ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையில்

937
Sri Lanka vs India

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் மற்றும் செதேஷ்வர் புஜாரா ஆகியோரின் சதங்களின் மூலம் அந்த அணி, இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 399 ஓட்டங்களை பெற்று மிகவும் வலுவான நிலையிலுள்ளது.  

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது. இறுதியாக நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்த்திருந்த போதிலும் அவருக்குப் பதிலாக கடந்தாண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகியிருந்த சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியில் முதல் முறை வாய்ப்பைப் பெற்றார்.

அதேநேரம், இலங்கை அணியின் புதிய அணித் தலைவர் சந்திமால் நிமோனியா காய்ச்சல் காரணமாக இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். எனவே, அண்மைய காலங்களில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பிரகாசித்திருந்த துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு,  இலங்கை அணி சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டார்.  

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரட்ன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹஷான் திலகரட்ன, இந்தியாவுடன் இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்…

இந்த போட்டியானது, சூழல் பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வினின் 50வது டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் தசைபிடிப்பு காரணமாக இலங்கை அணியிலிருந்து விலகியிருந்த வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் உடற்தகுதி பெற்றிருந்ததால் அணியில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

அந்த வகையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராத் கோலி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.  அதன்படி களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் அபினவ் முகந்த் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 27 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த நிலையில் நுவான் பிரதீப்பின் நேர்த்தியான பந்து வீச்சில், அபினவ் முகுந்த் 12 ஓட்டங்களுக்கு விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து ஷிகர் தவானுடன் இணைந்துகொண்ட செதேஷ்வர் புஜாரா ஆகியோர் இலங்கை அணியின் பலவீனமான பந்து வீச்சினை  சிதறடித்து ஓட்டங்களை குவித்தனர். எனினும், ஷிக்கர் தவான் 31 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமராவின் பந்து வீச்சில் சிக்குண்டு இரண்டாம் ஸ்லிப்பில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அசேல குணரத்னவிடம் பிடியொன்றை பெற்றுக்கொடுத்தார். எனினும், துரதிஷ்டவசமாக அசேல குறித்த பிடியெடுப்பை தவற விட்டார். அத்துடன், கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு உதிரி வீரரான தனஞ்சய டி சில்வா மைதானத்திற்குள் அழைக்கப்பட்டார்.   

அவரச சத்திரசிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ள அசேல குணரத்ன

காலியில் ஆரம்பமான இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின்…

அதேநேரம், ஷிகர் தவானின் அதிரடியான துடுப்பாட்டத்தின் காரணமாக பகல் போசன இடைவேளையின் போது 28 ஓவர்கள் நிறைவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு ஓவருக்கு 5.96 என்ற ஓட்ட சராசரியில் 167 ஓட்டங்களை பதிவு செய்திருந்தது.

பகல் போசன இடைவேளைக்குப் பின்னர் அதிரடி துடுப்பாட்டத்தை தொடர்ந்த ஷிகர் தவான் வெறும் 116 பந்துகளில் 16 பௌண்டரிகளுடன் சதம் விளாசினார். அவர் இரண்டாம் விக்கெட்டுக்காக புஜாராவுடன் இணைந்து 280 பந்துகளில் 253 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து துடுப்பாட்டத்தை மேலும் வேகப்படுத்திய தவான் தேனீர் இடைவேளைக்குள் அதிரடியாக ஓட்டங்களைப் பெற்றார். அவர், தனது முன்னைய அதிக டெஸ்ட் ஓட்டமான 187 ஓட்டங்களை கடந்து 168 பந்துகளில் 31 பௌண்டரிகள் உள்ளடங்கலாக இரட்டைச் சதத்துக்கு 10 ஓட்டங்களே எஞ்சியிருந்த நிலையில் துரதிஷ்டவசமாக 190 ஓட்டங்களுக்கு நுவான் பிரதீப்பின் பந்து வீச்சில் அஞ்செலோ மெதிவ்சிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் விராத் கோலி நெடு நேரம் களத்தில் நீடிக்கவில்லை. வெறும் 8 பந்துகளை மாத்திரமே எதிர்கொண்ட நிலையில் 3 ஓட்டங்களுடன் இலங்கை அணித் தலைவர் ரங்கன ஹேரத்தின் ரிவீவ்வின் மூலம் துரதிஷ்டவசமாக அட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறினார்.  

நுவான் பிரதீப் வீசிய பந்து விராத் கோலியின் துடுப்பு மட்டைக்கு அருகாமையில் சென்றமையினால் நுவான் பிரதீப் ஆட்மிழப்பிற்கான கோரிக்கையை விடுத்த போதும், களநடுவர் சந்தேகம் காரணமாக ஆட்டமிழப்பை வழங்கவில்லை. எனினும், விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல உட்பட களத்தடுப்பு வீரர்களின் வேண்டுக்கோளுக்கமைய ரங்கன ஹேரத் ரிவீவ் வேண்டினார்.

அதனையடுத்து, குறித்த வீடியோவை மூன்றாம் நடுவர் ஆய்வு செய்த போது பந்து விராத் கோலியின் மட்டையில் தடவியவாறு செல்வது அவதானிக்கப்பட்டமையினால் களநடுவருக்கு அவுட் வழங்குமாறு பணிக்கப்பட்டது.

புளுநேவிஸ் சவால் கிண்ணத்தை கைப்பற்றியது லெஜன்ட் அணி

கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த புளு நேவிஸ் சவால் கிண்ணத்திற்கான..

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அஜிங்கயா ரஹானே மற்றும் செதேஷ்வர் புஜாரா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த வகையில் முதலாம் நாள் நிறைவின் போது ரஹானே மற்றும் செதேஷ்வர் புஜாரா ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்காக 49 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பதிவு செய்துள்ளனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய செதேஷ்வர் புஜாரா 247 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 144 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளார். ரஹானே 39 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

அதேவேளை, பந்து வீச்சில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரங்கன ஹேரத்துக்கு எவ்விதமான விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொள்ள இந்திய துடுப்பாட்ட வீரர்கள் இடமளிக்கவில்லை. சிறிய இடைவெளிக்குப் பின்னர் அணிக்கு திரும்பியிருந்த நுவான் பிரதீப் 52 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அந்த வகையில் முதலாம் நாள் நிறைவின்போது இந்திய அணி 335 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வலுவான நிலையிலுள்ளது. நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

India - BattingToss: India
Shikhar Dhawanc Mathews b Pradeep190 (168)
Abhinav Mukundc Dickwella b Pradeep12 (26)
Chesteshwar Pujarac Dickwella b Pradeep153 (265)
Virat Kohlic Dickwella b Pradeep3 (8)
Ajinkya Rahanec Karunarathne b Kumara57 (130)
Ravinchandran Ashwinc Dickwella b Pradeep47 (60)
Wriddhiman Sahac Perera b Herath16 (32)
Hardik Pandyac De Silva (Sub) b Kumara50 (49)
Ravindra Jadejab Pradeep15 (24)
Mohammed Shamic Tharanga b Kumara30 (30
Umesh YadavNot Out11 (10)
TotalExtras (16)600 (133.1 overs)
Sri Lanka - BowlingOMRW
Nuwan Pradeep3121326
Lahiru Kumara25.131313
Dilruwan Perera3011300
Rangana Herath4061591
Danushka Gunathilaka70430