இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த ரிச்மண்ட் கல்லூரி

284

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகள் இன்று நிறைவடைந்ததோடு மேலும் ஒரு போட்டி ஆரம்பமானது.

ஸாஹிரா கல்லூரி, மருதானை எதிர் லும்பினி கல்லூரி, கொழும்பு

ஸாஹிரா கல்லூரி இரண்டு இன்னிங்சுகளியும் குறைந்த ஓட்டங்களை பெற்று லும்பினி கல்லூரியிடம் 7 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நேற்று (16) ஆரம்பமான போட்டியில் ஸாஹிரா கல்லூரி முதல் இன்னிங்சுக்காக 67 ஓட்டங்களைப் பெற்றதோடு, லும்பினி கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 128 ஓட்டங்களையே பெற்றது.

இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஸாஹிரா கல்லூரிக்கு மொஹமட் ஷானாஸ் மாத்திரம் நிதானமாக ஆடி 47 ஓட்டங்களை பெற்றார். எனினும் எதிரணி பந்துவீச்சாளர் விமுக்தி குலதுங்க 6 விக்கெட்டுகளை வீழ்த்த ஸாஹிரா அணி 44.2 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு சகல  விக்கெட்டுகளையும் இழந்தது.

எனவே லும்பினி கல்லூரிக்கு 68 ஓட்டங்களே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டதோடு அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 67 (31.2) – யசித் நிர்மல 21, அமித் தாபரே 4/13, விமுக்தி குலதுங்க 3/16, ஷஷித் ரவிந்து 2/12

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 128 (45.1) – கவீன் தெமித 56, விமுக்தி குலதுங்க 43, மொஹமட் டில்ஹான் 4/22, ரித்மிக நிமேஷ் 2/21

ஸாஹிரா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 128 (44.2) – மொஹமட் ஷானாஸ் 47, சதுர டில்ருக்ஷான் 21, விமுக்தி குலதுங்க 6/40

லும்பினி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 68/3 (19) – ரவிஷ தத்சர 29*, இம்தியாஸ் ஸ்லாசா 2/13

முடிவு: லும்பினி கல்லூரி 7 விக்கெட்டுகளால் வெற்றி

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் புனித அலோசியஸ் கல்லூரி, காலி

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்ஸில் புனித பேதுரு மற்றும் புனித அலோசியஸ் கல்லூரிகள் 100 ஓட்டங்களைக் கூட பெறாமல் விக்கெட்டுகளை இழந்தபோதும் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

>>இலங்கை குழாமில் சதீர சமரவிக்ரம இணைப்பு<<

புனித பேதுரு கல்லூரி தனது முதல் இன்னிங்சுக்காக வெறும் 78 ஓட்டங்களையே பெற்றதோடு புனித அலோசியஸ் கல்லூரி 91 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இந்நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது நாளில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித பேதுரு கல்லூரி மிக மந்தமாக ஆடியது. அந்த அணி 75 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. புனித பேதுரு கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் சரித் பெர்னாண்டோ 72 ஓட்டங்களை பெற்றார்.

புனித அலோசியஸ் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் கவிக டில்ஷான் 3 விக்கெட்டுகளையும் ரவிது சஞ்சன 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் 151 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித ஆலோசியஸ் கல்லூரி ஆட்ட நேர முடிவில் 19 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 56 ஓட்டங்களை எடுத்தது.

பந்துவீச்சில் புனித பேதுரு கல்லூரி சார்பாக சச்சின் சில்வா 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் முதல் இன்னிங்ஸில் 13 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற புனித அலோசியஸ் கல்லூரி அதற்கான புள்ளிகளை வென்றது.  

போட்டியின் சுருக்கம்    

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 78 (42.5) – தினுக்க லக்மால் 4/05, ரவிந்து சஞ்சன 3/28, ஹரின் புத்தில 2/21

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 91 (57.2) – சந்தூஷ் குணதிலக்க 5/23, மொஹமட் அமீன் 2/23

புனித பேதுரு கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 163/7d (75) – சரித் பெர்னாண்டோ 72, சந்தூஷ் குணதிலக்க 42, கவின் டில்ஷான் 3/14, ரவிந்து சஞ்சன 2/30

புனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 56/4 (19) – ரவிது சஞ்சன 33, சச்சின் சில்வா 3/16

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

 

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் இரண்டிலும் அசைக்க முடியாத அணியாக செயற்பட்ட ரிச்மண்ட் கல்லூரி, தர்மபால கல்லூரியை இன்னிங்ஸ் மற்றும் 77 ஓட்டங்களால் வென்றது.

ரிச்மண்ட் கல்லூரிக்கு துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் சதம் பெற்றதோடு பந்துவீச்சில் சதுன் மெண்டிஸ் இரண்டு இன்னிங்சுகளிலும் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

>>பாகிஸ்தானுடனான T-20 தொடரில் இருந்து விலகும் உபுல் தரங்க<<

 

முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தர்மபால கல்லூரி 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் குஷன்க பீரிஸ் மாத்திரம் அரைச்சதம் ஒன்றைப் பெற்றார்.

பந்துவீச்சில் ரிச்மண்ட் கல்லூரி சார்பாக சதுன் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு திலும் சுதீவ 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இன்று இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த ரிச்மண்ட் கல்லூரி 39.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 306 ஓட்டங்களை விளாசிய நிலையில் தமது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது. கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காது 129 ஓட்டங்களை பெற்றதோடு ஆதித்ய சிறிவர்தன 75 ஓட்டங்களையும் தவீஷ அபிஷேக் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 126 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த தர்மபால கல்லூரி வெறுமனே 49 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்த ஓட்டங்களைப் பெற அந்த அணி 30.2 ஓவர்களுக்கு முகங்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக பந்துவீசிய சதுன் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 180 (72.5) – குஷன்க பீரிஸ் 50, அவிஷ்க ஹசரிந்த 40, மலின்த சதகலும் 31, சதுன் மெண்டிஸ் 5/74, திலும் சுதீவ 3/44

ரிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 306/2d (39.3) – கமிந்து மெண்டிஸ் 129*, ஆதித்ய சிறிவர்தன 75, தவீஷ அபிஷேக் 51*, தனஞ்சய லக்ஷான் 34

தர்மபால கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 49 (30.2) – சதுன் மெண்டிஸ் 4/26, அனுஷ டி சில்வா 2/03, திலும் சுதீவ 2/04   

முடிவு: ரிச்மண்ட் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 77 ஓட்டங்களால் வெற்றி

புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணதுறை எதிர் களுத்துறை வித்தியாலயம்

புனித ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித ஜோன்ஸ் கல்லூரி 94 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. புனித ஜோன்ஸ் கல்லூரி சார்பாக அஷான் டில்ஹார பெற்ற 26 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும்.

களுத்துறை வித்தியாலயம் சார்பில் பந்துவீச்சில் கயஷான் ஜயவிக்ரம மற்றும் அவிஷ்க லக்ஷான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த களுத்துறை வித்தியாலயம் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 51 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஹிருன மதுஷான் அரைச்சதம் பெற்றார்.  

போட்டியின் சுருக்கம்

புனித ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 94 (44.1) – அஷான் டில்ஹார 26, ரெஹான் மலித் 22, கயஷான் ஜயவிக்ரம 4/15, விஷ்க லக்ஷான் 4/27

களுத்துறை வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 114/6 (51) – ஹிருன மதுஷான் 53

நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்