை போராட்டத்தினை காண்பித்திருந்தனர்.

கட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் இறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில் தொடர்ச்சியாக 2ஆவது…….

“எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது. போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சிறிது மோசமாக செயற்பட்டிருந்தோம். அதாவது முதல் பத்து ஓவர்களுக்கும் அவர்களுக்கு (ஜிம்பாப்வேயிற்கு) சிறப்பான ஆரம்பத்தினை கொடுத்துவிட்டோம்.

தொடர்ந்த ஓவர்களுக்குள் எம்மால் போட்டியின் போக்கினை கட்டுக்குள் கொண்டுவர முடிந்த போதிலும், அவர்கள் விக்கெட்டுக்களை இழக்காத காரணத்தினால் இறுதி ஓவர்களினை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த இறுதி ஓவர்களில் நாங்கள் அதிகமான ஓட்டங்களை அவர்களுக்கு வாரிக்கொடுத்துவிட்டோம். திசர மற்றும் அசேல ஆகியோர் சிறப்பான முறையில் பந்துவீசியிருந்தனர். நாங்கள் களத்தடுப்பிலும் இன்னும் நன்றாக செயற்பட்டிருக்க வேண்டும்“ என இலங்கை அணியின் தலைவர் மேலும் கருத்து தெரிவித்திருந்தார்.

இலங்கை அணி ஜிம்பாப்வேயுடன் இறுதியாக விளையாடிய ஆறு ஒரு நாள் போட்டிகளில் நான்கில் தோல்வியினை தழுவியிருக்கின்றது. இதோடு கடந்த ஆண்டில் விளையாடிய 29 ஒரு நாள் போட்டிகளில் 5 வெற்றிகளை மாத்திரமே இலங்கையினால் பெற முடிந்தது. இப்படியான மோசமான பதிவினை அடுத்து வரும் போட்டிகளில் இலங்கை அணி குறித்த முடிவுகளை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இலங்கை இளையோர் அணி

பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தானிடம்….

“ நாங்கள் எங்களுடைய A தரத்திலான முதல்தர விளையாட்டினை இந்த அணிகளுக்கு காட்ட வேண்டும். இப்படியாக நாங்கள் காட்டுவதில் சில தவறுகளை   விட்டுவிட்டோம்.  எங்களுக்கு இப்போட்டி மூலம் நிறைய நேர்மறையான (Positive) விடயங்களை எடுக்க முடிந்திருக்கின்றது. இன்னும் மூன்று போட்டிகளும் இருக்கின்றன. எனவே, பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

பங்களாதேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் பெரிய அணிகள் அனைத்தினையும் வீழ்த்தியிருக்கின்றது. எனவே, அடுத்த போட்டி கடினமாகவும் சவாலாகவும் இருக்கும். இன்று போன்று நாம் அதில் விளையாட முடியாது. எங்களுக்குரிய பாணியில் நாங்கள் இன்று இருக்கவும் இல்லை. “  எனக்கூறிய மெதிவ்ஸ் பங்களாதேஷ் அணியுடனான சவாலை எதிர்பார்த்திருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் அடுத்ததாக பங்களாதேஷ் அணியுடன் மோதுகின்றது. இப்போட்டி நாளை (19) ஜிம்பாப்வே உடனான போட்டி இடம்பெற்ற அதே மைதானத்தில் ஆரம்பமாகும்.