இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த மஹாநாம, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகள்

206

19 வயதின் கீழான பாடசாலை அணிகளுக்கு இடையில் சிங்கர் கிண்ண (இரண்டு நாட்கள் கொண்ட) கிரிக்கெட் தொடரில் இன்று (09) ஐந்து போட்டிகள் முடிவடைந்தது.

மஹநாம கல்லூரி, கொழும்பு எதிர் சென். ஜோன்ஸ் கல்லூரி, பாணதுறை

பண்டாரகம பொது மைதானத்தில் இடம்பெற்று முடிந்த இந்தப் போட்டியில் மஹாநாம கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்களால் பாணதுறை சென். ஜோன்ஸ் கல்லூரியை வீழ்த்தியது.

மஹநாம கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை (223) அடுத்து தங்களது முதல் இன்னிங்சில் ஆடிய, ஜோன்ஸ் கல்லூரி வீரர்கள் 92 ஓட்டங்களுக்கு சுருண்டனர். இந்த ஓட்டங்கள் போதாது என்பதால் மீண்டும் பலோவ் ஒன் (Follow on) முறையில் இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாடி சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினால் 67 ஓட்டங்களையே பெற முடிந்தது இதனால் அவர்கள் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவினர்.

>> விஷ்வ சத்துரங்கவின் சதத்தோடு வலுவடைந்திருக்கும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி << 

இப்போட்டியில் ஹெஷான் ஹெட்டியராச்சி மொத்தமாக 9 விக்கெட்டுக்களையும், ஹெஷான் சந்தீப மொத்தமாக 8 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி கொழும்பு மஹநாம கல்லூரியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 223 (63.3) – பிஷான் மெண்டிஸ் 57, பவந்த வீரசிங்க 38, சசித்த மனுப்பிரிய 4/99, தமிந்து விக்ரமாராச்சி 3/52

சென். ஜோன்ஸ் கல்லூரி, பாணதுறை (முதல் இன்னிங்ஸ்) – 92 (30.1) – ப்ரவீன் சந்மல் 37, தமிந்து விக்ரமாராச்சி 21, ஹெஷான் ஹெட்டியராச்சி 5/33, ஹஷான் சந்தீப 3/24, இஷான் கடுபிடிய 2/16

சென். ஜோன்ஸ் கல்லூரி, பாணதுறை (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 67 (32.3) – ருக்ஷான் திஸ்ஸானாயக 24, ஹஷான் சந்தீப 5/12, ஹெஷான் ஹெட்டியராச்சி 4/42

முடிவு – மஹாநாம கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்களால் வெற்றி

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ எதிர் புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை

வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி அணியை இப்போட்டியில் மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி வீரர்கள் இன்னிங்ஸ் மற்றும் 88 ஒட்டங்களால் தோற்கடித்திருந்தனர்.

நேற்று (8) புனித அந்தோனியர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடியிருந்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியினர் விஷ்வ சத்துரங்கவின் அபார சதத்தோடு முதல் இன்னிங்சை 323 ஓட்டங்களுடன் முடிந்திருந்தனர். பதிலுக்கு தங்களது முதல் இன்னிங்சில் ஆடிய புனித அந்தோனியார் கல்லூரி வீரர்களுக்கு இன்றைய நாளில் மொத்தமாக 123 ஓட்டங்களையே பெற முடிந்தது. கெளமால் நாணயக்கார பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்காக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

முதல் இன்னிங்சில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் மீண்டும் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த புனித அந்தோனியர் கல்லூரி அணியானது 112 ஓட்டங்களை மாத்திரம் குவித்து எதிரணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை தாண்ட முடியாமல் தோல்வியடைந்தது. இம்முறை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிக்காக தரிந்து பீரிஸ் 6 விக்கெட்டுக்களைச கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 323/8d (61.1) – விஷ்வ சத்துரங்க 142, தரிந்து பீரிஸ் 61, வினுஜ ரன்புல் 44, கவீஷ துலஞ்சன 3/63, மதுக ஹெட்டியாராச்சி 2/57

புனித அந்தோனியர்  கல்லூரி, வத்தளை (முதல் இன்னிங்ஸ்) – 123 (59) – மதுக்க ஹெட்டியாராச்சி 54, கெளமல் நாணயக்கார 5/57, நதுக்க பெர்னாந்து 3/14

புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 112 (32.4) – அவிஷ்க  தரிந்து 51, தரிந்து பீரிஸ் 6/29, கெளமல் நாணயக்கார 2/54

முடிவு – பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் வெற்றி

குருகுல கல்லூரி, களனி எதிர் ஜனாதிபதி கல்லூரி, கோட்டை

ஜனாதிபதி கல்லூரி மற்றும் களனி குருகுல கல்லூரி அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி சமநிலை அடைந்தது.

ஜனாதிபதி கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் முதல் இன்னிங்சில் (226) மைதான சொந்தக்காரர்கள் துடுப்பாடிய பின்னர் விருந்தாளிகளான குருகுல வீரர்கள் தமது முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர். பந்துவீச்சில் ஹசிந்து ப்ரமுக்க 6 விக்கெட்டுக்களை ஜனாதிபதி கல்லூரிக்காக வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதி கல்லூரி அணி 88 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடி 250 ஓட்டங்களுக்கு ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. விரங்க அஷான் அபார சதம் ஒன்றினை இந்த இன்னிங்சில் ஜனாதிபதி கல்லூரிக்காக குவித்திருந்தார். பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 339 ஓட்டங்கள் குருகுல கல்லூரிக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய அவர்கள் 148 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

>> இளையோர் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு முதல் தோல்வி <<

இதனால் ஆட்டம் சமநிலையுற்றது. குருகுல கல்லூரிக்காக இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் தெமிர நயணத்தரு மற்றும் லசிந்து அரோஷ ஆகியோர் அரைச்சதம் பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி, கோட்டை (முதல் இன்னிங்ஸ்) – 226 (58.1) – இரங்க ஹஷான் 47, றிபாஸ் மஹ்ரூப் 45, மலிந்து விதுரங்க 4/19

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்) – 138 (32.5) – ப்ரவீன் நிமேஷ் 58, லசிந்து அரோஷ 33, ஹசிந்து ப்ரமுக்க 6/29

ஜனாதிபதி கல்லூரி, கோட்டை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 250/6d (74.2) – விரங்க அஷான் 104, ஹிருன சிகெரா 59, ப்ரவீன் நிமேஷ் 2/27

குருகுல கல்லூரி, களனி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 148/3 (21) – தெமிர நயணத்தரு 68, லசிந்து அரோஷ 55*

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை

காலி சர்வதேச மைதானத்தில் முடிவடைந்த அலோசியஸ் கல்லூரி மற்றும் புனித செபஸ்டியன் கல்லூரி அணிகள் இடையிலான இந்தப் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

நேற்று (8) தொடங்கிய இந்தப் போட்டியில் அலோசியஸ் கல்லூரியின் முதல் இன்னிங்சை (136) அடுத்து புனித செபஸ்டியன் கல்லூரி தங்களது முதல் இன்னிங்சில் 196 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நிசித்த அபிலாஷ் செபஸ்டியன் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் கடந்திருந்தார். மறுமுனையில் ரவிந்து சஞ்சன மற்றும் கவிக தில்ஷான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் அலோசியஸ் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தனர்.

செபஸ்டியன் கல்லூரியின் முதல் இன்னிங்சைத் தொடர்ந்து 60 ஓட்டங்கள் பின்தங்கி காணப்பட்ட நிலையில், அலோசியஸ் கல்லூரி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 145 ஓட்டங்களைக் குவித்தது. தாஷிக் பெரேரா 6 விக்கெட்டுக்களை செபஸ்டியன் கல்லூரியின் பந்து வீச்சில் பெற்றிருந்தார்.

அலோசியஸ் கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 86 ஓட்டங்கள் புனித செபஸ்டியன் கல்லூரிக்கு தேவைப்பட்டிருந்தது. இதனை அடைய துடுப்பாடிய அவர்கள் 11 ஓவர்கள் நிறைவில் 29  ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது ஆட்டம் சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) -136 (60) – ரவிந்து சஞ்சன 70, வினுஜ ரணசிங்க 8/41

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 196 (61.1) – நிசித்த அபிலாஷ் 71, சுகித்த பிரசன்ன 49, ரவிந்து சஞ்சன 4/31, கவிக தில்ஷான் 4/44

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 145 (56.1) – நிலுக்ஷ துல்மின 53, தாஷிக் பெரேரா 6/38

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 29/4 (11)

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

வெஸ்லி கல்லூரி, கொழும்பு எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

கண்டி தர்மராஜ கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரி அணிகள் இடையிலான இந்தப் போட்டி சமநிலை அடைந்தது.

தர்மராஜ கல்லூரியின் சொந்த மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் இமலாய ஓட்டங்களை முதல் இன்னிங்சில் (352) வெஸ்லி வீரர்கள் குவித்திருந்தனர். பின்னர், தமது முதல் இன்னிங்சில் ஆடிய மைதான சொந்தக்காரர்களுக்கு 211 ஓட்டங்களையே பெற முடிந்தது. பவந்த உடன்கமுவ 89 ஓட்டங்களை தர்மராஜ கல்லூரிக்காக குவிக்க, மொஹமட் உபைதுல்லா மற்றும் மொவின் சுபசிங்க ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் வெஸ்லி கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தனர்.

>> முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு << 

தொடர்ந்து தர்மராஜ கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்கள் போதாது என்பதால் தர்மராஜ கல்லாரி இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்திருந்தது. அந்தவகையில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்களை இரண்டாம் இன்னிங்சில் தர்மராஜ கல்லூரி அணி பெற்றிருந்த போது போட்டியின் நேரம் முடிவடைய ஆட்டம் சமநிலை அடைந்தது. சசிந்த சேனநாயக்க இந்த இன்னிங்சில் தர்மராஜ கல்லூரிக்காக சதம் ஒன்றைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி (முதல்  இன்னிங்ஸ் ) – 352/8d (69.3) – மொவின் சுபசிங்க 103, புத்திம விஜேசுந்தர 75, ராகுல் குணசேகர 53, ஹசித் கீசர 51, உபேந்திர வர்ணகுலசூரிய 4/89

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 211 (76.2) – பவந்த உடன்கமுவ 89, மொவின் சுபசிங்க 4/40, மொஹமட் உபைதுல்லா 4/57

தர்மராஜ கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 186/4 (40) – சசிந்த சேனநாயக்க 104*

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

இன்று ஆரம்பமாகிய ஏனைய போட்டிகளின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் தர்ஸ்ட்டன் கல்லூரி

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 363/8d (72) – அஷான் பெர்னாந்து 102*, கெவின் பெரேரா 102, அயெஷ் வீரரத்ன 3/64

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 65/4 (14.4)

ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 203 (76) – தவீஷ அபிஷேக் 63, சதுன் மெண்டிஸ் 53, ஷிவான் பெரேரா 3/27, மொஹமட் அமீன் 2/72

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 51/1 (18) – சுலக்ஷன பெர்னாந்து 23*

இந்தப் போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்