ஜனுஷ்க பெர்னாண்டோவின் அபாரப் பந்துவீச்சினால் தர்ஸ்டன் கல்லூரிக்கு இலகு வெற்றி

175

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகள் இன்று நிறைவடைந்ததுடன் மேலும் 3 போட்டிகள் ஆரம்பமாகின.

லும்பினி கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லும்பினி கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய லும்பினி கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித தோமியர் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

புனித தோமியர் கல்லூரி சார்பில் தருஷ கவிந்த 31 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் விமுக்தி குலதுங்க 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி 55 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. லும்பினி கல்லூரி சார்பில் ரவீஷ தத்சர 69 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் தோமியர் கல்லூரியின் சஹிர ரஷ்மிக 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் துஷ்திக ஜயவீர 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த புனித தோமியர் கல்லூரி 6 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 165 (47.5) – வினு ஹெமால் 28.  லஹிரு தில்ஷான் 4/20, தருச கவிந்த 3/10

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (முதலாவது இன்னிங்ஸ்) – 164 (61.5) – தருஷ கவிந்த 31, விமுக்தி குலதுங்க 4/44

லும்பினி கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 192/8d (55) – ரவீஷ தத்சர 69, சந்துநெல் சங்கல்ப 59, சஹிர ரஷ்மிக 4/66

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 105/6 – ஹிரான் லக்ஷான் 29*, கவீன் பீரிஸ் 4/52

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது


புனித ஜோசப் கல்லூரி, மருதானை எதிர் மஹிந்த கல்லூரி, காலி  

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவுற்றதுடன் முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை மஹிந்த கல்லூரி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய மஹிந்த கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள டீஜேய் லாங்கா – எல்.பி பினான்ஸ்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜோசப் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் ரெவான் கெல்லி 83 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் நிபுன் மலிங்க 23 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும் கவிந்து எதிரிவீர 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய மஹிந்த கல்லூரி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவ்வணி சார்பில் நவோத் பரணவிதான 59 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 280/9d (91) – கவிந்து எதிரிவீர 101, ஹேஷான் கவிந்த 76, துமித் வேல்லாலகே 5/77

புனித ஜோசப் கல்லூரி, மருதானை (முதலாவது இன்னிங்ஸ்) – 236 (86.3) – ரெவான் கெல்லி 83, தினேத் ஜயக்கொடி 52, நிபுன் மலிங்க 7/23

மஹிந்த கல்லூரி, காலி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 104/4 (23) – நவோத் பரணவிதான 59

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது. முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை மஹிந்த கல்லூரி பெற்றுக்கொண்டது.


தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு எதிர் பண்டாரநாயக கல்லூரி, கம்பஹா    

கடுநேரிய செபஸ்டியன் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி 135 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய தர்ஸ்டன் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பண்டாரநாயக கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் தர்ஸ்டன் கல்லூரியின் ஜனுஷ்க பெர்னாண்டோ 10 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த தர்ஸ்டன் கல்லூரி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது. அவ்வணி சார்பில் சவான் பிரபாத் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன்படி 233 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பண்டாரநாயக்க கல்லூரி 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 135 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. பந்து வீச்சில் ஜனுஷ்க பெர்னாண்டோ 40 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.     

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 187 (58) – சவான் பிரபாத் 76*, ஜனிந்து ஜெயவர்தன 3/64

பண்டாரநாயக கல்லூரி, கம்பஹா (முதலாவது இன்னிங்ஸ்) – 91 (27.5) – ஜனுஷ்க பெர்னாண்டோ 5/10

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 137/2d (19) – சவான் பிரபாத் 50*

பண்டாரநாயக கல்லூரி, கம்பஹா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 98 (38.3) – ஜனுஷ்க பெர்னாண்டோ 7/40

முடிவு – தர்ஸ்டன் கல்லூரி 135 ஓட்டங்களால் வெற்றி.  


குருகுல கல்லூரி, களனி எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு  

நாலந்த கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை நாலந்த கல்லூரி பெற்றுக்கொண்டது.  

முதலில் துடுப்பாடிய குருகுல கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நாலந்த கல்லூரி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் லக்சித ரசாஞ்சன 34 ஓட்டங்களைப் பெற்றார். குருகுல கல்லூரி சார்பில் பந்து வீச்சில் சச்சிந்த சமித் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடரில் மஹ்ரூப் தலைமையில் இலங்கை அணி

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த குருகுல கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் மலிந்து விதுரங்க 32 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் ரவீன் டி சில்வா மற்றும் லக்சித ரசாஞ்சன தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த நாலந்த கல்லூரி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி, களனி (முதலாவது இன்னிங்ஸ்) – 93 (34.1) – மலிந்து விதுரங்க 20, ரவீன் டி சில்வா 3/17

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 133 (54.5) – லக்சித ரசாஞ்சன 34,  சச்சிந்த சமித் 3/12, ப்ருதுவி ரூசர 3/19

குருகுல கல்லூரி, களனி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 129 (61.3) – மலிந்து விதுரங்க 32, ரவீன் டி சில்வா 3/16

நாலந்த கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 83/5 (09) – லக்சித ரசாஞ்சன 23

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை நாலந்த கல்லூரி பெற்றுக்கொண்டது.


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை   

மெசனொட் கல்லூரி மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

முதலில் துடுப்பாடிய புனித பேதுரு கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 294 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக சந்தூஷ் குணதிலக 81 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் ரொமல் பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய டி மெசனொட் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் நிம்ன பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் முஹம்மத் அமீன் மற்றும் சச்சின் சில்வா தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 294/8d (92) – சந்தூஷ் குணதிலக 81, சச்சின் சில்வா 52*, முஹம்மத் அமீன் 51*, ரொமல் பெர்னாண்டோ 3/87

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (முதலாவது இன்னிங்ஸ்) – 128 (50) – நிம்ன பெர்னாண்டோ 23*, முஹம்மத் அமீன் 3/37, சச்சின் சில்வா 3/43

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 76/4 (16) – சந்தூஷ் குணதிலக்க 33, மிகில கீத் 3/32

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.


தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் மொரட்டு மகா வித்தியாலயம், மொரட்டுவை

பண்டாரவத்த பலபிடிய மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மொரட்டு மகா வித்தியாலயம் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தர்மாசோக கல்லூரிக்கு வழங்கியது.  

இதன்படி களமிறங்கிய தர்மாசோக கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல  விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக கவிந்து நதீஷான் 54 ஓட்டங்களையும் ரசாந்த டி சில்வா 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் விராஜ் கனிஷ்க, ஷெஹான் ஜீவந்த தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மொரட்டு மகா வித்தியாலயம் இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் கவிந்து நதீஷான் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அறோஷ டி சொய்சா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

போட்டியின் சுருக்கம்

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை (முதலாவது இன்னிங்ஸ்) – 214 (67.5) – கவிந்து நதீஷான் 54, ரசாந்த டி சில்வா 39, விராஜ் கனிஷ்க 3/16, ஷெஹான் ஜீவந்த 3/10,

மொரட்டு மகா வித்தியாலயம், மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 46/6 (24.1)– கவிந்து நதீஷான் 4/17


புனித சேவார்டியஸ் கல்லூரி, மாத்தறை எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

வெஸ்லி கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்லி கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித சேவார்டியஸ் கல்லூரிக்கு வழங்கியது.

இதன்படி களமிறங்கிய சேவார்டியஸ் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக சுபுன் கவிந்த 44 ஓட்டங்களைப் பெற்றார்.  

இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா?

பந்து வீச்சில் சகுந்த லியனகே 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் மொவின் சுபசிங்ஹ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 23 ஓட்டங்களைப் பெற்றது.

பந்து வீச்சில் சரித் ஹர்ஷன 05 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

போட்டியின் சுருக்கம்

புனித சேவார்டியஸ் கல்லூரி, மாத்தறை (முதலாவது இன்னிங்ஸ்) – 169 (76.4) – சுபுன் கவிந்த 44, சகுந்த லியனகே 4/30, மொவின் சுபசிங்ஹ 3/38

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 23/5 (16) – சரித் ஹர்ஷன 3/05


புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகலை   

தோமியர் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மலியதேவ கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித தோமியர் கல்லூரிக்கு வழங்கியது.  

இதன்படி முதலில் களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக டெல்லோன் பீரிஸ் 40 ஓட்டங்களைப் பெற்றார்.  

பந்து வீச்சில் துலாஜ் ரணதுங்க 4 விக்கெட்டுகளையும் சஞ்சீவன பிரியதர்ஷன 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலியதேவ கல்லூரி சகல விக்கெட்டுகளையும்  இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் துலாஜ் ரணதுங்க 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் ஷனொன் பெர்னாண்டோ மற்றும் டெலோன் பீரிஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து பொலொவ் ஒன் (Follow on) முறைக்கு தள்ளப்பட்ட மலியதேவ கல்லூரி இன்றைய ஆட்ட நேர முடிவு வரை விக்கெட் இழப்பின்றி 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதலாவது இன்னிங்ஸ்) – 225/9d (62.4)_- டெலோன் பீரிஸ் 40, துலாஜ் ரணதுங்க 66/4

மலியதேவ கல்லூரி, குருநாகலை (முதலாவது இன்னிங்ஸ்) – 81 (30.5) – துலாஜ் ரணதுங்க 30, ஷனொன் பெர்னாண்டோ 3/03

மலியதேவ கல்லூரி, குருநாகலை (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 16/0 (6)