பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் சிக்ஸர் மழை பொழிந்த போட்டியாக நேற்றைய போட்டி அமைந்திருந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.
ஐயரின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஆறுதல் வெற்றி பெற்றது டெல்லி அணி
பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம்..
அனைவரதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக மார்ட்டின் குப்தில், சகா ஆகியோர் களம் இறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குப்தில் 18 பந்துகளில் 36 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மெக்ஸ்வெல் அசுர வேகத்தில் ஓட்டங்களை குவித்தார். அவர் 21 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 47 ஓட்டங்களை குவித்தார்.
ஒருபுறம் முக்கியமான இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சகா தொடர்ந்து அதிரடி காட்டினார். அவருக்குத் துணையாக ஷோன் மார்ஷ் 16 பந்தில் 25 ஓட்டங்களையும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 13 பந்துகளில் 19 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
சகா 55 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் இறுதிவரை ஆட்டமிழப்பின்றி 93 ஓட்டங்களைக் குவித்தார். இதன் காரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 230 ஓட்டங்களைக் குவித்தது. மும்பை அணி சார்பில் மெக்கிளெனகன் 4 ஓவரில் 54 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 231 என்ற கடின இலக்கை துரத்திய மும்பை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சிம்மன்ஸ் மற்றும் பி.ஏ. படேல் ஜோடி இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிம்மன்ஸ் 32 பந்துகளில் 59 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பி.ஏ. படேல் 23 பந்துகளில் 38 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரானா 12 ஓட்டங்களுடனும், ரோகித் ஷர்மா 5 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழக்க, பொல்லார்ட், ஹர்பஜன் ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் பொல்லார்ட் ஆட்டத்தை தொடர்ந்தார்.
எம்மை எந்த அணியும் தொடரிலிருந்து வெளியேற்றலாம் : மாலிங்க
சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ICC), பலத்த எதிர்பார்ப்புகளுடன்..
கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஒரு சிக்சர் மட்டும் விளாசிய பொல்லார்ட், அடுத்தடுத்த பந்துகளில் ஓட்டங்களை குவிக்க தடுமாறினார். இதன் காரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பிளேஒஃப் சுற்றுக்கான வாய்பினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிகரித்துக்கொண்டாலும். அடுத்த போட்டியிலும் வெற்றிபெற வேண்டிய இக்கட்டான சுழலில் காணப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 230/3 (20) – விருத்திமான் சஹா 93(47), மெக்ஸ்வெல் 47(21), குப்டில் 36(18)
மும்பை இந்தியன்ஸ் 223/6 (20) – பொலார்ட் 50(24), சிமன்ஸ் 59(32), பாண்டயா 30(13)