மேலதிக புள்ளியுடன் பொலிஸ் அணியை வீழ்த்திய இராணுவம்

228
Police SC vs Army Sc

டயலொக் கழக ரக்பி லீக் போட்டிகளின் 6ஆம் வாரத்தின் இறுதிப் போட்டியில் இராணுவப்படை விளையாட்டுக் கழக அணி 32 18 என்ற புள்ளிகள் அடிப்படையில் பொலிஸ் விளையாட்டுக் கழக அணியை வெற்றி கொண்டது.

இராணுவப்படை விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்ப சில நிமிடங்களுக்கு பொலிஸ் அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. எனினும், வலுவான இராணுவ அணியின் தடையை தகர்த்து பொலிஸ் அணியினால் புள்ளிகள் எதனையும் பெற முடியவில்லை.

போட்டியின் முதல் புள்ளியை இராணுவ அணியே பெற்றுக்கொண்டது. இராணுவ அணி தமக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அஷான் பண்டார மூலமாக முதலாவது ட்ரையைப் பெற்றுக்கொண்டது. கயான் சாலிந்த இலகுவான கொன்வெர்சனை தவறவிட்டார். (இராணுவம் 05- பொலிஸ் 00)

கடற்படையை வீழ்த்தி கண்டி அணி தொடர்ந்தும் முதலிடத்தில்

கழகங்களுக்கு இடையிலான டயலொக் ரக்பி லீக் தொடரின்..

இராணுவ அணி தொடர்ந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்த, மறுமுனையில் பொலிஸ் அணி, எதிர் தரப்புக்கு 3 பெனால்டி வாய்ப்புகளை வழங்கின. எனினும், மைதானத்தில் இருந்த பலத்த காற்றுக்கு மத்தியில் கயான் சாலிந்த 1 பெனால்டியை மட்டுமே கம்பத்தின் நடுவே உதைத்தார். (இராணுவம் 08 – பொலிஸ் 00)

இறுதியில் பல முயற்சிகளின் பின்னர் பொலிஸ் அணி முதலாவது புள்ளியைப் பெற்றுக்கொண்டது. 5 மீட்டர் ஸ்க்ரம் இன் மூலமாக பந்தை நகர்த்திய பொலிஸ் அணியானது, ஒரு சில பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் இலங்கை இளம் அணி வீரர் வாஜித் பவ்மி மூலமாக முதலாவது ட்ரையினை வைத்தது. எனினும் ஜெயவிக்ரம கொன்வெர்சனை தவறவிட்டார். (இராணுவம் 08 – பொலிஸ் 05)

முதல் பாதி முடிவடைவதற்கு முன்னர் பொலிஸ் அணியானது பெனால்டி உதையின் மூலமாக மேலும் 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

முதல் பாதி: இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 08 – 08 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பித்ததுடன் இராணுவ அணியானது பெனால்டி வாய்ப்பொன்றை பெற்றது. கயான் சாலிந்த இம்முறை எந்த தவறும் இல்லாது கம்பத்தின் நடுவே பந்தை உதைத்து 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். இதற்கு பதிலடியாக பொலிஸ் அணியும் சுஜான் கொடிதுவக்கு மூலமாக ட்ரை வைத்து அழுத்தம் கொடுத்தது. (இராணுவம் 11- பொலிஸ் 13)  

தொடரும் கண்டி அணியின் வெற்றியோட்டம்; தொடர் தோல்விகளால் தடுமாறும் CR & FC

டயலொக் ரக்பி லீக் 5 ஆம் வாரத்திற்கான போட்டியில், CR & FC கழகத்தின் சொந்த…

இராணுவ அணியின் பலம் மிக்க வீரரான அசோக ஜயலால் நடுவரினால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனினும் இராணுவ அணி தனது பின் வரிசை வீரர்களை பயன்படுத்தி பந்தை சிறந்த முறையில் விளையாடி முன்னேறியது.

பொலிஸ் அணியின் பந்துப் பரிமாற்றத்தை சமீர இடையுறுத்து பந்தைப் பெற்றுக்கொண்டதன் மூலமாக, 50 மீட்டர்கள் தூரம் ஓடிச் சென்று கம்பத்தின் கீழ் ட்ரை வைத்தார். தொடர்ந்து சுகத் நாணயக்காரவின் ட்ரையின் மூலமாக இராணுவ அணியானது தனது முன்னிலையை அதிகரித்துக்கொண்டது. கயான் சாலிந்த இரண்டு ட்ரைகளையும் சிறப்பாக கொன்வேர்ட் செய்தார்(இராணுவம் 25 – பொலிஸ் 13)

இராணுவ அணியின் சுகத் நாணயக்காரவும் நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, இதனை பயன்படுத்திக்கொண்ட பொலிஸ் அணியானது ரோலிங் மோல் மூலமாக ட்ரை வைத்தது. வாஜித் பவ்மி மீண்டும் ஒரு முறை தமது அணிக்கு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். சயிட் சின்ஹாவன்ச கொன்வெர்சனை தவறவிட்டார். (இராணுவம் 25 – பொலிஸ் 18)

இராணுவ அணியானது, இறுதி நிமிட விசிலுக்கு முன்னதாக ட்ரை வைத்து மேலதிக புள்ளியையும் பெற்றுக்கொண்டது. இம்முறை சம்பத் குமார இராணுவ அணி சார்பாக ட்ரை வைத்தார். சாலிந்த கொன்வெர்சன் மூலமாக 2 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.

முழு நேரம்: இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 32 (4T 2C 3P) – 18 (3T ,1P) பொலிஸ் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர்அஷான் பண்டார (இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)