கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி நேற்று (17) உறுதி செய்துகொண்டது.
டுபாயின் அஜ்மான் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில், இலங்கை கட்புலனற்றோர் அணியை 156 ஓட்டங்களால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி 5ஆவது கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
கட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி புதிய உலக சாதனை
கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில், அணியொன்றினால் …
அதேநேரம் நடப்புச் சம்பியனான இந்திய அணி, பங்களாதேஷ் அணியை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி சார்ஜாவில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிரான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சந்தன தேசப்பிரிய முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 489 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான பதார் முனீர் மற்றும் மொஹமட் ராசித் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 160 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுசேர்த்தனர். இதில் 7 பௌண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசிய பதார் முனீர் 72 ஓட்டங்களுடன் ரன் – அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் அபாரம் காட்டிய மொஹமட் ராசித், இலங்கை பந்து வீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்து சதம் கடந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள, நிஸார் அலி 99 ஓட்டங்களுடன் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சந்தன குமார மற்றும் திமுது ரவீந்திர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
திசர பெரேராவின் அதிரடி வீண்; ஜிம்பாப்வே அணிக்கு த்ரில் வெற்றி
பங்களாதேஷில் இடம்பெறும் முக்கோண ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டியாக…
இதனைத்தொடர்ந்து 490 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை கட்புலற்றோர் அணி 40 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 333 ஓட்டங்களை பெற்று 156 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இதில் இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசித்த அணித்தலைவர் சந்தன தேசப்பிரிய சதம் கடந்து அசத்தினார்.
போட்டியின் ஆட்டநாயககன் விருதை மொஹமட் ராசித் பெற்றுக்கொண்டதுடன், பெறுமதிமிக்க வீரருக்கான விருதை நிசார் அலி பெற்றுக்கொண்டார்.
முன்னதாக இலங்கை அணி தாம் பங்குபற்றிய லீக் போட்டிகளில் அவுஸ்திரேலியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய அணிகளுடனான மோதல்களில் வெற்றிகொண்டதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் தோல்வியைத் தழுவியது.
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் – 489/9 (40) – மொஹமட் ராசித் 139, நிசார் அ லி 99, பதார் முனீர் 72, சந்தன குமார 2/77, திமுத் ரவீந்திர 2/89
இலங்கை – 337/7 (40) – சந்தன தேசப்பிரிய 102, சமன் குமார 45, ருவன் வசந்த 40ழூ
முடிவு – பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணி 156 ஓட்டங்களால் வெற்றி