எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் ஹொங்கொங் கிங்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள 20 வயதுக்கு உட்பட்ட ரக்பி செவன்ஸ் போட்டிகளுக்கான 12 பேர் கொண்ட ரக்பி குழாமை இலங்கை ரக்பி தெரிவுக் குழு அறிவித்துள்ளது.
எதிர்பார்த்தவாறே முன்னாள் புனித தோமியர் கல்லூரி அணித் தலைவர் நவீன் ஹேனகன்கனமகே குறித்த அணியை வழிநடத்தவுள்ள அதேநேரம், அனுபவம் வாய்ந்த த்ரீ கோர்ட்டர் (three-quarter) சுபுன் தில்ஷான் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, ரக்பி கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களான லஹிறு ஹேரத், அதிஷ வீரதுங்க (இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்) வாஜித் பௌமி மற்றும் சந்தேஷ் ஜயவிக்ரம (பொலிஸ் விளையாட்டுக் கழகம்) போன்ற அனுபவம் மிக்க ரக்பி வீரர்கள் அணியைப் பலப்படுத்தவுள்ளனர்.
ஆசிய செவன்ஸ் சம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இலங்கை ரக்பி அணி?
ஆசிய செவன்ஸ் சம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இலங்கை ரக்பி அணி?
மேற்கிந்திய தீவுகளின் பஹாமாஸ் தீவுகளில் தற்போது நடைபெற்று வருகின்ற 6ஆவது..
சமோத் பெர்னாண்டோ (இசிபதன கல்லூரி), அவிஷ்க லீ (வெஸ்லி கல்லூரி), தினுக் அமர்சிங்க (புனித அந்தோனியார் கல்லூரி), மற்றும் தீக்ஷண தசநாயக்க (புனித பேதுரு கல்லூரி) ஆகியோரும் அண்மையில் நிறைவுற்ற சுப்பர் செவன்ஸ் மற்றும் சிங்கர் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை காரணமாக இவ்வணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சுரங்க பண்டார, றணிது பத்மசங்க (இசிபதன கல்லூரி), ஆகியோர் சுப்பர் செவன்ஸ் மற்றும் மெர்கன்டைல் செவன்ஸ் (Mercantile 7’s) போட்டிகளில் சிறப்பித்திருந்தமை காரணமாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த பைவ் எய்ட் (five-eight) வீரரான சதுர செனவிரத்ன மற்றும் ஹெவலொக் விளையாட்டுக் கழக விங்கர் ரமேஷ் பெர்னாண்டோ உட்பட தனுஜ மதுரங்க ஆகியோர் உதிரி வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட 12 வீரர்களைக் கொண்ட குழாம்
நவீன் ஹேனகன்கனமகே (அணித் தலைவர்) – புனித தோமியர் கல்லூரி
சுபுன் தில்ஷான் (துணைத் தலைவர்) – (சயன்ஸ் கல்லூரி / கடற்படை விளையாட்டுக் கழகம்)
சமோத் பெர்னாண்டோ – இசிபதன கல்லூரி
அதீஷ வீரதுங்க – (இசிபதன கல்லூரி / கடற்படை விளையாட்டுக் கழகம்)
வாஜித் பௌமி – (ஸாஹிரா கல்லூரி / பொலிஸ் விளையாட்டுக் கழகம்)
சந்தேஷ் ஜயவிக்ரம – (புனித பேதுரு கல்லூரி / பொலிஸ் விளையாட்டுக் கழகம்)
தீக்ஷண தசநாயக்க – (புனித பேதுரு கல்லூரி)
சுரங்க பண்டார – (பொலிஸ் விளையாட்டுக் கழகம்)
லஹிரு ஹேரத் – (CWW கன்னங்கரா / கடற்படை விளையாட்டுக் கழகம்)
றணிந்து பத்மசங்க – (இசிபதன கல்லூரி)
அவிஷ்க லீ – (வெஸ்லி கல்லூரி)
தினுக் அமர்சிங்க (புனித அந்தோனியார் கல்லூரி)
உதிரி வீரர்கள்
தனுஜ மதுரங்க – (சயன்ஸ் கல்லூரி / கடற்படை விளையாட்டுக் கழகம்)
சதுர செனவிரத்ன – (புனித ஜோசப் கல்லூரி)
ரமேஷ் பெர்னாண்டோ – (புனித பேதுரு கல்லூரி / ஹெவலொக் விளையாட்டுக் கழகம்)