இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சு, களத் தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் என்பன காரணமாக அவர்கள் உலக தர வரிசையில் முதலிடத்திலிருந்த தென்னாபிரிக்க அணியை 72 பந்துகள் எஞ்சிய நிலையில் எட்டு விக்கெட்டுகளால் வெற்றியீட்டி சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளனர்.
சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள சவால்கள்
ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல்..
லண்டன், கேன்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருந்தது. இதில் வெற்றி பெறும் அணி, அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகும் என்ற தீர்மானம் மிக்க நிலையில் இரு அணியினரும் களமிறங்கினர்.
நாணய சுழற்சியில், வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராத் கோலி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தார். அந்த வகையில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்க ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஹசிம் அம்லா மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோர் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்களை பெற முயன்றனர். எனினும் அபாரமாக பந்து வீசிய இந்திய பந்து வீச்சாளர்களாகிய புவனேஸ்வர் குமார் மற்றும் ஜாஸ்ப்ரிந்த் பும்ரா ஆகியோர் தென்னாபிரிக்க அணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்தி அம்லா மற்றும் டி கொக்கிக்கு அழுத்தம் கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்காக 76 ஓட்டங்கள் என்ற சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட நிலையில், 35 ஓட்டங்களை பெற்றிருந்த ஹசிம் அம்லா ரவிச்சந்திரன் அஷ்வினின் பந்து வீச்சில் டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டு ப்ளெசிஸ், டி கொக்குடன் இணைந்து கொண்ட அதேவேளை, இந்திய அணியின் அதிரடி பந்து வீச்சுக்கு மத்தியில் ஓட்டங்களை வேகமாக குவிக்க முயன்றனர்.
[rev_slider ct17-dsccricket]
எனினும், 72 பந்துகளை எதிர்கொண்ட டி கொக் நான்கு பௌண்டரிகள் உள்ளடங்கலாக 53 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஜடேஜாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார். அதனையடுத்து உத்வேகம் கொண்ட இந்திய அணி களத் தடுப்பு மற்றும் தொடர்ச்சியான அதிரடி பந்து வீச்சு மாற்றங்களினால் தென்னாபிரிக்கா அணிக்கு அதிகமான அழுத்தத்தினை பிரயோகித்து விக்கெட்டுகளை வீழ்த்த ஆரம்பித்தது.
திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கப்பட்டதா? உண்மைச் சம்பவம் இதுதான்
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை..
இந்திய அணியின் சிறந்த களத் தடுப்புக்கு மத்தியில் ஓட்டங்களை பெறுவதற்கு தத்தளித்த தென்னாபிரிக்க அணி விக்கெட்டுகளுகிடையே ஓட்டங்களை பெற முயன்ற போது டி வில்லியர்ஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரை ரன் அவுட் மூலம் பறிகொடுத்தது. டி வில்லியர்ஸ் 16 ஓட்டங்களுக்கும், டேவிட் மில்லர் 1 ஓட்டத்துக்கும் பரிதாபமாக தமது விக்கெட்டுகளை இந்திய அணியின் சிறந்த களத் தடுப்பின் மூலம் பறிகொடுத்தனர். இது இந்த முக்கிய போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு பெரிய இழப்பாகவே இருந்தது.
அதனையடுத்து களமிறங்கிய மத்திய மற்றும் பின் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் அதிரடி பந்து வீச்சில் ஒற்றை இலக்கங்களுடன் வெளியேறினர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் போராடிய ஜேபி டுமினி 41 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 20 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். அதிரடியாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் மற்றும் ஜாஸ்ப்ரிந்த் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதனையடுத்து இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 23 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட நிலையில், 12 ஓட்டங்களை பெற்றிருந்த ரோஹித் ஷர்மா, மோர்னே மோர்கலின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் குயிண்டன் டி கொக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும், அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராத் கோலி, ஷிகர் தவானுடன் இணைந்து நிதானமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். இரண்டாவது விக்கெட்டுக்காக இவ்விருவரும் 128 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் ஒட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
இந்திய அணி வெற்றி இலக்கை அண்மித்து வரும் வேளை வேகமாக ஓட்டங்களை குவிக்க முயன்ற ஷிகர் தவான் 78 ஓட்டங்களுடன் இம்ரான் தாஹிரின் பந்து வீச்சில் டு ப்ளெசியிடம் பிடி கொடுத்து ஓய்வறை திரும்பினார்.
சம்பியன்ஸ் கிண்ணத்திலிருந்து அவுஸ்திரேலிய அணியை வெளியேற்றிய இங்கிலாந்து
சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான அரையிறுதிப் போட்டி வாய்ப்பை தக்கவைக்க..
அதனைத் தொடர்ந்து விராத் கோலியுடன் இணைந்து கொண்ட யுவ்ராஜ் சிங் இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல், முறையே 76 மற்றும் 23 ஓட்டங்களுடன் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அதேநேரம், தென்னாபிரிக்க அணி சார்பாக இம்ரான் தாஹிர் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இந்த தோல்வியின் காரணமாக, வழமை போன்றே முக்கியமான போட்டிகளின்போது கோட்டை விட்டு உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து வெளியேறும் நிலை இந்தத் தொடரிலும் தென்னாபிரிக்காவுக்கு ஏற்பட்டது.
தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகக்கூடிய தீர்மானம்மிக்க மற்றொரு போட்டி கார்டிப்பில் இன்றைய தினம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
தென்னாபிரிக்கா: 191/10 (44.3 ஓவர்கள்) – குயிண்டன் டி கொக் 53, டு ப்லெசிஸ் 36, ஹசிம் அம்லா 35, ஜேபி டுமினி 20, புவனேஸ்வர் குமார் 23/2, ஜாஸ்ப்ரிந்த் பும்ரா 28/2
இந்தியா: 193/1 (38 ஓவர்கள்) – ஷிகர் தவான் 78, விராத் கோலி 76, யுவ்ராஜ் சிங் 23, ரோஹித் ஷர்மா 12, இம்ரான் தஹிர் 37/1, மோர்னே மோர்கல் 38/1
போட்டியின் முடிவு : இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி