இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவின்திர ஜடேஜாவுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) போட்டித் தடை விதித்துள்ளது. வீரர்கள் மற்றும் வீரர் உதவிப் பணியாளர்களுக்கான ஐ.சி.சி. நடத்தை விதியை மீறியதாக குற்றங்காணப்பட்டமைக்காகவே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சனிக்கிழமையின் நடத்தை விதி மீறலை அடுத்து அவரது மோசமான நடத்தைக்கான புள்ளிகளில் மூன்று புள்ளிகள் இணைக்கப்பட்டிருப்பதோடு அது ஆறு புள்ளிகளை எட்டியுள்ளது. எனவே, அவருக்கு போட்டித் தடையோடு போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- ஜடேஜா அடுத்த 24 மாதங்களுக்குள் தனது மோசமான நடத்தைக்கான புள்ளிகளை எட்டு அல்லது அதற்கு மேல் எட்டிவிட்டால் அதனால் அவர் நான்கு போட்டிகளுக்கான இடைநீக்க புள்ளிகளை அடைந்துவிடுவார்.
மெதிவ்ஸ் பந்துவீசாதது பெரும் இழப்பு – சந்திமால்
இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் இணைக்கப்பட்ட ஒரே
கொழும்பு, SSC மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான சனிக்கிழமை, ஜடேஜா வீரர்கள் மற்றும் வீரர் உதவிப் பணியாளர்களுக்கான ஐ.சி.சி. நடத்தை விதியின் வரைபு 2.2.8 ஐ மீறியிருப்பதாக குற்றங்காணப்பட்டுள்ளார். இது “சர்வதேச போட்டி ஒன்றின்போது அருகில் இருக்கும் வீரர் ஒருவர், வீரர் உதவி பணியாளர், நடுவர், போட்டி மத்தியஸ்தர் அல்லது வேறு எந்த மூன்றாம் நபர் மீதும் பொருத்தமற்ற வகையிலும் ஆபத்தான முறையிலும் பந்தை (அல்லது தண்ணீர் போத்தல் போன்ற எந்த ஒரு கிரிக்கெட்டுடன் தொடர்புடைய உபகரணத்தை) வீசி எறிவது” தொடர்பான விதியாகும்.
2016 ஒக்டோபரில் இந்தூரில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஜடேஜா நடத்தை விதி 2.2.11 ஐ மீறியதற்கு 50 வீத அபராதம் மற்றும் மோசமான நடத்தைக்கான மூன்று புள்ளிகளையும் பெற்றிருந்தார். இதற்கு மேலதிகமாக அவர் மேலும் மூன்று நடத்தை முறைகேட்டிற்கான புள்ளிகளை பெற்றிருப்பதால் அவர் வரைபு 7.6 ஐ நடைமுறைப்படுத்துவதற்கான நடத்தை மீறலுக்கான நான்கு புள்ளிகளை அடைந்துள்ளார். இது தற்போது இடைநீக்க புள்ளிகளாக மாற்றமடைந்துள்ளது.
இதனால் ஜடேஜா பல்லேகலயில் வரும் ஓகஸ்ட் 12 முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த போட்டி இடைநிறுத்தத்திற்கு பின்னரும் ஜடேஜாவின் ஒழுக்காற்று பதிவில் ஆறு மோசமான நடத்தைக்கான புள்ளிகள் எஞ்சியுள்ளன. அடுத்த 24 மாதங்களுக்குள் அவர் தனது மோசமான நடத்தைக்கான புள்ளிகளை எட்டு அல்லது அதற்கு மேல் எட்டிவிட்டால் அது நான்கு இடைநீக்க புள்ளிகளாக மாறிவிடும்.
குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை வீசப்பட்ட 58 ஆவது ஓவரின் கடைசி பந்தில் நிகழ்ந்தது. அப்போது தான் வீசிய பந்துக்கு களத்தடுப்பில் ஈடுபட்ட ஜடேஜா, தனது கோட்டுக்குள் இருந்து வெளியேறாமல் இருந்த துடுப்பாட்ட வீரரின் திசையை நோக்கி பந்தை திரும்ப வீசினார். அந்த பந்து திமுத் கருணாரத்னவை தாக்குவது நூலிழையில் தப்பியது. ஜடேஜா பந்தை ஆபத்தான முறையில் எறிந்ததாக கள நடுவர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியுடன் தொடரையும் இழந்தது இலங்கை
இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 53
ஐ.சி.சி போட்டி மத்தியஸ்தர் ரிச்சி ரிச்சட்சன் பரிந்துரைத்த முன்மொழிவுகளின்படி தன் மீதான குற்றச்சாட்டை ஜடேஜா ஏற்றதை அடுத்து அது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்த தேவை ஏற்படவில்லை.
கள நடுவர்களான பிரூஸ் ஒக்போர்ட் மற்றும் ரொட் டியுகர், மூன்றாவது நடுவர் ரிச்சட் இல்லிங்வேர்த் மற்றும் நான்காவது நாடுவர் ருச்சிர பள்ளியகுரி ஆகியோராலேயே இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வகையான 2 ஆம் நிலை விதி மீறல்களுக்கும் 50 தொடக்கம் 100 வீதம் வரையான போட்டிக் கட்டணத்தை அபராதமாக விதிக்க முடியும் அல்லது இரு இடைநீக்க புள்ளிகள் மற்றும் மூன்று அல்லது நான்கு நடத்தை புள்ளிகள் வரையும் விதிக்கப்பட முடியும்.
முக்கிய குறிப்பு
*இரு இடைநீக்கப் புள்ளி – ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகள் அல்லது இரண்டு T20 தடைகளுக்கு சமனாகும். இதில் குறித்த வீரருக்கு எந்த போட்டி முதலில் வருகிறதோ அதில் தடை அமுலாகும்.
*நான்கு இடைநீக்கப் புள்ளி – இரண்டு டெஸ்ட் அல்லது நான்கு ஒருநாள் சர்வதேச போட்டிகள் அல்லது நான்கு T20 தடைகளுக்கு சமனாகும். இதில் குறித்த வீரருக்கு எந்த போட்டி முதலில் வருகிறதோ அதில் தடை அமுலாகும்.