இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டு உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் 4 போட்டிகள் இன்று ஆரம்பமானது.
பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
பாணந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற விமானப்படை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாணந்துறை விளையாட்டுக் கழக அணிக்கு வழங்கியது.
இதன்படி முதலில் துடுப்பாடிய பாணந்துறை விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. விமானப்படை விளையாட்டுக் கழகம் சார்பாக பந்துவீச்சில் சொஹான் ரங்கிக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 176 (46.4) – சுரேஷ் பீரிஸ் 30, வினோத் பெரேரா 29, முஹமட் ரமீஸ் 26, சொஹான் ரங்கிக 5/52, பிரனீத் ரத்னாயக 3/44
விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 68/1 (16.5) – ஹஷான் ஜேம்ஸ் 37*, உதயவங்ஷ பராக்ரம 25
களுத்துறை நகர் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்
மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற களுத்துறை நகர அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் களுத்துறை நகர அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ஓட்டங்களைக் குவித்துள்ளது. துடுப்பாட்டத்தில் களுத்துறை நகர அணி சார்பாக மதீஷ பெரேரா 122 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தார்.
போட்டியின் சுருக்கம்
களுத்துறை நகர் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 258/6 (75) – மதீஷ பெரேரா 122, எரங்க ரத்னாயக 60*, கீத் பெரேரா 24, கயான் சிரிசோம 6/70
பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகலை இளையோர் விளையாட்டுக் கழகம்
குருநாகலை வெலகெதர மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருநாகலை இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பொலிஸ் விளையட்டுக் கழகத்துக்கு வழங்கியது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சங்கக்காரவினால் யோசனை
இதன்படி முதலில் துடுப்பாடிய பொலிஸ் விளையட்டுக் கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் பொலிஸ் விளையட்டுக் கழகம் சார்பாக தினூஷ பெர்னாண்டோ மற்றும் தரிந்து டில்ஷான் ஆகியோர் அரைச்சதம் கடந்தனர்.
போட்டியின் சுருக்கம்
பொலிஸ் விளையட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 224/5 (90) – தினுஷ பெர்னாண்டோ 61, தரிந்து டில்ஷான் 52, சமித் துஷாந்த 34*, வைபர் யாதவ் 29, துஷித டி சொய்சா 2/49
கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு விளையாட்டுக் கழகம்
வெலிசறை கடற்படை விளையாட்டு மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நீர்கொழும்பு அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை கடற்படை அணிக்கு வழங்கியது.
இதன்படி முதலில் துடுப்பாடிய கடற்படை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ஓட்டங்களைப் பெற்றுள்ளது
போட்டியின் சுருக்கம்
கடற்படை விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 252/6 (83.3) – குசல் எடுசூரிய 100*, புத்திக்க ஹசரங்க 80, சுபுன் லீலரத்ன 27, ஷெஹான் வீரசிங்க்ஹ 2/29, ரோஷேன் பெர்னாண்டோ 2/52
இப்போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.