இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை புரிய வந்திருக்கும் அவுஸ்திரேலிய உளவியலாளர்

1248

அவுஸ்திரேலிய அணியின் பிரபல விளையாட்டு உளவியல்  நிபுணர் Dr. பில் ஜோன்சி, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் தரத்தை முன்னேற்றும் நோக்கோடு அவர்களுக்கு உதவி ஆலோசனைகள் வழங்க இலங்கை வந்திருக்கின்றார். அந்த வகையில் ஜோன்சி அவர்களின் முதல் ஆலோசனை முகாம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்றது.

“நாங்கள் எமது புதிய பயிற்றுவிப்பளார் சந்திக்க ஹதுருசிங்கவின் வேண்டுகோளின் நிமித்தம்  ஜோன்சியினை எங்களுக்காக வேலை செய்ய அழைத்திருக்கின்றோம். ஹதுருசிங்கவுக்கு எங்களது வீரர்களுடன் ஜோன்சி இருந்து வேலை செய்வது தேவையாக இருந்தது“ என இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்திருந்தார்.  

தற்போது இலங்கை அணிக்காக வேலை செய்ய வந்திருக்கும் ஜோன்சி, விளையாட்டு வீரர்கள் போட்டிகளைக் கையாளும் விதத்தினை ஆய்வு செய்யும் விஷேட உளவியல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் போட்டிகளில் ஒவ்வொரு வீரரினதும் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்தவுள்ளதோடு, ஒவ்வொரு வீரருக்கும் எப்படியாக பயிற்றுவிப்பளார் பயிற்சி வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என்பதையும் ஆராயவிருக்கின்றார்.

தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா

ஜோன்சி, உளவியலுக்கும் ஆலோசனை வழங்கலுக்குமான கற்கை நெறியில் அதி உயர்ந்த கலாநிதி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அவுஸ்திரேலியாவின் கிரிபித் (Grifith) பல்கலைக்கழகம் மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் போன்றவற்றில் உளவியல் சம்பந்தமான விரிவுரையாளராகவும் கடமை புரிந்திருக்கின்றார்.   

ஏனைய பலவேலைகளோடு சேர்த்து ஜோன்சி தற்போது அவுஸ்திரேலிய பேஸ்போல் (Baseball) அணியின் பிரதான உளவியல் நிபுணராக கடமை புரிவது குறிப்பிடத்தக்கது. ஜோன்சி குயின்ஸ்லாந்து புல்ஸ் (Queensland Bulls) கிரிக்கெட் அணிக்காகவும் முன்னர் தனது சேவைகளை வழங்கியிருந்தார். அத்தோடு வீர்களின் மனநிலை தொடர்பான நிபுணராக ஜோன்சி பிரிஸ்பன் நகரை மையமாகக் கொண்ட ரக்பி அணிகளுக்கும் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.  

இன்னும் ஜோன்சி உளவியல் தொடர்பான பிரபல்யமான பல புத்தகங்களின் (Understanding Ourselves and Others, Management Education, The Power of Positive Doing)  ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.