கடந்த முறை கழக ரக்பி பருவத்தில் ThePapare.com அறிமுகம் செய்த TMO (தொலைக்காட்சி போட்டி அதிகாரி) முறை இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள கழக ரக்பி பருவத்தில் மீண்டும் ஒருமுறை இடம்பெறவுள்ளது.
இலங்கை கழக ரக்பி கட்டமைப்பில் நடுவர்களுக்கு உதவியாக முடிவுகளை மேம்படுத்தும் நோக்கில் TMO முறை ThePapare.com இனால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் போட்டியில் புள்ளிகள் பெறப்பட்டதா என்பதை தீர்மானிப்பது அல்லது பெறப்பட்ட ட்ரையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தீர்மானிக்க நடுவர்களுக்கு இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் உதவியாக உள்ளது.
கடந்த ஆண்டு இந்த தொழில்நுட்பத்தை ThePapare.com முதல் முறை அறிமுகம் செய்தபோது அது பற்றி கருத்து வெளியிட்ட டயலொக் ஆசியாட்டாவுக்கான Global & Content சிரேஷ்ட பொது முகாமையாளர் மங்கள ஹெட்டியாரச்சி கூறியதாவது,
“ரக்பியுடனான டயலொக்கின் பயணம் தொடரும். ரக்பியில் நாம் தொடர்ந்து முதலீடு செய்ய விரும்புகிறோம். தொலைக்காட்சி போட்டி அதிகாரி அல்லது TMO போன்றதொரு விடயத்தை அறிமுகப்படுத்த இது சரியான நேரம் எனக் கருதினோம். எனவே நாம் SLRFU மற்றும் நடுவர்கள் ஒன்றியத்திற்கு ஒரு பரிந்துரையை விடுத்தோம். இந்த இரு அமைப்புகளும் இதனை ஆர்வத்துடன் ஏற்று அதிக ஆதரவுடன் செயற்பட்டன என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
இந்த முன்னோடி திட்டத்தினால் சில நல்ல முடிவுகள் வழங்கப்பட்டது, சில முடிவுகளை மாற்ற நடுவருக்கு உதவியாக இருந்ததோடு இந்த திட்டம் வெற்றி அளித்தது.
இந்த வசதி உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றபோதும் கடந்த பருவத்தில் உள்நாட்டு ரக்பி தொடரில் TMO முறை அறிமுகப்படுத்தப்பட்டதே ஆசியாவில் பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும்.
ஆசிய ரக்பி தொடரில் இலங்கைக்கு 3ஆம் இடம்
இலங்கையில் நடைபெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டிகளின், 3ஆம் கட்ட போட்டிகளில், இலங்கை அணி தென்கொரிய…
2001 ஆம் ஆண்டிலேயே முதல்முறை TMO முறை பயன்படுத்தப்பட்டிருந்தது. அது தொடக்கம் ரக்பி உலகக் கிண்ணம் மற்றும் ரக்பி சம்பியன்ஷிப் உட்பட உலகெங்கும் TMO முறை சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த பருவத்தில் 14 போட்டிகளில் TMO வசதி இருந்தது. இந்த பருவத்தில் வாரத்திற்கு ஒரு போட்டியில் இந்த தொழிநுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இம்முறை கழக ரக்பி பருவம் 14 வாரங்கள் கொண்டதாக அமையவுள்ளது.
முதல் வாரத்தில் கடற்படை விளையாட்டுக் கழகம் மற்றும் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் TMO வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
டயலொக் ரக்பி லீக் போட்டிகள் அனைத்தையும் www.thepapare.com இல் பார்வையிடலாம்.
TMO வரலாறு
2001 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக தொலைக்காட்சி போட்டி அதிகாரி முறை பயன்படுத்தப்பட்டிருந்தது. அது தொடக்கம் ரக்பி உலகக் கிண்ணம் மற்றும் ரக்பி சம்பியன்ஷிப் உட்பட உலகெங்கும் TMO முறை சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றது. பந்து தரையை தொடுவது, நொக் ஒன் (knock-on), தவறான ஆட்டம் அல்லது அது போன்ற விடயங்களில் நடுவர்களுக்கு 100 வீதம் சரியான முடிவை எடுக்க முடியாத சந்தர்ப்பங்களிலேயே TMO உதவி கோரப்படுகிறது. பிற்காலத்தில் ஏனைய விளையாட்டுகளிலும் சரியான முடிவை பெறுவதற்கான விரைவான தொலைக்காட்சி மறு ஓளிபரப்பு முறை உள்ளடக்கப்பட்டது. நாளுக்கு நாள் TMO தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது அதிகரித்தது. 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் 2011 ஆம் ஆண்டை விடவும் 74 மேலதிக TMO உதவி கோரப்பட்டுள்ளது. அந்த உலகக் கிண்ணத்தின் மொத்தம் 48 போட்டிகளில் 132 TMO தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக உலக ரக்பி வெளியிட்ட தரவு காட்டுகிறது.
இதன்படி கடந்த உலகக் கிண்ணத்தில் சராசரியாக போட்டி ஒன்றில் 2.8 TMO தொழில்நுட்பம் கோரப்பட்டது ஒரு எதிர்பாராத குறைவான எண்ணிக்கையாகும்.