19 வயதின் கீழ் தேசிய அணிக்கான தெரிவு நாளை ஆரம்பம்

1117

2018ஆம் ஆண்டு இடம்பெறும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் இவ்வருடம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான இலங்கை தேசிய அணியை தெரிவு செய்வதற்கான வீரர்கள் தெரிவு எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன.

அதற்கமைய இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த வீரர்கள் தெரிவு இம்மாதம் (ஜுன்) 13ஆம் (நாளை) மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு சிடி கால்பந்து மைதானத்தில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தகுதிக்காண் போட்டிகளில் இலங்கை குழு B யில்

எதிர்வரும் 2018ஆம் அண்டு இடம்பெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய சம்பியன்ஷிப்..

குறித்த அணித் தெரிவில் 1999ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த வீரர்கள் நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் கலந்து கொள்ளலாம். இத் தெரிவில் பங்கு கொள்ள வேண்டிய பிரதேசங்களை இலங்கை கால்பந்து சம்மேளனம் இரண்டு நாட்களுக்கு பிரித்து வழங்கியுள்ளது. 

ஜுன் மாதம் 13ஆம் திகதி காலை 7.30 மணி

கொழும்பு சிடி கால்பந்து  மைதானம்

வட மாகாணம் – யாழ்ப்பாணம். கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, வலிகாமம், மன்னார், ஆணையிரவு

கிழக்கு மாகாணம் – திருகோணமலை.  மூதூர், கிண்ணியா, குச்சவெளி, மட்டக்களப்பு, அம்பாறை, காத்தாங்குடி

மத்திய மாகாணம் – கண்டி, கம்பளை, நாவலப்பிடிய, மாத்தளை, பதுளை,  பண்டாரவளை, ட்டன், நுவரெலியா, பிபிலை, மொனராகலை

வட மத்திய மற்றும் வட மேல் மாகாணம் – அநுராதபுரம், பொலன்றுவை, புத்தளம், சிலாபம், வெண்ணப்புவ, குருநாகல், கேகாலை

16 வயதுக்கு உட்பட்ட இலங்கை கால்பந்து அணிக்கான தெரிவு இவ்வாரம்

2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய கால்பந்து சம்மேளத்தின் (AFC) 16 வயதுக்கு உட்பட்ட…

ஜுன் மாதம் 20ஆம் திகதி காலை 7.30 மணி

கொழும்பு சிடி கால்பந்து மைதானம் 

தென் மாகாணம் – அம்பலாங்கொடை.  காலி,  மாத்தறை,  அம்பாந்தொட்டை,  கதிர்காமம், தங்காலை, அவிசாவளை, இரத்தினபுரி

மேல் மாகாணம் – நீர்கொழும்பு, ஜாஎல, கந்தானை, வத்தளை, கம்பஹா, களனி, கிரிபத்கொடை, கொழும்பு, கோட்டை, ரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்தறை, பேருவளை

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெறவுள்ள குறித்த தகுதிகாண் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி ஏனைய தெற்காசிய நாடுகளான மாலைதீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளோடு குழு B யில் இடம்பிடித்துள்ளது. இக்குழுவில் உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளோடு போட்டியை நடாத்தும் மலேசியாவும் அங்கம் வகிக்கின்றது.  

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான சம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுப் போட்டிகள் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 8ஆம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.