கிரிக்கெட் பயிற்சிக்கூடத்தை ஆரம்பிக்கும் MS டோனி

375
MS Dhoni embarks on new cricket venture

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் காப்பாளருமான மஹேந்திர சிங் டோனி, டுபாயில் கிரிக்கெட் பயிற்சிக்கூடம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார்.

டுபாயில் உள்ள பசுபிக் விளையாட்டு கழகத்துடன் இணைந்து எம்.எஸ்.டோனி என்ற பெயரில் இந்த கிரிக்கெட் பயிற்சிக்கூடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2019 உலகக் கிண்ணம் வரை நான் பதவி விலகமாட்டேன் – திலங்க சுமதிபால

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக அடைந்து வரும் மோசமான தோல்விகளுக்காக…

இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பசுபிக் வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பர்விஸ் கானும், டோனியும் அண்மையில் கையெழுத்திட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, படிப்படியாக இந்த கிரிக்கெட் பயிற்சிக்கூடத்தை ஐக்கிய அரபு இராட்சியத்தின் சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக கல்ப் நிவ்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க முன்னர் கல்ப் நிவ்ஸ் செய்திச் சேவைக்கு டோனி வழங்கிய விசேட செவ்வியில், விளையாட்டின் முன்னேற்றத்துக்காக இவ்வாறான விளையாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பங்குதாரராகச் செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் கிரிக்கெட் விளையாட்டை மத்திய கிழக்கு நாடுகளில் முன்னேற்றமடையச் செய்து முழு உலகிற்கும் கிரிக்கெட்டை கொண்டு செல்வதுதான் எனது எதிர்பார்ப்பாகும்” என அவர் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான விரேந்திர செவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இவ்வாறு விஷேட கிரிக்கெட் பயிற்சிக்கூடங்களை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் டோனியும் இவர்களுடன் இணையவுள்ளார்.

அது போன்றே, இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இவ்வாறு கிரிக்கெட் பயிற்சிக் கல்லூரிகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டோனி வெளிநாட்டில் ஆரம்பிக்க உள்ள கிரிக்கெட் பயிற்சிக்கூடம் சம்பந்தமான பணிகளை இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடர் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், இதற்காக அவர் அடுத்த மாதம் டுபாய் செல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை அணிக்கெதிராக அறிவிக்கப்பட்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் உடற்தகுதியில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

13 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அவசர அழைப்பு

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக் மற்றும்….

இதற்கிடையில் தெரிவுக் குழுவின் தலைவர் பிரசாத், டோனிக்கு இனி வாய்ப்புகள் தேடி வராது, சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஏனவே, இந்த அறிவிப்பானது 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் வரை அவர் அணியில் நீடிப்பாரா என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே, டோனி இவ்வாறு தனது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தனது கவனத்தை விளையாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு ஆரம்பித்துள்ளதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.