அம்பாரை மாவட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை (29ஆம் திகதி) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை அம்பாரை இந்திரசாலா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளன.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சதுரிக்கா தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விளையாட்டுப் போட்டியில் அம்பாரை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள்
பஹாமாஸ், நசௌவ்வில் நிறைவுக்கு வந்த 6ஆவது பொதுநலவாய இளையோர்..
இதில், 13 வயது தொடக்கம் 20 வயது வரை ஒரு பிரிவாகவும், 20 வயது தொடக்கம் 29 வயது வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் அனைத்தும் ஆண்கள் பெண்கள் என இரு பாலாருக்கும் இடம்பெறவுள்ளன.
இப்போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெறுகின்ற அனைத்து வீர, வீராங்கனைகளும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.