மஹேல ஜெயவர்தன நவீன கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர். இலங்கையின் இந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் நியுசிலாந்து ரக்பியின் ( ALL BLACKS) மிக முக்கியமான ரசிகர் என்பது பலருக்கும் தெரியாத விடயம். இது தொடர்பாக நியுசிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
ரக்பி, இலங்கையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு விளையாட்டாக இருக்கும் நிலையில் மஹேலவின் ரக்பி மீதான இந்த ஆர்வம் ஒரு ஆரோக்கியமான விடயமாகும் எனக் குறிப்பிட்ட குறித்த செய்தி நிறுவனம், மஹேல சமூக வலைத்தளங்களில் நியுசிலாந்து ரக்பி அணி பற்றி கருத்துத் தெரிவிப்பது தொடர்பாக ஒரு செவ்வியையும் கண்டது. 2007 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் நியுசிலாந்து அணிக்கெதிராக மஹேல பெற்ற சதம் மூலம் நியுசிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறியமை பற்றி அச்செய்தி நிறுவனம் நினைவூட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுமதிபால மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் இலங்கை கிரிக்கெட்
இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால சூதாட்ட தொழிலில் ஈடுபட்டு வருதாக தொலைக்காட்சி….
குறித்த செவ்வியின்போது மஹேலவிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் உங்களுக்காக,
மஹேல, இலங்கையில் ரக்பி ஒரு முன்னணி விளையாட்டாக இருப்பதற்கு தேவையான பின்னணி எவ்வாறு உள்ளது?
உண்மையில் இலங்கையில் ரக்பி ஒரு முன்னணி விளையாட்டாக உள்ளது எனச் சொன்னால் பலருக்கும் நம்புவது கடினம். ஆனால், இலங்கையில் பாடசாலைகளில் ரக்பி ஒரு மிகப் பிரபலமான விளையாட்டாகும். சில பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டிகளை காண்பதற்கு பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நான் படித்த பாடசாலையும் ரக்பி விளையாட்டில் முன்னணியிலுள்ள ஒரு பாடசாலையாகும். எனவே நான் வளர்ந்தது ரக்பியுடன் என சொன்னால் அது மிகையில்லை.
எமது உள்ளூர் ரக்பி கழகங்கள் மிகப் பிரபலமானவை. பிஜி, சாமோஆ மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளின் முன்னணி வீரர்கள் எமது அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை எமது ரக்பியின் முன்னேற்றத்தினை பறைசாற்றுகின்றன.
நீங்கள் நியுசிலாந்து ரக்பி அணியின் ரசிகரானது எவ்வாறு ?
ஜோனாஹ் லோமு, க்லென் ஒஸ்போன், கிறிஸ்டியன் குள்ளேன் மற்றும் ஜெப் வில்சன் போன்ற வீரர்களின் காலத்தில் இருந்தே நான் நியுசிலாந்து ரக்பி அணியின் ரசிகன். அவர்கள் அனைவரும் அற்புதமான வீரர்கள். இலங்கை கிரிக்கெட் அணியின் அநேக வீரர்கள் ரக்பி விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள்தான். கடந்த கோடை காலத்தில் நான் அவுஸ்திரேலியாவில் விளையாடிக்கொண்டிருந்த போது சுப்பர் ரக்பி தொடரில் க்ருசொடர்ஸ் அணியின் பல போட்டிகளை கண்டு ரசித்துள்ளேன். சொல்லப் போனால் அப்போது எனது ஆதரவு க்ருசொடர்ஸ் அணிக்குத்தான்.
நீங்கள் கோடை காலத்தில் கிரிக்கெட் விளையாடுகிறீர்கள், அப்படியென்றால் உங்களது குளிர் கால தேசிய விளையாட்டு ரக்பி தானா?
துரதிஷ்டவசமாக எமது நாட்டில் குளிர் காலம் என்ற ஒன்று கிடையாது. பொதுவாக எப்போதும் வெப்பமான காலம்தான். எமது நாட்டில் ரக்பி, மழை காலங்களிலேயே இடம்பெறும். தொடர்ந்து 4 மாதங்களுக்கு இப்போட்டிகள் இடம்பெறும். எமது வீரர்கள் அதிக போட்டி மனப்பான்மையுடைய சிறந்த திறமையுள்ள வீரர்கள். குறிப்பாக அணிக்கு 7 பேர் கொண்ட போட்டிகளில் ஆசியாவில் நாம் சிறந்த இடத்தில் உள்ளோம். 15 வீரர்கள் அணி அந்தளவுக்கு பலம் பொருந்தியவர்களாக இல்லாவிட்டாலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் காணப்படுகின்றது.
கோஹ்லியின் அதிரடியோடு இலங்கையை T20 போட்டியிலும் வீழ்த்திய இந்தியா
திக்வெல்லவை அடுத்து துடுப்பாட வந்த வீரர்களில் அஞ்செலோ மெதிவ்ஸ்..
இலங்கையின் சில அணிகள் ஹகா நடனத்தை செய்து காட்டுவதாக கேள்விப்பட்டோம். அதனைப் பற்றி ஏதேனும் கூற முடியுமா?
ஆம், நியுசிலாந்து அணியின் சில வீரர்கள் எமது ரக்பி கழகங்கள் சிலவற்றுக்கு பயிற்றுவிப்பாளர்களாக உள்ளனர். அவர்களே ஹகா நடனத்தையும் பயிற்றுவித்துள்ளார்கள். நியுசிலாந்து அணியின் வீரர்களை எமது வீரர்களுடன் பார்க்கும் போது உண்மையில் பெருமையாக உள்ளது.
இலங்கை ரக்பி அணி சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவுக்கு முன்னேறும் என நம்புகிறீர்களா?
நாம் ஒரு சீரான வளர்ச்சியை கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். எமது வீரர்கள் 15 பேர் கொண்ட போட்டிகளில் விளையாடுவதற்கு மிகப்பெரிய தடை அவர்களின் உடல் தோற்றம்தான். எமது வீரர்கள் அந்தளவுக்கு பெரிய உடலமைப்பைக் கொண்டவர்களல்ல. எமது வீரர்களின் திறன் மற்றும் வேகத்தில் எந்தக் குறைபாடுமில்லை. அனால் உடல் அளவு மற்றும் உடற்பலம் என்பவற்றிலேயே குறைபாடுள்ளது.
எமக்கு மிகச்சிறந்த பல வீரர்கள் கிடைத்தவண்ணம் உள்ளனர். இன்னும் சில வருடங்களில் எம்மால் முதல் 20 அணிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு முன்னேற முடியும் என்பதுடன் ரக்பி உலகக் கிண்ணம் ஒன்றுக்கு தகுதி பெற எம்மால் முடியும் எனவும் நம்புகிறேன்.