பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு ஒன்று கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகள் இன்று நிறைவடைந்ததுடன் மேலும் மூன்று போட்டிகள் இன்று ஆரம்பமாகின.
வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி
புனித அந்தோனியர் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இசிபதன வீரர்கள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 86 ஓட்டங்களையும், புனித அந்தோனியர் கல்லூரி வீரர்கள் 99 ஓட்டங்களையும் பெற்றனர்.
அபிலாஷின் சதத்துடன் புனித செபஸ்டியன் கல்லூரி வலுவான நிலையில்
பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு ஒன்று கிரிக்கெட் …..
நேற்றைய முதல் நாளிலேயே மீண்டும் தமது இரண்டாவது இன்னிங்சினைத் தொடர்ந்த இசிபதன வீரர்கள் முதல் நாள் ஆட்ட நிறைவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இன்றைய இரண்டாம் நாளில் தமது ஆட்டத்தைத் தொடர்ந்த இசிபதன வீரர்கள் 130 ஓட்டங்களுக்கு எஞ்சிய விக்கெட்டுக்களையும் இழந்தனர்.
இதனால் புனித அந்தோனியர் கல்லூரி வீரர்களுக்கு 118 ஓட்டங்கள் வெற்றி இலக்காக வழங்கப்பட்டது. அவர்கள் இரண்டாவது இன்னிங்சில் சிறந்த முறையில் வேகமாக ஆடி 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தனர்.
போட்டியின் சுருக்கம்
இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 86 (31) – சனில் விதுஷ 34/4, அவிஷ்க தரிந்து 41/4
புனித அந்தோனியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 99 (30.4) – ஜயவீர 23, தினத் திஸானாயக்க 31/6
இசிபதன கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 130 (50.2) – அனுபம ஹேரத் 36, ஏஷான் பெர்ணான்டோ 23*, அஷேன் மலித் 38/3, சனில் விதுஷ 60/3
புனித அந்தோனியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 120/4 (30) – ஹரிந்த சதுரங்க 27, அவிஷ்க தரிந்து 26, அனுபம ஹேரத் 21/2
போட்டி முடிவு – புனித அந்தோனியர் கல்லூரி 6 விக்கெட்டுக்களால் வெற்றி
புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி
கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித செபஸ்டியன் கல்லூரிக்கு ஆரம்ப மற்றும் மத்திய வரிசை வீரர்கள் சிறந்த பங்களிப்பு வழங்கினர். இதனால் அவ்வணி 7 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தமது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதில் அபிலாஷ் 129 ஓட்டங்களைப் பெற்றார்.
பின்னர் தமது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி வீரர்களும் சிறப்பாக ஆடி, முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
T-20 அரங்கில் சதத்தில் புதிய உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்
இன்று (03) நிறைவுக்கு வந்த நியூசிலாந்து மற்றும்..
இரண்டாம் நாளிலும் சிறப்பாக ஆடிய அவ்வணி இறுதியில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 416 என்ற இமாலய ஓட்ட எண்ணிக்கையை அடைந்தது. அவ்வணியின் 4 வீரர்கள் அரைச் சதம் கடந்தனர்.
பின்னர் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த புனித செபஸ்டியன் கல்லூரி போட்டி நிறைவடையும்போது 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 334/7d (72.3)- சனெல் பெர்ணான்டோ 87, நிஷித அபிலாஷ் 129, தஷிக் பெரேரா 51, அஷேன் டேனியல் 76/4
புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 416 (101.1) – டிலேஷ் பெரேரா 87, துலித் வெல்லகே 85, டி சில்வா 63, நிபுன் சுமனசிங்க 50, தருஷ பெர்ணான்டோ 94/5
புனித செபஸ்டியன் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 121/5– நிஷித அபிலாஷ் 37, மலின்த பீரிஸ் 34, தினித் ஜயகொடி 07/2
போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு
நாலந்த கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி
தமது சொந்த மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி வீரர்கள் முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தனர்.
இதன்படி முதலில் ஆடிய நாலந்த கல்லூரி வீரர்கள் 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். பின்னர் துடுப்பாடிய புனித தோமியர் அணித் தரப்பினர் முதல் நாள் ஆட்ட நிறைவின்போது 2 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.
நாலந்த கல்லூரி 151 (65.1) – சுஹங்க விஜேவர்தன 57, ஷெனொன் பெர்ணான்டோ 373
புனித தோமியர் கல்லூரி 932 (32) – துலிப் விஜேரத்ன 47, மஹீம வீரக்கோன் 182
மஹிந்த கல்லூரி, காலி எதிர் மலியதேவ கல்லூரி, குருனாகலை
மலியதேவ கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அக்கல்லூரி அணித் தலைவர் எதிரணிக்கு துடுப்பாடும்படி பணித்தார்.
அதன்படி ஆடிய மஹிந்த கல்லூரி வீரர்கள் முதல் இன்னிங்சுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றனர். நவோத் பரனவித்தான 71 ஓட்டங்களைக் குவித்தார்.
உலக நடுவர்களில் குமார் தர்மசேனவுக்கு 14ஆவது இடம்
இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது நடாத்தி வரும்.. இதன்படி , இலங்கைக்காக இளம் ………..
பின்னர் ஆடிய சொந்த மைதான தரப்பினர் இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவுக்கு முன்னரே சகல விக்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
பின்னர் மீண்டும் தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த மஹிந்த கல்லூரி வீரர்கள் இன்றைய ஆட்ட முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.
மஹிந்த கல்லூரி 235 (49.2) – நவோத் பரனவித்தான 71, கெவின் 43, துலாஜ் ரனதுங்க 784
மலியதேவ கல்லூரி 131 (44.3) – சுபுன் சுமனரத்ன 53, நவோத் பரனவித்தான 31/5
மஹிந்த கல்லூரி 8/0
புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் மஹானாம கல்லூரி
மொரட்டு வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அலோசியஸ் வீரர்கள் முதலில் துடுப்பாடினர். அவ்வணிக்காக ரிவிந்து சனஜன 92 ஓட்டங்களைப் பெற்று பங்களிப்பு வழங்க ஏனைய வீரர்கள் ஏமாற்றினர். எனவே அவ்வணி 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த மஹானாம கல்லூரி வீரர்களும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காண்பிக்க வெறும் 107 ஓட்டங்களுக்கே அவர்கள் சுருண்டனர். துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ரிவிந்து சனஜன பந்து வீச்சிலும் அசத்தி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸைத் துடுப்பாடும் தெற்கு வீரர்கள் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.
புனித அலோசியஸ் கல்லூரி 139 (45.1) – ரிவிந்து சனஜன 92, லஹிரு காவிந்த 33/3, ஹஷான் சன்தீப 38/3
மஹானாம கல்லூரி 107 (42.3) – பெதும் 31, ரிவிந்து சனஜன 27/5
புனித அலோசியஸ் கல்லூரி 4/0