வர்த்த நிறுவனங்களுக்கு இடையிலான 25 ஆவது சிங்கர் ப்ரீமியர் லீக் நொக் அவுட் இறுதிப் போட்டியில், பிரிவின் புதிய அணியான எல்.பி பினான்ஸ் அணி டீஜேய் லாங்கா அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி MCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சகலதுறை வீரர் லக்ஷான் ரொட்ரிகோ தலைமையிலான எல்.பி பினான்ஸ் அணி அரையிறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர்களைக் கொண்ட நடப்பு சம்பியன் மாஸ் யுனிச்செல்லா அணியை வீழ்த்தியதோடு மற்றைய அரையிறுதிப் போட்டியில் டீஜேய் லாங்கா அணி கொமர்ஷல் கிரடிட் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
லீக் போட்டிகளில் எல்.பி பினான்ஸ் அணி 05 வெற்றி, 03 தோல்வி மற்றும் ஒரு முடிவற்ற போட்டி என HNB, டீஜேய் லாங்கா, சம்பத் வங்கி மற்றும் டிமோ அணிகளை பின்தள்ளி முன்னிலை பெற்றது. லீக் புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தைப் பிடித்ததன் மூலம் எல்.பி பினான்ஸ் அணி நொக் அவுட் போட்டிகளுக்கு முன்னேறியதோடு ஹெய்லிஸ் குழு (9 ஆவது இடம்) மற்றும் HNB (5 ஆவது இடம்) அணிகளுடனான போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் அந்த அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இலங்கையில் தோன்றிய சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லசித் மாலிங்க தலைமையிலான டீஜேய் லங்கா அணி லீக் சுற்றில் 03 வெற்றி, 03 தோல்வி மற்றும் 03 முடிவற்ற போட்டிகள் என புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தைப் பிடித்தது. லீக் சுற்று முடிவுகள், நொக் அவுட் போட்டிகளிலும் டீஜேய் லங்கா அணிக்கு கைகொடுத்தது. சம்பத் வங்கி (7 ஆவது இடம்) மற்றும் கான்ரிச் பினான்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகள் வெற்றி தோல்வின்றி முடிந்ததால் டீஜேய் லங்கா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடரில் மஹ்ரூப் தலைமையில் இலங்கை அணி
லசித் மாலிங்க, தம்மிக்க பிரசாத், சச்சித்ர சேனநாயக்க, மிலிந்த சிறிவர்தன, சுரங்க லக்மால் மற்றும் கித்ருவன் விதானகே போன்ற சர்வதேச போட்டிகளில் அனுபவம் பெற்ற வீரர்களைக் கொண்ட டீஜேய் லங்கா அணி வலுவான நிலையிலேயே இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது. எல்.பி பினான்ஸ் அணியில் ரஜீவ வீரசிங்க, லஹிரு உதார, சரித் சுதரக்க மற்றும் பிரியமால் பெரேரா போன்ற சில வீரர்கள் அண்மைய போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
எல்.பி பினான்ஸ் குழாம் – லக்ஷான் ரொட்ரிகோ (தலைவர்), ரஜீவ வீரசிங்க (உபதலைவர்), லஹிரு உதார (விக்கெட் காப்பாளர்), குசல் மெண்டிஸ், சரித் சுதரக்க, சஹான் ஆரச்சிகே, சதுரங்க குமார, ஷிரான் பெர்னாண்டோ, அனுஷ்க பெரேரா, பிரியமால் பெரேரா, கேஷான் விஜேரத்ன, யஷான் சமரசிங்க, ஷஹீன் பெர்னாண்டோ, தனீஷ வீரகோன், சச்சின் டேபதடோ
டீஜேய் லங்கா குழாம் – லசித் மாலிங்க (தலைவர்), சச்சித்ர சேனநாயக்க (உபதலைவர்), மிலிந்த சிறிவர்தன, கித்ருவன் விதானகே, டிலான் ஜயலத், சிதாரா கிம்ஹான, ஷாலிக்க கருணாநாயக்க, சலன டி சில்வா, தம்மிக்க பிரசாத், கசுன் மதுஷங்க, லக்ஷான் சந்தகன், நிலூஷன் நொனிஸ், விஷாட் ரந்திக்க, சுரங்க லக்மால், நிபுன் காரியவசம், நாலக்க அமரகோன், கோசல ஜயசேகர, ரங்கீத் பீரிஸ்
இறுதிப் போட்டி ThePapare.com/Dialog MyTV மற்றும் Dialog Television Channel No.1 இல் காலை 9.30 தொடக்கம் நேரடியாக காண்பிக்கப்படும். இது ThePapare.com மற்றும் Batsman.com இணையத்தளங்களின் ஒரு கூட்டுத் தயாரிப்பாகும்.