ஹம்பாந்தோட்டை நகரில் நடைபெறவிருக்கும் ஜிம்பாப்வே அணியுடனான மீதமாகவுள்ள மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இலங்கை குழாத்தில், பந்து வீச்சு துறையினை மேம்படுத்தும் நோக்கோடு அனுபவமிக்க நுவான் குலசேகர மற்றும் இளம் வேகப்பந்து புயல் லஹிறு குமார ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை?
ஒரு நாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியுடன் தமது சொந்த மண்ணில் இதுவரை…
இதற்கு முன்னதாக, இலங்கை ஒரு நாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த மித வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் தற்போது வைரஸ் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதால், ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்.
“லக்மால் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காரணத்தினால் அவரை நாங்கள் மீண்டும் கொழும்பிற்கு அனுப்ப முடிவெடுத்தோம்“ என இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் லக்மாலின் நிலையை உறுதிப்படுத்தினார்.
நாளைய தினம், காற்றும் மைதானத்தின் உறுதித்தன்மையும் வேகப்பந்து வீச்சிற்கு சாதமாக அமையும் என்ற காரணத்தினால், மூன்று முன்வரிசை வேகப்பந்து வீச்சாளர்களுடன் இலங்கை அணி, இரண்டு வருடங்களின் பின்னர் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவிருக்கும் இப்போட்டியில் களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் வரும் 5 நாட்களில் 3 போட்டிகளில் இங்கு (ஹம்பாந்தோட்டையில்) விளையாடவுள்ளோம். எனவே, எங்களுக்கு மேலதிக வேகப்பந்து வீச்சாளர்களின் தேவை காணப்படுகின்றது. இதனால், நாங்கள் நுவான் குலசேகர மற்றும் லஹிறு குமார ஆகியோரினை அணிக்குழாத்தில் இணைத்தோம். எனினும் இதற்கு இன்னும் இறுதி அனுமதி பெறப்படவில்லை“ என மெதிவ்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை ஒரு நாள் குழாத்திலிருந்து அமில அபொன்சோ, லஹிறு மதுசங்க நீக்கம்
இன்றைய நாளில் முன்னதாக தமது பதவிக் காலத்தில் நீடிப்பினைப் பெற்றுக்கொண்ட.
4.2 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஹமபாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானமானது, 2011ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ணப் போட்டிகள், அதையடுத்து 2012ஆம் ஆண்டிற்கான T-20 சம்பியன்ஷிப் போட்டித் தொடர் என்பவற்றை நடாத்த பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த மைதானத்தில் 2011ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 17 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில் 13 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே அணியுடனான தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியினைப் பெற்றிருந்த இலங்கை அணியானது, அதற்கு இரண்டாவது போட்டி மூலம் பதிலடி கொடுத்து தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.
“காலியில், இரண்டாவது போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற அதே குழாமே, நாளைய போட்டியிலும் பொதுவாக களமிறங்கும்.“ என மெதிவ்ஸ் நாளை விளையாடவுள்ள இலங்கை அணி பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.