கடற்படை விளையாட்டு கழகத்திற்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு

168

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 உள்ளூர் பருவத்திற்கான பரீமியர் லீக் B நிலை தொடரின் நான்கு போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

கதிரான கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 243 ஓட்டங்களால் இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.

நவீத்தின் அபார சதத்தால் பாணந்துறை அணி ஸ்திரமான நிலையில்

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும்…

முதல் நாளில் நீர்கொழும்பு அணி முதல் இன்னிங்சுக்காக 223 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாவது நாளான இன்று தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த லங்கன் கிரிக்கெட் கழகம் 136 ஓட்டங்களுக்கு சுருண்டது.

முதல் இன்னிங்ஸில் 87 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய லசித் க்ரூஸ்புள்ளே 63 ஓட்டங்களை குவித்தார்.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 223 (74) – பிரமித் பெர்னாண்டோ 51, அமில வீரசிங்க 70, லசித் க்ரூபுள்ளே 20, ரஜீவ வீரசிங்க 5/43, நவீன் கவிகார 4/55

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 136 (52.1) சானக்க ருவன்சிறி 37, சசின் பெர்னாண்டோ 24, துஷிர மதனாயக்க 24, ரவீன் கவிகார 21, ஷெஹான் வீரசிங்க 3/33, சனுர பெர்னாண்டோ 3/41, உமேகா சதுரங்க 3/50

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 156/5 (48) – லசித் கிரூபுள்ளே 63, ஷெஹான் வீரசிங்க 32*, அகீல் இன்ஹாம்33*


காலி கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகத்தை முதல் இன்னிங்ஸில் 163 ஓட்டங்களுக்கு சுருட்டிய காலி கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 187 ஓட்டங்களால் வலுவாக முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் T20…

கட்டுநாயக்க, விமானப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (15) ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுள்ளது. சானக்க விஜேசிங்க (51) அரைச் சதம் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 178 (65) – சானக்க விஜேசிங்க 36, டில்ஷான் கான்சன 28, ரவேன் சயெர் 21, சொஹான் ரங்கிக்க 5/47, மிலான் ரத்னாயக்க 2/30  

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 163 (51.3) – ரொஸ்கோ தட்டில் 35, புத்திக்க சதருவன் 31*, உதயவன்ஷ பராக்ரம 28, லக்ஷான் பெர்னாண்டோ 28, ராஜித பிரியான் 3/33, கயான் சிறிசோம 3/50

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 172/7 (59) – சானக்க விஜேசிங்க 51, ரவேன் சயெர் 36, லசித் பெர்னாண்டோ 35, சுபுன் விதானாரச்சி 20, திலிப் தாராக 3/14, சொஹான் ரங்கிக்க 2/59


குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

குசல் எடுசூரிய பெற்ற சதத்தின் மூலம் குருநாகல் யூத் அணிக்கு எதிராக கடற்படை அணி பலமான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் இமாலய ஓட்டங்களை பெற்ற கடற்படை விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் வெற்றி எதிர்பார்ப்புடன் ஆடி வருகிறது.

வெலிசறை, கடற்படை மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் குருநாகல் யூத் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த கடற்படை அணி 9 விக்கெட் இழப்புக்கு 409 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

குசல் எடுசூரிய 104 ஓட்டங்களை குவித்தார். இதன்போது குருநாகல் யூத் சார்பில் துசித டி சொய்சா 8 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த குருநாகல் யூத் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 ஓட்டங்களை பெறுவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.

T-10 கிரிக்கெட் தொடரில் வெற்றிகளை பறிகொடுத்த இலங்கை வீரர்கள்

கிரிக்கெட் வரலாற்றில் புரட்சியினை…

போட்டியின் சுருக்கம்

குருநாகல் யூத் (முதல் இன்னிங்ஸ்) – 253 (83.2) – ஹஷான் பிரபாத் 84, ருவன்த ஏகனாயக்க 43, கல்ஹான் சினத் 26*, சுதார தக்ஷின 3/49, குசல் எடுசூரிய 2/27, நுவன் சம்பத் 2/60

கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 402/9d (91.1) – குசல் எடுசூரிய 104, சுபுன் லீலரத்ன 67, இஷான் அபேசேகர 62*, அசித்த வீரசூரிய 39, தரூஷன் இத்தமல்கொட 35, மொஹமட் அல்பர் 25, துசித டி சொய்சா 8/137

குருநாகல் யூத் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 06/3 (5.3) – சுதார தக்ஷின 2/01


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கொழும்பு, பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான இந்தப் போட்டியில் பாணந்துறை விளையாட்டுக் கழகம் வலுவான நிலையில் உள்ளது.

பாணந்துறை அணி முதல் இன்னிங்ஸில் 250 ஓட்டங்களை பெற்ற நிலையில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் தனது முதல் இன்னிங்ஸில் 196 ஓட்டங்களுக்கே சுருண்டது. தனுஷ்க பண்டார 4 விக்கெட்டுகளையும் மொஹமட் ரமீஸ் 3 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாணந்துறை விளையாட்டுக் கழகம் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 250 (91.2) – கஷீஸ் நவீட் 111, ஷஷ்ரிக்க புசேகொல்ல 51, விஷ்வ சதுரங்க 38, கல்யான் ரத்னப்ரிய 3/56, நிமேஷ் விமுக்தி 5/62, மஹேஷ் பிரியதர்ஷன 2/46

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 196 (62.1) – அகில லக்ஷான் 87, தரிந்து டில்ஷான் 36, தனுஷிக்க பண்டார 4/68, மொஹமட் ரமீஸ் 3/31, ரசிக்க பெர்னாண்டோ 2/32

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 22/0 (8)