இந்தியாவுடனான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரை 0-3 என முழுமையாக பறிகொடுத்தது.
இதன்மூலம் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடர் ஒன்றை முதல் முறை முழுமையாக கைப்பற்றியுள்ளது. மறுபுறம் 13 ஆண்டுகளின் பின் இலங்கை அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றின் அனைத்து போட்டிகளிலும் தோற்றிருப்பது இது முதல் முறையாகும்.
மற்றுமொரு இன்னிங்ஸ் தோல்வியை நெருங்கும் இலங்கை
இந்தியாவுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலும் மோசமாக…
பல்லேகலயி ல் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் இன்று (14) தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தபோதும் அந்த அணி தேனீர் இடைவேளைக்கு முன்னரே தனது எஞ்சிய விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை சந்தித்தது. இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை ஏழு நாட்களுக்குள் முழுமையாக கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடிய இலங்கை அணி 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையிலேயே இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. அதாவது இலங்கை இன்னிங்ஸ் தோல்வியை தடுப்பதென்றால் இன்னும் 333 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தது.
எனினும் போட்டி ஆரம்பமான விரைவிலேயே திமுத் கருணாரத்னவின் விக்கெட்டை ரவிச்சந்திரன் அஷ்வின் வீழ்த்தினார். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளின் இரண்டாவது இன்னிங்ஸ்களில் சிறப்பாக ஆடிய கருணாரத்ன இம்முறை 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதனை அடுத்து செயற்பட்ட மொஹமட் ஷமி விக்கெட்டை காத்துக்கொண்டு ஆடி வந்த மலின்த புஷ்பகுமாரவை ஆட்டமிழக்கச் செய்தார். நைட்வொச்மனாக (Night watchman) களமிறங்கிய அவர் 31 பந்துகளுக்கு ஒரு ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்தார்.
SSC டெஸ்டில் சதம் பெற்ற குசல் மெண்டிஸ் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அஷ்வினின் பந்துக்கு அடித்தாடி ஓட்டங்களை பெற முயன்றபோதும் இந்த முறை அவரது துடுப்பாட்ட பாணி வெற்றி அளிக்கவில்லை. அவர் முஹமட் ஷமியின் பந்துக்கு LBW முறையில் ஆட்டமிந்தார். மெண்டிஸ் இரண்டு பௌண்டரிகளுடன் 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.
இந்நிலையில் அனுபவ வீரர்களான அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் அணியை கரைசேர்க்க முயன்றனர். இருவரும் 5ஆவது விக்கெட்டுக்கு 65 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். எனினும் 36 ஓட்டங்களை பெற்றிருந்த சந்திமால் குல்தீப் யாதவ்வின் பந்துக்கு ஆட்டமிழந்தார். இந்த டெஸ்டின் இலங்கை அணியின் இரண்டு இன்னிங்களிலும் சந்திமால் பெற்ற 50 க்கும் குறைவான ஓட்டங்களே சிறந்த ஓட்டங்களாக இருந்த போதும் அவர் இந்த தொடரில் மோசமான துடுப்பாட்டத்தையே வெளிக்காட்டியுள்ளார்.
அதாவது இந்த டெஸ்ட் தொடரில் சந்திமாலின் நான்கு இன்னிங்ஸ்களிலும் அவரது ஓட்ட சராசரி 24 ஆகும். இரண்டுக்கு அதிகமான டெஸ்ட் தொடர் ஒன்றில் சந்திமாலின் இரண்டாவது மிக மோசமான துடுப்பாட்டம் இதுவாகும். இந்த தொடரில் அரைச்சதம் பெறாத ஒரே முன்வரிசை துடுப்பாட்ட வீரரும் சந்திமால் ஆவார்.
சந்திமால் தனது விக்கெட்டை பறிகொடுத்து மூன்று ஓவர்கள் கழித்து மெதிவ்சும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 96 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்ற அவர் அஷ்வினின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இலங்கைக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிக்கான இந்திய குழாமில்..
இந்நிலையில் நிரோஷன் திக்வெல்ல ஒருமுனையில் வேகமாக துடுப்பெடுத்தாட, மறுமுனையில் இலங்கை அணியின் கடைசி வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் அரங்கு திரும்பினர். திக்வெல்ல 52 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை அணி 74.3 ஓவர்களில் 181 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஆட்டத்தின் மூன்றாவது நாள்கூட முழுமையாக பூர்த்தியாகாத நிலையில் இலங்கை அணி தனது இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ஓட்டங்களைக் கூட எட்டாமல் 20 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்தியா சார்பில் அஷ்வின் நான்கு விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசைகளை சாய்த்தனர்.
கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சுக்காக 487 ஓட்டங்களை பெற்றது. இதன்போது ஆரம்ப வீரர் ஷிகர் தவான் (119) மற்றும் ஹார்திக் பாண்டியாவின் (108) அதிரடி சதங்கள் இந்திய அணிக்கு வலுச்சேர்த்தது.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 37.4 ஓவர்களுக்குள் 135 ஓட்டங்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 352 ஓட்டங்களால் பின்தங்கியதால் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ ஓன் (Follow on) செய்ய வேண்டி ஏற்பட்டது.
இந்த டெஸ்டில் இந்திய அணிக்காக அதிரடி சதம் பெற்று பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திய பாண்டியா போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றதோடு, இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்களுடன் அதிகபட்சமாக 358 ஓட்டங்களை விளாசிய ஷிகர் தவானுக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது.
செப்டம்பரில் பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி
இலங்கை அணி வரும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு வரலாற்று…
இந்திய அணியின் விசேட ஒருநாள் துடுப்பாட்ட வீரரான தவான் மாற்று வீரராக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டு தற்போது அந்த அணியில் ஸ்திரமான இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி பல்லேகல டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற வெளிநாட்டு அணி என்ற பாகிஸ்தானின் (8) சாதனையை முறியடித்துள்ளது. இலங்கையில் இந்திய அணியின் 9 ஆவது டெஸ்ட் வெற்றி இது என்பதோடு இதில் ஐந்து வெற்றிகள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக பெற்ற வெற்றிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்திய அணி 1967க்குப் பின்னர் வெளிநாட்டு மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் வென்றது இது முதல் முறையாகும். அப்போது நியூஸிலாந்தை இந்தியா 3-1 என வென்றது.
அடுத்து இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஆடும் ஒருநாள் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
India - Batting | Toss: India | |
---|---|---|
Shikhar Dhawan | c Chandimal b Pushpakumara | 119 (123) |
KL Rahul | c Karunarathne b Pushpakumara | 85 (135) |
Chesteshwar Pujara | c Mathews b Sandakan | 8 (33) |
Virat Kohli | c Karunarathne b Sandakan | 42 (84) |
Ajinkya Rahane | b Pushpakumara | 17 (48) |
Ravinchandran Ashwin | c Dickwella b Fernando | 31 (75) |
Wriddhiman Saha | c Perera b Fernando | 16 (43) |
Hardik Pandya | c Perera b Sandakan | 108 (96) |
Kuldeep Yadav | c Dickwella b Sandakan | 26 (73) |
Mohammed Shami | c & b Sandakan | 8 (130 |
Umesh Yadav | Not Out | 3 (14) |
Total | Extras (24) | 487 (122.3 overs) |
Sri Lanka - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Vishwa Fernando | 26 | 3 | 87 | 2 |
Lahiru Kumara | 23 | 1 | 104 | 0 |
Dimuth Karunaratne | 7 | 0 | 30 | 0 |
Dilruwan Perera | 8 | 1 | 36 | 0 |
Lakshan Sandakan | 35.3 | 4 | 132 | 5 |
Malinda Pushpakumara | 23 | 2 | 82 | 3 |
Sri Lanka - Batting | Toss: India | |
---|---|---|
Dimuth Karunarathne | c Saha b Shami | 4 (15) |
Upul Tharanga | c Saha b Shami | 5 (5) |
Kusal Mendis | Run Out (Ashwin/Kuldeep) | 18 (19) |
Dinesh Chandimal | c Rahul b Ashwin | 48 (87) |
Angelo Mathews | LBW b Pandya | 0 (3) |
Niroshan Dickwella | st Saha b Kuldeep | 29 (31) |
Dilruwan Perera | c Pandya b Kuldeep | 0 (4) |
Malinda Pushpakumara | b Kuldeep | 10 (27) |
Lakshan Sandakan | c Dhawan b Ashwin | 10 (24) |
Vishwa Fernando | b Kuldeep | 0 (10) |
Lahiru Kumara | Not Out | 0 (1) |
Total | Extras (11) | 135 (37.4 overs) |
India - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Mohammed Shami | 6.5 | 1 | 17 | 2 |
Umesh Yadav | 3.1 | 0 | 23 | 0 |
Hardik Pandya | 6 | 1 | 28 | 1 |
Kuldeep Yadav | 13 | 2 | 40 | 4 |
Ravichandran Ashwin | 8.4 | 2 | 22 | 2 |
Sri Lanka - Batting | Toss: India | |
---|---|---|
Dimuth Karunarathne | c Rahane b Ashwin | 16 (48) |
Upul Tharanga | b Umesh Yadav | 07 (31) |
Malinda Pushpakumara | c Saha b Shami | 01 (32) |
Kusal Mendis | LBW b Shami | 12 (21) |
Dinesh Chandimal | c Pujara b Kuldeep Yadav | 36 (89) |
Angelo Mathews | LBW b Ashwin | 35 (96) |
Niroshan Dickwella | c Rahane b Umesh Yadav | 41 (52) |
Dilruwan Perera | c Pandya b Ashwin | 8 (23) |
Lakshan Sandakan | c Saha b Shami | 8 (24) |
Vishwa Fernando | Not Out | 4 (17) |
Lahiru Kumara | b Ashwin | 10 (15) |
Total | Extras (3) | 181 (F/O) (74.3 overs) |
India - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Mohammed Shami | 15 | 6 | 32 | 3 |
Ravichandran Ashwin | 28.3 | 6 | 68 | 4 |
Umesh Yadav | 13 | 5 | 21 | 2 |
Kuldeep Yadav | 17 | 4 | 56 | 1 |
Hardik Pandya | 1 | 0 | 2 | 0 |