இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோரின் கன்னிச் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 16 பந்துகள் எஞ்சிய நிலையில் எட்டு விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 2-1 என்ற நிலையில் ஐந்து ஒருநாள் கொண்ட போட்டித் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை?
ஒரு நாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியுடன் தமது சொந்த மண்ணில் இதுவரை..
இன்றைய போட்டிக்காக இலங்கை அணியில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படாத நிலையில், ஜிம்பாப்வே அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டொனல்ட் திரிபானவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் கார்ல் மும்பா இணைக்கப்பட்டுள்ளார். ரயான் போலுக்கு பதிலாக தரிசய் முசகன்டாவுக்கு இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட போட்டித் தொடரில் ஏற்கனவே இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில், இன்றைய தினம் மூன்றாவது போட்டிக்காக களமிறங்கியுள்ளன. அந்த வகையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஞ்சலோ மெதிவ்ஸ் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
சந்திமால் நீக்கப்பட்டமைக்கு ஜயசூரியவை விமர்சித்த அர்ஜுன ரணதுங்க
ஜிம்பாப்வே அணி சார்பாக ஆரம்பம் முதலே சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஹமில்டன் மசகட்சா முதலாவது பவர் ப்ளே ஓவர்களில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த போதிலும், இலங்கை அணியுடனான முதல் போட்டியில் சதம் விளாசி வெற்றிக்கு காரணாமாக இருந்த சொலமன் மிரே வெறும் 13 ஓட்டங்களுடன், நுவன் பிரதீப்பின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறினார்.
அதனையடுத்து இன்றைய போட்டிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட தரிசய் முசகன்டா அணியின் எதிர்பார்ப்பை சற்றும் ஏமாற்றாமல் ஹமில்டன் மசகட்சாவுடன் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்காக 127 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தி ஜிம்பாப்வே அணியை ஒரு வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார்.
எனினும், இலங்கை அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டம் பகுதி நேர பந்து வீச்சாளரான அசேல குணரத்னவின் அபார பந்து வீச்சினால் வீழ்த்தப்பட்டது. இரண்டாவது விக்கெட்டாக தரிசய் முசகன்டா, 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 48 ஓட்டங்களுடன் உபுல் தரங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும் தொடர்ந்தும் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஹமில்டன் மசகட்சா வெறும் 98 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்ளடங்கலாக சதம் கடந்து 111 ஓட்டங்களை பெற்ற நிலையில், கடந்த போட்டியில் ஹட்ரிக் சாதனை படைத்திருந்த வனிது ஹசரங்கவின் பந்துவீச்சில் நுவன் பிரதீப்பிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்களை குவிக்க தடுமாறிய ஜிம்பாப்வே அணி சார்பாக நிதானத் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சோன் வில்லியம்ஸ் 43 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்திய நிலையில் அசேல குணதரத்னவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஓய்வறை திரும்பினார்.
46ஆவது ஓவரின் போது ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இறுதி கட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்திய சிக்கந்தர் ராசா ஆட்டமிழக்காமல் போட்டியின் இறுதிப்பந்தில் விளாசிய சிக்ஸர் உட்பட 25 ஓட்டங்களை விளாசியதோடு, ஜிம்பாப்வே அணி 300 ஓட்டங்களை எட்டுவதற்கு பங்களிப்பு செய்தார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ஓட்டங்களைக் குவித்தது. இந்த ஓட்ட எண்ணிக்கையானது இந்த மைதானத்தில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அசேல குணரத்ன மற்றும் வனிது ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லசித் மலிங்க 9 ஓவர்கள் பந்து வீசி 71 ஓட்டங்களுக்கு ஒரே ஒரு விக்கெட்டினை மாத்திரம் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து 311 என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 229 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.
அபாரமாக துடுப்பாடிய நிரோஷன் திக்வெல்ல 14 பவுண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸ்சர் உள்ளடங்கலாக 116 ஓட்டங்களையும் குவித்தனர்.
பங்களாதேஷ் பரீமியர் லீக் தொடரில் களமிறங்கவுள்ள நிரோஷன் திக்வெல்ல
எனினும், 36ஆவது மற்றும் 37ஆவது ஓவர்களில் போது இவ்விருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சென்ற பொழுதிலும், அதனையடுத்து களமிறங்கிய குசல் மென்டிஸ் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் சிறப்பாகத் துடுப்பாடி இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
ஜிம்பாப்வே அணி சார்பாக பந்து வீச்சில் சோன் வில்லியம்ஸ் மற்றும் மல்கம் வல்லர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக தனுஷ்க குணதிலக்க தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி, 2-1 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 8ஆம் திகதி இதே மைதானத்தில் இலங்கை நேரப்படி காலை 9.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
>> இந்தப் போட்டியை நேரடியாகப் பார்வையிட <<
போட்டியின் சுருக்கம்
Zimbabwe - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Hamilton Masakadza | c Pradeep b Hasaranga | 111 (98) |
Solomon Mire | LBW b Pradeep | 13 (21) |
Tarisai Musakanda | c Tharanga b Gunarathne | 48 (57) |
Craig Ervine | LBW b Hasaranga | 16 (24) |
Sean Williams | b Gunarathne | 43 (47) |
Malcolm Waller | LBW b Malinga | 17 (24) |
Sikandar Raza | Not Out | 25 (17) |
PJ Moor | c Mendis b Sandakan | 24 (11) |
Graeme Cremer | Run Out | 0 (0) |
Carl Mumba | Not Out | 2 (2) |
Tendai Chatara | ||
Total | Extras (11) | 310/8 (50 Overs) |
Sri Lanka - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Lasith Malinga | 9 | 0 | 71 | 1 |
Nuwan Pradeep | 6 | 1 | 28 | 1 |
Dushmantha Chameera | 7 | 0 | 34 | 0 |
Lakshan Sandakan | 10 | 0 | 73 | 1 |
Wanindu Hasaranga | 7 | 0 | 44 | 2 |
Asela Gunarathne | 10 | 1 | 53 | 2 |
Danushka Gunathilaka | 1 | 0 | 5 | 0 |
Sri Lanka - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Niroshan Dickwella | c Williams b Waller | 102 (116) |
Danushka Gunathilaka | b Williams | 116 (111) |
Kusal Mendis | Not Out | 28 (25) |
Upul Tharanga | Not Out | 44 (32) |
Angelo Mathews | ||
Asela Gunarathne | ||
Wanindu Hasaranga | ||
Dushmantha Chameera | ||
Lakshan Sandakan | ||
Lasith Malinga | ||
Nuwan Pradeep | ||
Total | Extras (22) | 312/2 (47.2 overs) |
Zimbabwe - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Carl Mumba | 6.2 | 0 | 36 | 0 |
Tendai Chatara | 6 | 0 | 47 | 0 |
Sikandar Raza | 10 | 0 | 55 | 0 |
Graeme Cremer | 7 | 0 | 54 | 0 |
Sean Williams | 8 | 0 | 63 | 1 |
Malcolm Waller | 8 | 0 | 32 | 1 |
Solomon Mire | 2 | 0 | 19 | 0 |