பயர்ன் முனிச் அணியின் பயிற்றுவிப்பாளர் அதிரடியாகப் பதவி நீக்கம்  

310

ஜேர்மன் நாட்டின் முன்னணிக் கால்பந்துக் கழகமான பயர்ன் முனிச்சின் பயிற்றுவிப்பாளராக கடந்த பருவகாலம் முதல் செயற்பட்டு வந்த கார்லோ அன்ஸலோட்டி (Carlo Ancelotti) பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற பரிஸ் செய்ண்ட் ஜெய்ன்ட் (PSG) மற்றும் பயர்ன் முனிச் அணிகளுக்கிடையிலான UEFA சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான போட்டியில் PSG அணியிடம் பயர்ன் முனிச் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதன் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கையை பயர்ன் முனிச் நிர்வாகம் எடுத்துள்ளது.

கார்லோவின் பதவி நீக்கம் தொடர்பிலான செய்தியை பயர்ன் முனிச் கழகம் தமது வலைத்தளத்தில் உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியுள்ளது.

விறுவிறுப்பான போட்டிகளில் பார்சிலோனா, செல்சி மற்றும் PSG அணிகள் வெற்றி

இத்தொடரின் இரண்டாம் கட்டத்தின் இறுதிக் கட்டப் போட்டிகள் 27ஆம் திகதி…

58 வயதை அடைகின்ற கார்லோ அன்ஸலோட்டி, இத்தாலிய நாட்டை சேர்ந்தவர். இவர் இறுதியாக ஏ.சி மிலான் (AC Milan) கழகத்திற்காக விளையாடினார். எனினும், கூடுதலான காலம் எ.ஸ் ரோமா (AS Roma) கழகத்துடன் இணைந்தே தனது விளையாட்டை இவர் மேற்கொண்டார். .

2016 ஆம் ஆண்டு ஜீலை மாதம் முதலாம் திகதி கார்லோ அன்ஸலோட்டி, பயர்ன் முனிச் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக அவ்வணியை பொறுப்பேற்றார். அவரது பயிற்றுவிப்பின் கீழ் இதுவரை 60 போட்டிகளில் விளையாடியுள்ள பயர்ன் முனிச் அணி, 48 போட்டிகளை வென்றுள்ளது. அதேநேரம், இவரது பயிற்றுவிப்பின் கீழ் பயர்ன் முனிச் அணி 2016/2017 பருவகாலத்திற்கான ஜேர்மன் சம்பியன் கிண்ணத்தையும், 2016/2017 மற்றும் 2017/2018 பருவகாலங்களுக்கான ஜேர்மன் சுபர் கிண்ணங்களையும் (Germar Super Cup) இரு தடவைகள் வென்றுள்ளது.

மேலும், வெவ்வேறான கழகங்களின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி 3 தடவைகள் UEFA சம்பியன் கிண்ணத்தை வென்றது மட்டுமின்றி, நான்கு தடவைகள் தனது அணியை இறுதிப் போட்டிவரை கொண்டுசென்ற பயிற்றுவிப்பாளர்கள் பட்டியலில் இவரின் பெயரை மட்டுமே காண முடியும்.

இவர் தனது பயிற்றுவிப்பு காலத்தில் கூடுதலான காலம் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய கழகமாக ஏ.சி மிலான் கழகம் திகழ்கிறது. அவர் அக்கழகத்தின் பயிற்றுவிப்பாளராக 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை செயற்பட்டுள்ளார்.

டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை

இவ்வெற்றியின் மூலம் டோர்ட்மன்ட் கழகத்தின் மைதானத்தில் இறுதியாக விளையாடிய 7..

பயர்ன் முனிச் அணியின் தலைவரான கார்ல் ஹென்ஸ் ரும்மேகிஜ் (Carl Hens Rummenigge), கார்லோ அன்ஸலோட்டியின் பதவி நீக்கம் பற்றி அக்கழகத்தின் வலைத்தளத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

‘பருவகாலத்தின் ஆரம்பம் முதல் எமது அணியின் அடைவுகள் நாம் எதிர்பார்த்த விதத்தல் அமையவில்லை. பரிஸ் அணியுடனான போட்டியில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெளிவானது. எனவே, கார்லோவுடனான நீண்ட நேர உரையாடலின் பின் எமது முடிவை தெரியப்படுத்தினோம்.

எம்முடன் கார்லோ இணைந்து செயற்பட்டதற்கு நான் அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். எனினும், அவருடைய முயற்சிகள் பலனளிக்காதது வருத்தமாய் உள்ளது. கார்லோ எனது சிறந்த நண்பன். இதன் பின்னரும் அது அவ்வாறே காணப்படும். எனினும் கழகத்தின் நலவிற்காக எம்மால் இந்த முடிவை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.’ என்றார்.

பயர்ன் அணியின் நிர்வாகமானது கார்லோ அன்ஸலோட்டியை மட்டுமின்றி அவருடன் உறுதுணையாக செயற்பட்ட உதவிக் குழாத்தின் அங்கத்தவர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. அத்துடன் இடைப்பட்ட காலத்தின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அன்ஸலோட்டியுடன் உதவிப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட வில்லி ஸக்னோலை (Willy Sagno) நியமித்துள்ளது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க