குருகுல கல்லூரிக்கு வெற்றி தேடித்தந்த சமித்தின் பந்துவீச்சு

185

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டி இன்று நிறைவடைந்ததோடு மேலும் இரு போட்டிகள் ஆரம்பமாயின.

வெஸ்லி கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்த குருகுல கல்லூரி

சிங்கர் நிறுவன அனுசரணையில்…

குருகுல கல்லூரி, களனி எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

கெம்பல் மைதானத்தில் C குழு போட்டியில் பலோ ஓன் (Follow-on) செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட வெஸ்லி கல்லூரியின் விக்கெட்டுகளை சச்சின்த சமித் அடுத்தடுத்து வீழ்த்த குருகுல கல்லூரி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

குருகுல கல்லூரி தனது முதல் இன்னிங்சுக்கு 258 ஓட்டங்களை குவித்தபோது வெஸ்லி கல்லூரி 146 ஓட்டங்களுக்கு சுருண்டதாலேயே அந்த அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடரவேண்டி ஏற்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸிலும் வெஸ்லி அணி 123 ஓட்டங்களுக்கே சுருண்டது. சச்சின்த சமித் 26 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓட்ட வெற்றி இலக்கை குருகுல கல்லூரி ஒரு விக்கெட்டை இழந்து பெற்றது.

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்) 258 (69.5) – பிருதுவி பிம்சர 48, பதும் மஹேஷ் 46, திமிர நயனதரு 35, பிரவீன் நிமேஷ் 32, நுவன் சானக்க 30, ராகுல் குணசேகர 4/57, முவின் சுபசிங்க 2/64, சகுன்த லியனகே 2/66

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 146 (63) – மொவின் சுபசிங்க 30, ராகுல் குணசேக 27, ஜனித் சதகலும் 20, பிரவீன் நிமேஷ் 3/26, லசின்து அரோஷ 2/21, மலின்து விதுரங்க 2/18, பிருதுவி ருசர 2/49

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – F/O 123 (41.1) – திசுரக்க அக்மீமன 21, முவின் சுபசிங்க 20, சச்சின்த சமித் 6/26, லசின்து அரோஷ 2/15

குருகுல கல்லூரி, களனி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 12/1 (1.1)

முடிவு: குருகுல கல்லூரி 9 விக்கெட்டுகளால் வெற்றி

இளையோர் ஆசிய கிண்ணத்தில் அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்த இலங்கை

பிரவீன் ஜயவிக்ரமவின் அதிரடி…

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

D குழுவுக்கான இந்தப் போட்டி மருதானை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. எனினும் தனது சொந்த மைதானத்தில் ஆடும் ஸாஹிரா கல்லூரி மீண்டும் சோபிக்க தவறியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஸாஹிரா அணி 160 ஓட்டங்களுக்கு சுருண்டது. மொஹமட் சகில் (43) மற்றும் மொஹமட் ஷஹதுல்லா (42) அரைச்சதத்தை நெருங்கினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் உள்ளது. ராவன் கெல்லி ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களுடன் சதத்தை நெருங்கியுள்ளார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 160 (37) – மொஹமட் சகில் 43, மொஹமட் ஷஹதுல்லா 42, துனித் வெல்லகே 4/47, அஷேன் டானியல் 3/46, லக்ஷான் கமகே 2/52

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 153/3 (37) – ராவன் கெல்லி 81*, நிபுன் சுமனசிங்க 32, மொஹமட் ஆதில் 2/18

துடுப்பாட்ட பலத்துடன் முன்னிலை அடைந்திருக்கும் இலங்கை அணி

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம்…

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

பண்டாரநாயக்க மைதானத்தில் ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டி.எஸ். கல்லூரி தனது முதல் இன்னிங்சுக்கு 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை எதிரணிக்கு சவாலாக அமைந்தது.

இன்று பின்னேரம் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி ஆட்ட நேர முடிவில் 36 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. நாளை போட்டியின் கடைசி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு – 225 (57.2) – டெரோன் பாஸ்கரன் 41, அபிஷேக் லியனாரச்சி 39, சமத் யட்டவர 32, கவின்து ரித்மல் 3/45, லஹிரு டில்ஷான் 2/45

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை – 98/7 (36) – மிஷிசால் அமோத 36, பசின்து ஆதித்ய 2/15, மெதுஷான் குமார 2/22