இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய அணி 304 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டி மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
189 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் நான்காவது நாளான இன்று துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி, அணித் தலைவர் விராத் கோஹ்லி மற்றும் அஜின்கியா ரஹேனே ஆகியோர் வெறும் 30 நிமிடங்களுக்குள் 39 பந்துகளில் அதிரடியாக 51 ஓட்டங்களை விளாசினர்.
136 பந்துகளை எதிர்கொண்ட அணித் தலைவர் விராத் கோஹ்லி 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக தனது 17ஆவது சதத்தினை பூர்த்தி செய்து 103 ஓட்டங்களை பதிவு செய்த நிலையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்று, 550 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில் இரண்டாம் இன்னிங்சை இடைநிறுத்திக்கொண்டது.
அதனையடுத்து 550 என்ற பாரிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி போட்டியின் மூன்றாவது ஓவரில் இரண்டாம் ஸ்லிப்பில் களத் தடுப்பில் ஈடுபட்டிருந்த விராத் கோஹ்லி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க பெற்றுக்கொடுத்த பிடியெடுப்பை தவறவிட்டார்.
எனினும் கிடைத்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத் தவறிய உபுல் தரங்க மேலும் இரண்டு பந்துகளை மாத்திரமே எதிர்கொண்ட நிலையில் முஹம்மத் ஷமியின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
அதனையடுத்து களமிறங்கிய டெஸ்ட் அறிமுக வீரரான தனுஷ்க குணதிலக்க வெறும் 2 ஓட்டங்களுடன் உமேஷ் யாதவ்வின் பந்துவீச்சில் புஜராவிடம் பிடி கொடுத்து வந்த வேகத்திலேயே ஓய்வறை திரும்பினார்.
எனினும், தொடர்ந்து களமிறங்கிய குசல் மென்டிஸ், திமுத் கருணாரத்னவுடன் இணைந்து மூன்றாம் விக்கெட்டுக்காக பெறுமதிமிக்க 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தியிருந்த வேளை ரவீந்திர ஜடேஜாவின் சுழல் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் விர்டிமன் சஹாவிடம் பிடி கொடுத்து, 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் வெறும் இரண்டு ஓட்டங்களுடன் மீண்டும் ரவீந்திர ஜடேஜாவின் சுழல் பந்து வீச்சில் ஹர்திக் பண்டியாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார்.
116 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பாரிய நெருக்கடியிலிருந்தவேளை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவுடன் இணைந்து கொண்ட நிரோஷன் திக்வெல்ல ஐந்தாவது விக்கெட்டுக்காக பெறுமதிமிக்க 101 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தினார்.
சிறப்பாக துடுப்பாடிய நிரோஷன் திக்வெல்ல தன்னுடைய நான்காவது அரைச் சதத்தினை பூர்த்தி செய்த நிலையில் துரதிஷ்டவசமாக ரவிச்சந்திரன் அஷ்வினின் சுழல் பந்துக்கு ஸ்வீப் செய்த போது மட்டையின் கீழ்ப் பகுதியில் பட்டு விக்கெட் காப்பாளர் விர்டிமன் சஹா அபாரமாக பிடியெடுக்க களத்திலிருந்து வெளியேறினார்.
ரங்கன ஹேரத்தின் விரலில் முறிவு இல்லை – குருசிங்க
காலியில் நடைபெறும் இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின்…
அதேநேரம், மறுமுனையில் சிறப்பாக துடுப்பாடிக்கொண்டிருந்த திமுத் கருணாரத்ன 208 பந்துகளில் 9 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 97 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வினின் பந்துக்கு ஸ்வீப் செய்து பவுண்டரி ஒன்றைப் பெற முயன்ற வேளை நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
அதனையடுத்து விரலில் ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக அணித் தலைவர் ரங்கன ஹேரத் துடுப்பாட வராததால், நுவன் பிரதீப் மற்றும் லஹிறு குமார தொடர்ந்து களமிறங்கிய போதும் ஓட்டங்கள் எதுவும் பெறாமலே அடுத்தடுத்து ஆட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறினர். அதேநேரம் இரண்டாம் இன்னிங்சிலும் ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய தில்ருவான் பெரேரா 21 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இறுதியில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்று 304 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ஷிக்கர் தவான் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
India - Batting | Toss: India | |
---|---|---|
Shikhar Dhawan | c Mathews b Pradeep | 190 (168) |
Abhinav Mukund | c Dickwella b Pradeep | 12 (26) |
Chesteshwar Pujara | c Dickwella b Pradeep | 153 (265) |
Virat Kohli | c Dickwella b Pradeep | 3 (8) |
Ajinkya Rahane | c Karunarathne b Kumara | 57 (130) |
Ravinchandran Ashwin | c Dickwella b Pradeep | 47 (60) |
Wriddhiman Saha | c Perera b Herath | 16 (32) |
Hardik Pandya | c De Silva (Sub) b Kumara | 50 (49) |
Ravindra Jadeja | b Pradeep | 15 (24) |
Mohammed Shami | c Tharanga b Kumara | 30 (30 |
Umesh Yadav | Not Out | 11 (10) |
Total | Extras (16) | 600 (133.1 overs) |
Sri Lanka - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Nuwan Pradeep | 31 | 2 | 132 | 6 |
Lahiru Kumara | 25.1 | 3 | 131 | 3 |
Dilruwan Perera | 30 | 1 | 130 | 0 |
Rangana Herath | 40 | 6 | 159 | 1 |
Danushka Gunathilaka | 7 | 0 | 43 | 0 |
Sri Lanka - Batting | Toss: India | |
---|---|---|
Dimuth Karunarathne | LBW b Yadav | 2 (9) |
Upul Tharanga | Run Out | 64 (93) |
Danushka Gunathilaka | c Dhawan b Shami | 16 (37) |
Kusal Mendis | c Dhawan b Shami | 0 (4) |
Angelo Mathews | c Kohli b Jadeja | 83 (130) |
Niroshan Dickwella | c Mukund b Ashwin | 8 (15) |
Dilruwan Perera | Not Out | 92 (132) |
Rangana Herath | c Rahane b Jadeja | 9 (13) |
Nuwan Pradeep | b Pandya | 10 (26) |
Lahiru Kumara | b Jadeja | 2 (12) |
Asela Gunaratne | DNB | |
Total | Extras (5) | 291 (78.3 overs) |
India - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Mohammed Shami | 12 | 2 | 45 | 2 |
Umesh Yadav | 14 | 1 | 78 | 1 |
Ravichandran Ashwin | 27 | 5 | 84 | 1 |
Ravindra Jadeja | 22.3 | 3 | 67 | 3 |
Hardik Pandya | 3 | 0 | 13 | 1 |
India - Batting | Toss: India | |
---|---|---|
Shikhar Dhawan | c Gunathilaka b Perera | 14 (14) |
Abhinav Mukund | LBW b Gunathilaka | 81 (116) |
Chesteshwar Pujara | c Mendis b Kumara | 15 (35) |
Virat Kohli | Not Out | 103 (136) |
Ajinkya Rahane | Not Out | 23 (18) |
Ravinchandran Ashwin | ||
Wriddhiman Saha | ||
Hardik Pandya | ||
Ravindra Jadeja | ||
Mohammed Shami | ||
Umesh Yadav | ||
Total | Extras (4) | 240/3 (53 overs) |
Sri Lanka - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Nuwan Pradeep | 12 | 2 | 63 | 0 |
Dilruwan Perera | 15 | 0 | 67 | 1 |
Lahiru Kumara | 12 | 1 | 59 | 1 |
Rangana Herath | 9 | 0 | 34 | 0 |
Danushka Gunathilaka | 5 | 0 | 16 | 1 |
Sri Lanka - Batting | Toss: India | |
---|---|---|
Dimuth Karunarathne | b Ashwin | 97 (208) |
Upul Tharanga | b Shami | 10 (10) |
Danushka Gunathilaka | c Pujara b Yadav | 2 (8) |
Kusal Mendis | c Saha b Jadeja | 36 (71) |
Angelo Mathews | c Pandya b Jadeja | 2 (10 |
Niroshan Dickwella | c Saha b Ashwin | 67 (94) |
Dilruwan Perera | Not Out | 21 (50) |
Nuwan Pradeep | c Kohli b Ashwin | 0 (2) |
Lahiru Kumara | c Shami b Jadeja | 0 (8) |
Rangana Herath | Did Not Bat | |
Asela Gunaratne | Did Not Bat | |
Total | Extras (10) | 245 (76.5 overs) |
India - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Mohammed Shami | 9 | 0 | 43 | 1 |
Umesh Yadav | 9 | 0 | 42 | 1 |
Ravindra Jadeja | 24.5 | 4 | 71 | 3 |
Ravichandra Ashwin | 27 | 4 | 65 | 3 |
Hardik Pandya | 7 | 0 | 21 | 0 |