நெட்வெஸ்ட் T-20 தொடரிலிருந்து விலகிய மஹேல ஜயவர்தன

863

எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உள்ள நெட்வெஸ்ட் T-20 தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தமாகியிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனிப்பட்ட காரணங்களுக்காக கலந்து கொள்ள மாட்டார் என்று  லங்காஷயர் ள்ளூர் கிரிக்கெட் கழகம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளின் நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளரான மஹேல ஜயவர்தன எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி டர்ஹாம் ஜெட்ஸ் அணிக்கெதிரான ஆரம்பப் போட்டியில், லங்காஷயர் அணி சார்பாக களமிறங்கவிருந்தார்.

கிரஹம் போர்ட் சொல்லாமலேயே இலங்கையை விட்டு வேளியேற இதுதான் காரணமாம்

மஹேல, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கடந்த வருடம் சமர்செட் அணிக்காகவும், அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உள்ளூர் T-20 போட்டிகளுக்காக கராச்சி கிங்ஸ் அணி சார்பாகவும், நியூசிலாந்து உள்ளூர் T-20 போட்டிகளில் சென்ட்ரல் ஸ்டேஜ் அணி சார்பாகவும் பங்குபற்றியிருந்தார்

தற்பொழுது 39 வயதான மஹேல ஜெயவர்தன 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண T-20 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு பங்களிப்பு செய்திருந்த அதேவேளை T-20 போட்டிகளில் இதுவரை மொத்தமாக 5,455 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

மஹேலவின் விலகல் குறித்து கருத்து தெரிவித்த லங்காஷயர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் களேன் சப்பல், மஹேல ஜயவர்தன நெட்தொவெஸ்ட் T-20 தொடரிலிருந்து விலகியுள்ளமை மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது மஹேல ஜெயவர்தனவுக்குப் பதிலாக வேறொரு வீரரை இணைத்துக் கொள்வதற்கு மீளாய்வு செய்து வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இது குறித்து பேசிய மஹேல, “ஏற்கனவே திட்டமிட்டபடி நெட்வெஸ்ட் T-20 போட்டிகளில், லங்காஷயர் அணியிலிருந்து எதிர்பாராத காரணங்களால் விலக நேர்ந்தமை மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது. எனினும் இந்த தொடரில், லங்காஷயர் அணியின் வெற்றிக்காக வாழ்த்துகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற நெட்வெஸ்ட் T-20 போட்டிகளின் போது சமர்செட் அணிக்காக விளையாடிய மஹேல ஜெயவர்தன 10 போட்டிகளில் துடுப்பாடி மொத்தமாக 239 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.